இந்தியாவுக்கு பேராபத்து! கைகோர்க்கும் சவுதி - பாகிஸ்தான் - துருக்கி! முஸ்லிம் நாடுகள் பகீர் திட்டம்
ரியாத்: நம் நாட்டுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பகை உள்ளது. இப்படியான சூழலில் தான் சவுதி அரேபியா - பாகிஸ்தான் - துருக்கி இணைந்து பெரிய பிளானை போட்டுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை தொடங்கி உள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தான்.. பயங்கரவாதிகளின் தாய்நாடாக இருந்து வருகிறது. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதுக்கும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பெரும் அச்சுறுத்தலாக உள்ளன. கடந்த ஆண்டு தான் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பஹல்காமில் நுழைந்து 26 அப்பாவி மக்களை சுட்டு கொன்றனர். அதன்பிறகு நம் நாடு பாகிஸ்தானுக்கு ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் மூலமாக பதிலடி கொடுத்தது.

அதன்பிறகு தான் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் சவுதி அரேபியா சென்றார். தலைநகர் ரியாத்தில் அந்த நாட்டின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்து பேசினார். இருநாடுகள் இடையே பரஸ்பர பாதுகாப்பு சார்ந்த ஒப்பந்தம் (Strategic Mutual Defence Agreement) கையழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தில் தற்போது துருக்கியும் இணைய முயற்சிக்கிறது. இதுதொடர்பாக 3 நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக ‛ப்ளூம்பெர்க்' நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், ‛‛துருக்கி, சவுதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தைகள் மேம்பட்ட நிலையில் உள்ளன. ஒப்பந்தம் ஏற்பட சாத்தியமான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இது மத்திய கிழக்கில் வளர்ந்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் ஒரு புதிய ராணுவ கூட்டணிக்கான கதவுகளை திறக்கும்.
இது ராணுவ கூட்டணியை மையப்படுத்தி உள்ளது. துருக்கி, சவுதி அரேபியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் ஏதாவது ஒன்றில் யாராவது தாக்குதல் நடத்தினால் அதனை தங்கள் நாட்டின் மீதான தாக்குதலாக கருதி உடனடியாக 3 நாடுகளும் சேர்ந்து பதிலடி கொடுக்கும். மேலும் இது ‛இஸ்லாமிய நேட்டோ' அமைப்பு உருவாக்குவதற்கான தொடக்க புள்ளியாக கூட அமையலாம்'' என்று கூறப்பட்டுள்ளது.
இது மிகவும் ஆபத்தானது என்கின்றனர் சர்வதேச நிபுணர்கள். ஏனென்றால் சவுதி அரேபியா பொருளாதாரத்தில் நல்ல நிலையில் உள்ளது. பாகிஸ்தானிடம் அணுஆயுதம் உள்ளது. துருக்கி ராணுவ துறையில் அதிநவீன ஆயுதங்களை தயாரிக்கிறது. குறிப்பாக ட்ரோன்கள், போர்க்கப்பல்கள் மற்றும் ஏவுகணை, அதிநவீன போர் விமானங்களை துருக்கி உற்பத்தி செய்து வருகிறது. இது சவுதி அரேபியா, பாகிஸ்தானுக்கு வலு சேர்க்கிறது. இதனால் இந்த 3 நாடுகளும் இணையும்போது அது பிற அண்டை நாடுகளுக்கு சிக்கலாக இருக்கும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதனால் பாகிஸ்தான் நம்மை சீண்டி நம்மிடம் அடிவாங்கும்போது துருக்கி களமிறங்கும் அபாயம் உள்ளது. ஏற்கனவே இருநாடுகளும் நல்ல நட்பில் உள்ளன. காஷ்மீர் விவகாரத்தில் துருக்கி நமக்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் உள்ளது. அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு நம் நாடு பாகிஸ்தானை ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் வழியாக தாக்கியபோது துருக்கி, பாகிஸ்தானுக்கு உதவியது. துருக்கி ஆயுதங்களை வழங்கியது.
அதுமட்டுமின்றி பாகிஸ்தானில் இருந்து நம் நாட்டுக்கு எதிராக ட்ரோன்களை இயக்கி தாக்குதல் நடத்தியது. துருக்கி தனது ட்ரோன் ஆபரேட்டர்களை பாகிஸ்தானுக்கு அனுப்பி செயல்பட வைத்தது. இப்படி நம் நாட்டை தாக்க துருக்கி, பாகிஸ்தானுக்கு மறைமுகமாக உதவிய நிலையில் இந்த ஒப்பந்தம் சாத்தியமாகும்போது வெளிப்படையாகவே நம்மை தாக்கும். அதுமட்டுமின்றி பாகிஸ்தானுக்கு நவீன TB2/Akinci ட்ரோன்கள், மறைமுகத் தாக்குதலுக்கு பெயர் பெற்ற Stealth Corvettes வகை போர்க்கப்பல்களை வழங்கலாம். இதனால் இந்த விஷயம் நம் நாட்டுக்கு பெரிய வார்னிங்காக பார்க்கப்படுகிறது.
முன்னதாக இந்த ஒப்பந்தம் சவுதி அரேபியா - பாகிஸ்தான் இடையே கையெழுத்தானபோது பெரியளவில் பேசும் பொருளானது. பாகிஸ்தானை நம் நாடு தாக்கினால் சவுதி அரேபியா நம்மை தாக்குமா? என்ற கேள்வி எழுந்தது. ஏனென்றால் சவுதி அரேபியாவுக்கும், நம் நாட்டுக்கும் இடையே நல்ல உறவு உள்ளது. குறிப்பாக வர்த்தக ரீதியாக நம் நாடும், சவுதியும் நெருக்கமாக செயல்பட்டு வருகின்றன. இதனால் பயங்கரவாதிகளை உற்பத்தி செய்யும் தேசமாக இருக்கும் பாகிஸ்தானுக்காக சவுதி அரேபியா நம்மை தாக்குமா? என்பது மில்லியன் டாலர் கேள்வியாக எழுந்தது.
அதற்கு சவுதி அரேபியா விளக்கம் அளித்தது. அந்த நாட்டின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‛‛ இந்த ஒப்பந்தம் என்பது குறிப்பிட்ட நாடுகளுக்கோ அல்லது குறிப்பிட்ட நிகழ்வுகளையோ மையப்படுத்தியது அல்ல. இந்தியாவுடன் எங்களின் உறவு நன்றாக உள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு வலுவானதாக இருக்கிறது. இந்த உறவை நாங்கள் தொடர்ந்து வளர்ப்போம். மேலும் எங்களால் முடிந்த அளவுக்கு பிராந்திய அமைதிக்கு பங்களிப்பு செய்ய முயற்சிப்போம்'' என்றார்.
இதன்மூலம் நம் நாட்டுடனான மோதலின்போது பாகிஸ்தான் பக்கம் நிற்போம். இந்தியாவை தாக்குவோம் என்பதை சவுதி அரேபியா மறைமுகமாக மறுத்து இருந்தது. ஆனால் துருக்கி அப்படியில்லை. அது பாகிஸ்தானுக்கு ஆதரவாக நிச்சயம் நம்நாட்டுக்கு எதிராக களமிறங்கும் என்பதால் இந்த விவகாரத்தில் நம் நாடு உடனே சுதாரிக்க வேண்டும் என்கின்றனர் சர்வதேச அரசியல் வல்லுநர்கள்.












Click it and Unblock the Notifications