2016-2021, 5 ஆண்டுகளில் இணையவழி வங்கி பரிவர்த்தனையில் ரூ.846.97 கோடி முறைகேடு: மத்திய நிதி அமைச்சகம்
2016 முதல் 2021 வரையிலான நிதி ஆண்டுகளில் ஏ.டி.எம், கிரெடிட் கார்டு மற்றும் இணையவழி வங்கி பரிவர்த்தனையின் போது 846.97 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் மக்களவையில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஏடிஎம் மற்றும் இணையவழி வங்கி பரிவர்த்தனையின் போது முறைகேடுகள் நடைபெற்றுள்ளதா? என்றும் அதன் மொத்த மதிப்பு எவ்வளவு என குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று மக்களவையில் உறுப்பினர் ஒருவர் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள மத்திய நிதித்துறை அமைச்சகம், "நாடுமுழுவதும், 2016-17ம் நிதி ஆண்டில் 45.56 கோடி ரூபாய் அளவுக்கு ஏ.டி.எம், கிரெடிட் கார்டு, இணையவழி வங்கி பண பரிவர்த்தனையின் போது முறைகேடு நடைபெற்று உள்ளது. இதேபோல், 2017-18 ம் ஆண்டில் 176.14 கோடி ரூபாயும், 2018-19ம் ஆண்டில் 177.88 கோடி ரூபாயும், 2019-20 ஆண்டில் 247.18 கோடி ரூபாயும் மற்றும் 2020-21 நிதி ஆண்டில் 200.21 கோடி ரூபாயும் முறைகேடு நடந்துள்ளது.
2016-2021 காலகட்ட நிதி ஆண்டுகளில் ஏ.டி.எம், கிரெடிட் கார்டு, இணையவழி வங்கி பரிவர்த்தனையின் போது மொத்தம் 846.97 கோடி ரூபாய் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை 2016-17ம் நிதி ஆண்டில் 540 ஏ.டி.எம் மற்றும் இணையவழி வங்கி பரிவர்த்தனை முறைகேடு நடைபெற்றுள்ளது. இதன் மொத்த மதிப்பு 6.10 கோடி ஆகும். இதேபோல், 2017-18 ஆம் நிதி ஆண்டில் 4,082 ஏ.டி.எம், கிரெடிட் கார்டு, இணையவழி வங்கி பணபரிவர்த்தனை முறைகேடு நடைபெற்றுள்ளது எனவும், இதன் மொத்த மதிப்பு 51.01 கோடி ஆகும்;
இதேபோல் 2018-2019ம் நிதி ஆண்டில் 5,621 ஏ.டி.எம் மற்றும் இணையவழி வங்கி பரிவர்த்தனை முறைகேடு நடைபெற்றுள்ளது, இதன் மொத்த மதிப்பு 25.62 கோடி என்றும் 2019-2020 நிதி ஆண்டில் 7,461 ஏ.டி.எம், கிரடிட் கார்டு, இணையவழி வங்கி பரிவர்த்தனை முறைகேடு நடைபெற்றுள்ளது; இதன் மொத்த மதிப்பு 30.88 கோடி என மத்திய நிதி அமைச்சகம் மக்களவையில் தெரிவித்துள்ளது.
மேலும், 2020-2021 நிதி ஆண்டில் 5,659 ஏ.டி.எம் மற்றும் இணையவழி வங்கி பரிவர்த்தனை முறைகேடு நடைபெற்றுள்ளது; இதன் மொத்த மதிப்பு 16.08 கோடி எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.
நாட்டில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 2016-2021 இடைப்பட்ட நிதி ஆண்டில் 97,367 ஏ.டி.எம் மற்றும் இணையவழி வங்கி பரிவர்த்தனை முறைகேடு நடைபெற்றுள்ளது என்றும் இதன் மொத்த மதிப்பு 256.45 கோடி ஆகும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications