சவுதியில் எங்கு பார்த்தாலும் பனிப்பொழிவு.. காஷ்மீர் போல ஜில் ஜில் கிளைமேட்! இதற்கு என்ன காரணம்!
ரியாத்: எப்போதும் வெப்பம் படுத்தி எடுக்கும் சவுதி அரேபியாவில் திடீரென மழையோடு சேர்த்து பனிப்பொழிவும் ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் வானிலை மாற்றத்தால் சவுதி மக்கள் பயங்கர சந்தோஷத்தில் இருக்கிறார்கள். சவுதியில் இப்போது என்ன நடக்கிறது. அங்குத் திடீரென வானிலை இந்தளவுக்கு மாறிப்போக என்ன காரணம் என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.!
சவுதி அரேபியா என்று சொன்னவுடனேயே நம்மில் பலருக்கும் அங்கிருக்கும் சுட்டெரிக்கும் வெப்பமும் பரந்த பாலைவனங்களுக்கும் தான் நினைவுக்கு வரும். ஆனால், இந்தாண்டு அங்குத் தலைகீழான ஒரு வானிலையே நிலவுகிறது. இந்தக் குளிர்காலம் அசாதாரணமாகவே சவுதியில் தொடங்கி இருக்கிறது. நாட்டின் பல பகுதிகளில் பனிப்பொழிவு, கனமழை என கிளைமேட் மொத்தமாக மாறியிருக்கிறது.

குளுகுளு கிளைமேட்
இந்த திடீர் குளுகுளு கிளைமேட் அங்குள்ள மக்களுக்குப் பெரும் ஆச்சரியத்தையே கொடுத்திருக்கிறது. அதேநேரம் இந்த திடீர் வானிலை மாற்றம் பல்வேறு கேள்விகளையும் எழுப்புவதாக அமைகிறது.
வடக்கு சவுதி அரேபியாவில் ஏற்பட்ட இந்த திடீர் பனிப்பொழிவு, தபூக் மாகாணத்தில் உள்ள மலைத்தொடர்களின் தோற்றத்தை முழுமையாக மாற்றியது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,600 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஜெபல் அல்-லாவ்ஸ் பகுதியிலுள்ள ட்ரோஜனா, லேசான மழையுடன் பனியால் மூடப்பட்டிருந்தது. இந்தப் பகுதியில் பனி எல்லாம் பெய்ததே இல்லையாம். எப்போதும் அதீத வெப்பத்தால் போராடிக் கொண்டு இருக்கும் இந்தப் பகுதியில் பனி பெய்துள்ளது பலருக்கும் ஆச்சரியத்தையே ஏற்படுத்தியுள்ளது.
ஜீரோவுக்கு கீழ் போன வெப்பம்
குறிப்பாகச் சில இடங்களில் அதிகாலை நேரங்களில் வெப்பம் ஜீரோ டிகிரி செல்சியஸுக்குக் கீழே கூட சரிந்திருக்கிறது. இந்த திடீர் குளிர் அலை, சவுதி அரேபியாவில் பல பகுதிகளிலும் பரவலான மழையையும் கொண்டு வந்தது. பிர் பின் ஹெர்மாஸ், அல்-ஐனா, அம்மார், அல்-உலா மாகாணம், சக்ரா மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் நல்ல மழை பெய்திருக்கிறது. திறந்தவெளிகளிலும் உயரமான பகுதிகளிலும் பனி உறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வானிலை மையம்
இந்த திடீர் வானிலை மாற்றம் தொடர்பாக சவுதியின் தேசிய வானிலை மைய செய்தித் தொடர்பாளர் ஹுசைன் அல்-கஹ்தானி கூறுகையில், "மத்திய மற்றும் வடக்குப் பகுதிகளுக்குள் நுழையும் குளிர்காற்று, மழை மேகங்களுடன் கலந்ததே இந்த திடீர் வானிலை மாற்றத்திற்குக் காரணம். இதனால் வடக்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் வெப்பநிலை தொடர்ந்து குறைவாகவே இருக்கும். பள்ளத்தாக்கு பகுதிகளில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்படும் வாய்ப்புகளும் உள்ளன. எனவே, அந்த இடங்களுக்குச் செல்வதைத் தவிர்ப்பது நல்லது" என்றார்.
பனியால் மூடப்பட்ட சவுதி மலைகளின் படங்களும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் டிரெண்டானது. இந்த அழகிய காட்சிகளைக் காண அல்-மஜ்மா மற்றும் அல்-கட் பகுதிகளில் மக்கள் திரண்டனர். மேலும், சீரற்ற வானிலை நிலவியதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த வாரம் சவுதியில் பல்வேறு நகரங்களிலும் பள்ளிகள் ஆன்லைன் முறையில் மாற்றப்பட்டன.
என்ன சிக்கல்!
சூடான இடத்தில் மழையும் பனியும் பெய்தால் வெப்பம் குறையும். இது நல்லது தானே எனப் பலரும் நினைக்கலாம். ஆனால், வெப்பம் மற்றும் வறட்சியில் ஒரு பகுதி பல காலம் இருக்கும்போது அந்த இடம் அதற்கேற்றார் போல மாற்றி அமைக்கப்பட்டிருக்கும். அங்குள்ள மக்களும் வெப்பத்திற்குப் பழக்கப்பட்டு இருப்பார்கள். அப்படியிருக்கும்போது அங்குத் திடீரென வானிலை மாற்றம் ஏற்பட்டு வெப்ப நிலை அதிகரிக்கும்போது மிக மோசமான விளைவுகள் ஏற்படும். இதன் காரணமாகவே சவுதியில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் மழையும் பனிப்பொழிவும் பலருக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம்












Click it and Unblock the Notifications