சேலத்தில் உத்தர பிரதேச டூரிஸ்ட்களுடன் மோதல்.. தமிழக போலீசார் 3 பேர் அதிரடியாக சஸ்பெண்ட்!
சேலம்: சேலம் ஏற்காடு அருகே காரைக்காடு பகுதியில் சுற்றுலா வந்திருந்த உத்தர பிரதேசத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலருக்கும் அங்கு சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசாருக்குமிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 2 போலீசார் காயமடைந்திருந்தனர். இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக 3 போலீசாரை சஸ்பெண்ட் செய்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே காரைக்காடு பகுதியில் சோதனை சாவடி உள்ளது. தமிழ்நாடு கர்நாடக எல்லைப்பகுதியான மேட்டூர் காரைக்காடு சோதனை சாவடியில் வழக்கம்போல் கடந்த வெள்ளிக்கிழமை போலீசார் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த சோதனைச் சாவடியில் உத்தர பிரதேசத்தில் இருந்து 30க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் மாதேஸ்வரன் மலைக்கு செல்வதற்காக வருகை தந்திருந்தனர்.

அப்போது காரைக்காடு சோதனைச்சாவடியில் இருந்த காவல்துறையினர், உத்தர பிரதேச சுற்றுலாப்பயணிகள் வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த வாகனத்தில் சுற்றுலா பயணிகள் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மதுபோதையில் இருந்தவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து இந்த வாக்குவாதம் மோதலாக மாறியது.
போலீசாரும் மதுபோதையில் இருந்த சுற்றுலா பயணிகளும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதில் 2 போலீசார் காயமடைந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை செய்ய 2 குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் விசாரணையில், போலீசார் இந்த விவகாரத்தில் முறையாக கையாளவில்லை என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், காரைக்காடு மோதல் நிகழ்வை முறையாக கையாளாத காவலர்கள் 3 பேரை, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். காரைக்காடு சோதனைச்சாவடியில் பணியாற்றிய காவலர்கள் செந்தில்குமார், சுகவனேஸ்வர், முத்தரசன் ஆகிய 3 பேரையும் இடைநீக்கம் செய்து காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
மோதலில் 2 காவலர்கள், சுற்றுலா பயணிகள் காயமடைந்துள்ளனர். இந்த மோதல் சம்பவத்தை எப்படியாவது தடுத்திருக்க வேண்டும் என்றும், உயர் அதிகாரிகள் ஆரம்பத்திலேயே தகவல் தெரிவித்து இருக்க வேண்டும் என்று கூறப்பட்டது. 3 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications