"பிச்சை எடுக்க தானே போறீங்க.." பாகிஸ்தானுக்கு எதிராக சாட்டையை சுழற்றிய சவுதி.. பெரிய அவமானம்!
ரியாத்: மத்தியக் கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் பாகிஸ்தான் நாட்டினர், அங்குப் பிச்சை எடுப்பதையே தொழிலாகச் செய்து வருகிறார்களாம். இது குறித்தது சவுதி அரேபியா தொடர்ந்து பலமுறை எச்சரித்தும் பாகிஸ்தான் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இதனால் சவுதியே இதுபோல பிச்சை எடுப்போர் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்துள்ளது.
இந்தியா, இலங்கை உட்படத் தெற்காசிய நாடுகளில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் அதிகப்படியான மக்கள் மத்தியக் கிழக்கு நாடுகளுக்குச் செல்கிறார்கள். அதேபோல பாகிஸ்தானில் இருந்தும் இந்த நாடுகளுக்குச் செல்கிறார்கள். இருப்பினும், அங்குச் செல்லும் பாகிஸ்தானியர்கள் எந்தவொரு வேலையும் செய்வதில்லை. மாறாகப் பிச்சை எடுப்பதையே ஒரு வேலையாகச் செய்கிறார்களாம்.

நாடுகடத்தல்
இதனால் சவுதி அரேபியா, ஐக்கிய அமீரகம் ஆகிய நாடுகள் இந்த விவகாரத்தில் பாகிஸ்தானியர்கள் மீதான கண்காணிப்பைக் கடுமையாக்கியுள்ளன. குறிப்பாக சவுதியில் பாகிஸ்தான் நாட்டினர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தங்கள் நாட்டில் பிச்சை எடுத்ததற்காக 56,000 பாகிஸ்தானியர்களை சவுதி நாடு கடத்தியுள்ளது. அதேபோல ஐக்கிய அமீரகமும் பாகிஸ்தானியர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதால், கடுமையான விசா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
மத்தியக் கிழக்கு நாடுகளுக்கு இதுபோன்ற செயல்களுக்குப் பாகிஸ்தானியர்கள் செல்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது தொடர்பான டேட்டாவை பாகிஸ்தான் மத்திய புலனாய்வு முகமை அளித்துள்ளது. அந்த டேட்டாவை பார்த்தால் இந்தப் பிரச்சினை எந்தளவுக்குத் தீவிரமாக இருக்கிறது என்பது நமக்குப் புரியும். கடந்த 2025ல் மட்டும் மத்திய கிழக்கு நாடுகளில் பிச்சை எடுக்கச் செல்ல இருந்த 66,154 பேரை பாகிஸ்தான் அதிகாரிகள் தங்கள் ஏர்போர்ட்டில் வைத்து கைது செய்தனர்.
பாகிஸ்தான் அதிகாரிகள்
மத்திய கிழக்கு நாடுகளுக்கு இதுபோல பிச்சை எடுப்பதற்காகவே செல்வது தங்கள் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்துவதாக பாகிஸ்தானின் எஃப்.ஐஏ இயக்குநர் ஜெனரல் ரிஃபத் முக்தார் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "பிச்சை எடுக்கவே பலர் இதுபோல வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள். இவர்கள் பாகிஸ்தான் நற்பெயருக்கே கலங்கத்தை ஏற்படுத்துகிறார்கள்.
மத்திய கிழக்கு நாடுகளுக்கு மட்டும் சென்று அவர்கள் இதுபோன்ற செயல்களைச் செய்வதில்லை. மாறாக ஆப்பிரிக்கா, ஐரோப்பா, கம்போடியா, தாய்லாந்து எனப் பல்வேறு நாடுகளுக்கும் சுற்றுலா விசாவில் போய் இதுபோன்ற காரியங்களைச் செய்கிறார்கள். கேங் போலவே அவர்கள் செயல்படுகிறார்கள். அவர்களைத் தடுக்கக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்" என்றார்.
கடும் நடவடிக்கை
இந்த ஆண்டு மட்டும் பிச்சை எடுத்த குற்றச்சாட்டில் 24,000 பாகிஸ்தானியர்களை சவுதி அரேபியா நாடு கடத்தியது. ஐக்கிய அமீரகத்தில் துபாயில் இருந்து சுமார் 6,000 பேரும், அஜர்பைஜானில் இருந்து சுமார் 2,500 பேரும் பிச்சை எடுத்த குற்றச்சாட்டில் நாடுகடத்தப்பட்டுள்ளனர். இதையும் பாகிஸ்தான் தரப்பே உறுதி செய்துள்ளது. பிச்சை எடுக்கவே பாகிஸ்தானியர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வது எந்தளவுக்குப் பெரிய பிரச்சினையாக மாறியிருக்கிறது என்பதையே இது காட்டுகின்றன.
கடந்த ஆண்டே சவுதி அரேபியா இந்த சிக்கல் குறித்து எச்சரித்திருந்தது. உம்ரா விசாவை தவறாகப் பயன்படுத்தி சவுதிக்குச் செல்லும் பாகிஸ்தானியர்கள், அங்கு மெக்கா, மதீனா உள்ளிட்ட இடங்களில் பிச்சை எடுப்பதாகவும் அதைத் தடுக்கக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாகிஸ்தானை சவுதி வலியுறுத்தியது. கட்டுப்படுத்தத் தவறினால், உம்ரா மற்றும் ஹஜ் யாத்ரீகர்களுக்கும் விசா கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் பாகிஸ்தான் சவுதி எச்சரித்திருந்தது.
பிஸ்னஸாகவே மாறிடுச்சு
இது குறித்து பாகிஸ்தானைச் சேர்ந்த வழக்கறிஞர் ரஃபியா சகாரியா கூறுகையில், "இதுபோல பிச்சை எடுப்பது பாகிஸ்தானில் ஒரு தொழிலாகவே மாறிவிட்டது. இப்போது பாகிஸ்தானுக்குப் பலருக்கு வேலைவாய்ப்பைக் கொடுக்கும் தொழிலாகப் பிச்சைத் தொழில் மாறி இருக்கிறது. உள்நாட்டில் வெற்றிகரமாக இருந்ததால் இதை வெளிநாடுகளிலும் செயல்படுத்த ஆரம்பித்துவிட்டனர். சவுதியில் புனிதத் தளங்கள் அருகே பாகிஸ்தான் பிச்சைக்காரர்கள் வெளிநாட்டு யாத்ரீகர்களிடமும் பணம் கேட்டுத் தொந்தரவு செய்கின்றனர்" என்றார்.












Click it and Unblock the Notifications