Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈரானை தாக்கப்போகும் சவுதி? ‘ரெட்லைனை' தொடுவதால் கொந்தளிப்பு.. பற்றி எரியப்போகும் மத்திய கிழக்கு

Subscribe to Oneindia Tamil

ரியாத்: அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் தங்கள் மீது நடத்தும் போருக்காக ஈரான் அரபு நாடுகளை குறிவைத்து தாக்கி வருகிறது. குறிப்பாக சவுதி அரேபியா மீது ஏவுகணை, ட்ரோன் தாக்குதலை ஈரான் மேற்கொண்டு வருகிறது. தற்போது வரை சவுதி அரேபியா, ஈரானை திருப்பி தாக்கவில்லை. இப்படியான சூழலில் தான் 'ரெட்லைனை' தொடுவதால் விரைவில் சவுதி அரேபியா, அமெரிக்கா, இஸ்ரேலுடன் சேர்ந்து ஈரானை தாக்க தயாராகி வருவதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போர் புரிந்து வருகின்றன. இதற்கு ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. அந்த வகையில் சவுதி அரேபியாவையும், ஈரான் தாக்கி வருகிறது.

saudi-arabia-likely-to-attack-on-iran-after-tehran-strikes-on-its-infrastructure

சவுதி அரேபியாவில் அமெரிக்காவின் பிரின்ஸ் சுல்தான் விமானப்படை தளம் உள்ளது. அதுமட்டுமின்றி அமெரிக்காவும், சவுதி அரேபியாவும் நட்பு நாடுகளாக உள்ளன. ஈரானுக்கும், சவுதி அரேபியாவுக்கும் இடையே மோதல் தொடர்ந்து வருகிறது.

சவுதிக்கு அடிமேல் அடி

இதனால் தான் ஈரான், சவுதி அரேபியாவை இந்த இடத்தை குறிவைத்துள்ளது. சவுதி அரேபியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஆலையான சவுதி அரோம்கோ மீது தாக்குதல் நடத்தி உள்ளது. அதுமட்டுமின்றி ஈரான் தனக்கு சொந்தமான ஹார்முஸ் ஜலசந்தி கடல் நீர்வழிப்பாதையை மூடுவதாக அறிவித்து சவுதி அரேபியாவின் கச்சா எண்ணெய் வர்த்தகத்துக்கு செக் வைத்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை மூடியுள்ளதால் சவுதி அரேபியா செங்கடல் வழியாக வர்த்தகத்தை தொடங்கும் என அறிவித்துள்ளது.

குடிநீர் விஷயத்தில் கைவைக்கும் ஈரான்

மேலும் நாளுக்கு நாள் ஈரானில் போர் தீவிரமாகி வருகிறது. ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் உள்ளிட்டவற்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் வரும் நாட்களில் சவுதி அரேபியாவில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களை ஈரான் குறிவைக்கலாம் என்று கூறப்படுகிறது. சவுதி அரேபியாவில் 75 சதவீத மக்களுக்கான குடிநீரை கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் தான் வழங்கி வருகின்றன. குறிப்பாக தலைநகர் ரியாத்தில் உள்ள மக்கள் இந்த சுத்திகரிப்பு தண்ணீரை தான் குடித்து வருகின்றனர். இதனை, ஈரான் தாக்கிவிடுமோ என சவுதி அரேபியா பதற்றத்தில் உள்ளது.

மக்கள் பாதிக்க வாய்ப்பு

சவுதி அரேபியாவை பொறுத்தவரை யாருடனும் சண்டைக்கு போவது கிடையாது. ஆனால் ஈரான் தற்போது சவுதி அரேபியாவின் 'ரெட்லைனை' தொடுகிறது. அதாவது சவுதி அரேபியாவின் கச்சா எண்ணெய் நிலையம், கடல்நீரை சுத்திகரிக்கும் நிலையம், விமானப்படை தளங்களை ஈரான் குறிவைத்துள்ளது. இந்த இடங்களை தொட்டால் சவுதி அரேபியாவின் பொருளாதாரம், மக்களின் வாழ்வாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்படும்.

போரில் என்ட்ரியாகும் சவுதி?

இதனால் சவுதி அரேபியா கடும் கோபமடைந்துள்ளது. நீண்டகாலமாக போரை விரும்பாமல் இருக்கும் சவுதி அரேபியா விரைவில் தனது நிலைப்பாட்டை போருக்கு என்ட்ரி கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் விரைவில் சவுதி அரேபியா, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் சேர்ந்து ஈரானை தாக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஒருவேளை சவுதி அரேபியா, ஈரானை தாக்கும் பட்சத்தில் அது மத்திய கிழக்கில் இன்னும் பெரிய போராக மாறும் என சர்வதேசஅரசியல் நோக்கர்கள் வார்னிங் செய்துள்ளனர்.

ஈரானுக்கு மெசேஜ் அனுப்பிய சவுதி

இதுபற்றி பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் மத்திய கிழக்கு நாடுகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வரும் பேராசிரியர் பெர்னார்ட் ஹைகெல் கூறுகையில், ''ஈரான், சவுதி அரேபியாவின் ரெட்லைனை தொட்டுள்ளது.

இதனால் சவுதி அரேபியாவின் நிலைப்பாடு முற்றிலுமாக மாறி உள்ளது. அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் மோதலின்போது சவுதி அரேபியா நடுநிலை வகிக்கும். இதனால் சவுதி அரேபியாவின் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என ஏற்கனவே சவுதி அரேபியா, ஈரானுக்கு மெசேஜ் அனுப்பியது.

ஏற்காத ஈரான்

ஆனால் ஈரான் அதனை ஏற்கவில்லை. இஸ்ரேல் அல்லது அமெரிக்காவால் தொடர்ந்து தாக்குதலை எதிர்கொண்டால் சவுதி அரேபியாவையும் விடமாட்டோம். தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் தெரிவித்தது. இதனால் கோபமாகி உள்ள சவுதி அரேபியா அமெரிக்க படைகளுடன் சேர்ந்து தாக்குவோம் என்று ஈரானை வார்னிங் செய்துள்ளது.

இப்போது ஈரானை தாக்கலாமா? என சவுதி அரேபியா பரிசீலனை செய்து வருகிறது'' என்றார். இதனால் ஈரானை, அமெரிக்காவுடன் சேர்ந்து சவுதி அரேபியா எப்போது வேண்டுமானாலும் தாக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது போரின் வீரியத்தை இன்னும் அதிகப்படுத்தும்.

நீண்ட மோதலாக மாறலாம்

இதுபற்றி அமெரிக்காவுக்கான சவுதி அரேபியாவின் முன்னாள் தூதர் மைக்கேல் ராட்னி கூறுகையில், ''தற்போது ஈரான் நடத்தும் தாக்குதல் சவுதி அரேபியாவை கோபப்படுத்தி இருக்கலாம். மேலும் ஈரான் நேரடியாகவே, மறைமுகமாக சவுதியை போருக்கு அழைக்கும் வகையில் இந்த தாக்குதல்கள் உள்ளது. இருப்பினும் பதிலடி கொடுக்கும் விஷயத்தில் சவுதி அரேபியா மிகவும் எச்சரிக்கையாக இருப்பார்கள்.

ஏனென்றால் சவுதி தாக்கும்போது அது மொத்த பிராந்தியத்தையும் பதற்றத்தை அதிகரிக்கும். அதோடு சவுதி மக்களை பாதிக்க வாய்ப்புள்ளது. மேலும் இந்த மோதல் சவுதியின் 'விஷன் 2030' போன்ற லட்சியத் திட்டங்களுக்கு அச்சுறுத்தலாக அமைகின்றன. மேலும் ஈரான் அண்டை நாடாக உள்ளது. இது சவுதிக்கு பிரச்சனையாக மாறலாம். இந்த போருக்கும் பிறகும் கூட இருநாடுகளும் மோதும் சூழல் வரலாம். இதனால் சவுதி அரேபியா யோசித்து தான் களமிறங்கும்'' என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+