"ஒரு நிமிடம் 2 டிரோன்கள்.." அமெரிக்க உளவு துறை அலுவலகத்தை காலி செய்த ஈரான்! உச்சக்கட்ட பதற்றம்
ரியாத்: சவுதியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை ஈரான் குறிவைத்துத் தாக்கியுள்ளது. மேலும், அங்கு அமெரிக்க உளவுத் துறையான சிஐஏ ஆபீஸ் ஒன்று இயங்கி வந்த நிலையில், அதையும் மிக மோசமாகத் தாக்கியுள்ளது. வளைகுடா போர் ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடரும் நிலையில், ஈரான் நடத்திய இந்த தாக்குதல் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
மத்திய கிழக்கில் வெடித்துள்ள மோதல் ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த போர் தற்போதைக்கு முடிவுக்கு வருவது போலத் தெரியவில்லை. அமெரிக்கா என்ன தான் போரை நிறுத்த ஈரானுக்கு பிரஷர் போட்டாலும், ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் அங்கு உச்சக்கட்ட பதற்றமே நிலவுகிறது.

ஈரான் தாக்குதல்
இந்தச் சூழலில் தான் நேற்று மார்ச் 3ம் தேதி நள்ளிரவில் சவுதியில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. ஒரு நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து தாக்கிய இரு டிரோன்கள் தூதரகத்தைத் தாக்கியது. உள்ளே இருந்த அமெரிக்க உளவுத் துறை அலுவலகமும் இதில் தாக்கப்பட்டது. ஈரானின் இந்த தாக்குதல் தொடர்பாகவும் ஈரான் எப்படி இதைச் சாத்தியமாக்கியது என்பது குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளது.
என்ன நடந்தது
அதாவது அதிகாலை 1:30 மணிக்குச் சவுதியின் ஏர் டிஃபென்ஸ்களை தாண்டி முதல் ட்ரோன் தாக்கி இருக்கிறது. அது ஒரு மிகப் பெரிய துளையை ஏற்படுத்தியது. சரியாக அடுத்த 60 நொடிகளுக்குள் இரண்டாவது டிரோன் வந்தது. அது முதல் டிரோன் உருவாக்கிய துளைக்குள் நேராகச் சென்று வெடித்தது. ஈரான் நடத்திய இந்த தாக்குதலில்.. ரியாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மூன்று தளங்கள் கடுமையாக்க சேதமடைந்தது. அங்கு உள்ள அமெரிக்க உளவுத் துறையான சிஐஏ அலுவலகம் இருந்த சூழலில் அதுவும் தாக்கப்பட்டது.
ரியாத்தின் டிப்ளமாடிக் க்வார்டருக்கு அருகில் இருந்த தூதரக வளாகத்தைத் தான் டிரோன்கள் தாக்கியுள்ளன. ஒரு நிமிடத்திற்குப் பிறகு, இரண்டாவது ட்ரோன் அதே பாதையைப் பின்தொடர்ந்து உள்ளே தாக்கியுள்ளது.. அமெரிக்கச் சொத்து மீது ஈரான் நடத்திய மிக முக்கியமான ஒரு தாக்குதலாகவே இது பார்க்கப்படுகிறது.
நேர் முரண் கருத்துகள்
அதேநேரம் இதனால் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை எனச் சவுதி பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. சேதம் மிகக் குறைவாகவே ஏற்பட்டதாகவும் தீ சிறியளவிலேயே ஏற்பட்டதாகவும் சவுதி கூறியுள்ளது. சவுதி இப்படிச் சொன்னாலும் களத்தில் நிலைமை வேறு விதமாக இருந்ததாகப் பிரபல அமெரிக்கச் செய்தி நிறுவனமான வால் ஸ்ட்ரீட் ஜர்னல் ரிப்போர்ட் தெரிவிக்கிறது.
இந்த தாக்குதலில் ஏற்பட்ட தீ பல மணி நேரம் நீடித்ததாக அங்கிருந்த அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், தூதரகத்தின் சில பகுதிகள் சரிசெய்ய முடியாத அளவுக்குச் சேதமடைந்தன என அமெரிக்க அதிகாரிகள் கூறியதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் கூறியுள்ளது. மேலும், தூதரகத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியில் இருந்த சிஐஏ அலுவலகத்தையும் ஈரான் இதில் தாக்கியுள்ளது. நள்ளிரவில் இந்த தாக்குதல் நடந்ததால் ஓகே.. பகலில் இத்தாக்குதல் நடந்திருந்தால் அமெரிக்கர்கள் உயிரிழந்து இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
அமெரிக்காவுக்கு மெசேஜ்
எவ்வளவு பாதுகாப்பான இடத்தில் இருந்தாலும் அதை எங்களால் அடைய முடியும் என்ற மெசேஜ்ஜை அமெரிக்காவுக்கு அனுப்பவே ஈரான் இந்த தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது. சவுதியில் உள்ள அமெரிக்கத் தூதரகம், உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான அமெரிக்கத் தூதரகங்களைப் போலவே சவுதியையே வான் பாதுகாப்பிற்கு நம்பி இருக்கிறது. அவர்களிடம் சொந்தமாக ஏர் டிஃபென்ஸ் சிஸ்டம்கள் இல்லை. சவுதி ராணுவம் அருகிலுள்ள அரண்மனைக்கு பட்ரியாட் சிஸ்டத்தைப் பயன்படுத்துகிறது. இதன் மூலம் அமெரிக்கத் தூதரகத்தையும் கவர் செய்ய முடிகிறது.
கடந்த பிப்ரவரி 28ம் தேதி இந்த போர் தொடங்கிய சூழலில், ஈரான் படைகள் தொடர்ந்து துபாய், அபுதாபி, சவுதி, கத்தார், குவைத், உள்ளிட்ட பகுதிகள் மீதும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். இந்த டிரோன் தாக்குதல்களால் பெரியளவில் உயிரிழப்புகள் இல்லை என்றாலும் இது பல பில்லியன் டாலர் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications