சவுதிக்கு விழுந்த அடி! ஹார்முஸ் ஜலசந்திக்கு பதில் செங்கடல்.. அடிமடியில் கைவைத்த ஈரானால் ரூட் மாற்றம்
ரியாத்: சவுதி அரேபியாவின் (Saudi Arabia) முக்கிய தொழிலாக கச்சா எண்ணெய் ஏற்றுமதி உள்ளது. அதற்கு செக் வைக்கும் வகையில் ஈரான் ஹார்முஸ் ஜலசந்தி கடல் வழிப்பாதையை மூடியுள்ளது. இதனால் சவுதி அரேபியாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு சிக்கல் வந்துள்ளது. இந்நிலையில் தான் ஹார்முஸ் ஜலசந்திக்கு பதிலாக செங்கடல் வழியாக கச்சா எண்ணெய் வர்த்தகம் செய்ய சவுதி அரேபியா முடிவு செய்துள்ளது. இருப்பினும் அங்கும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போர் புரிந்து வருகின்றன. இதற்கு ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. அந்த வகையில் சவுதி அரேபியாவையும், ஈரான் தாக்கி வருகிறது.
சவுதி அரேபியாவில், அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடாக உள்ளது. அமெரிக்காவின் பிரின்ஸ் சுல்தான் விமானப்படை தளம் உள்ளது. இந்த இடத்தை குறிவைத்து ஈரான் தாக்கி உள்ளது. இது சவுதி மற்றும் அமெரிக்காவுக்கு பிரச்சனையாக மாறி உள்ளது.

சவுதி எண்ணெய் நிறுவனம்
அதுமட்டுமின்றி சவுதி அரேபியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஆலையான சவுதி அரோம்கோ நிறுவனம் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனால் அந்த ஆலை உற்பத்தியை நிறுத்தியுள்ளது. அதோடு, ஈரான் தனக்கு சொந்தமான ஹார்முஸ் ஜலசந்தி கடல் நீர்வழிப்பாதையை மூடுவதாக அறிவித்துள்ளது.
கப்பல் போக்குவரத்து பாதிப்பு
இஸ்ரேல் - அமெரிக்காவின் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி நீர்வழிப்பாதையை மூடுவதாகவும், மீறி இந்த வழிப்பாதையில் கப்பல்கள் வந்தால் தாக்குதல் நடத்துவதாகவும் அறிவித்துள்ளது. இதனால் வளைகுடா கடல் பகுதிகளில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கச்சா எண்ணெயில் முன்னிலை
குறிப்பாக கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத், பஹ்ரைன், ஈராக் உள்ளிட்ட நாடுகளுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நாடுகளில் அமெரிக்காவின் விமானப்படை தளம், கடற்படை தளங்கள் உள்ளதால் ஈரான் தொடர்ந்து தாக்கி வருகிறது. மேலும் கச்சா எண்ணெய் உற்பத்தியில் இந்த நாடுகள் முன்னிலையில் உள்ளன.
ஏற்றுமதியில் சிக்கல்
இந்த நாடுகளின் கச்சா எண்ணெய்கள் ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தி பாதை வழியாக தான் இந்தியா, சீனா உள்பட பிற ஆசிய நாடுகளுக்கு வரும். தற்போது ஈரான் அதனை மூடியுள்ளதால் அந்த நாடுகளின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நாடுகளுக்கு கச்சா எண்ணெய் தான் முக்கிய வருவாய் ஆதாரம். தற்போது ஈரான் அதனை முடக்கி உள்ளது.
செங்கடல் வழியாக...
இப்படியான சூழலில் தான் சவுதி அரேபியா மாற்று முடிவை எடுத்துள்ளது. அதாவது ஈரானின் ஹார்முஸ் ஜலசந்திக்கு பதில் செங்கடல் வழியாக கச்சா எண்ணெய் வர்த்தகம் செய்ய முடிவு செய்துள்ளது. அதிலும் ஒரு சிக்கல் உள்ளது.
செங்கடல் பகுதியில் ஏமனின் ஹவுதிகளின் ஆதிக்கம் உள்ளது. இந்த ஹவுதிகள் ஈரானின் ஆதரவாளர்களாக உள்ளன. செங்கடல் பகுதியில் செல்லு இஸ்ரேல், அமெரிக்க வர்த்தக கப்பல்களை குறிவைத்து ஹவுதிகள் தாக்கி வருகின்றன. இதற்கிடையே தான் சவுதி அரேபியா செங்கடல் வழியாக கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்ய முடிவெடுத்துள்ளது. எனவே ஹவுதிகளால் சவுதி அரேபியாவின் எண்ணெய் கப்பல்களுக்கும் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications