சேலத்தில் கோர விபத்து.. லாரி மீது வேகமாக மோதிய வேன்! ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உடல் நசுங்கி பலி
சேலம்: சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே நின்றுகொண்டிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
சின்னா கவுடன்டணூர் நான்கு முனை சந்திப்பு ரோட்டில் இந்த விபத்து இன்று அதிகாலை நிகழ்ந்திருக்கிறது. பெருந்துறை பகுதியை சேர்ந்த செல்வராஜ், மஞ்சுளா, ஆறுமுகம், பழனிசாமி, பாப்பாத்தி மற்றும் ஒரு வயது குழந்தை சஞ்சனா ஆகிய 6 பேரும் வேனில் கொண்டலாம்பட்டியிலிருந்து பெருந்துறைக்கு சென்றுக்கொண்டிருந்துள்ளனர். அப்போது நான்கு முனை சந்திப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில் இந்த வேன் வேகமாக மோதியிருக்கிறது. இதில் சம்பவ இடத்திலேயே 6 பேரும் உயிரிழந்துள்ளனர்.

விபத்து குறித்து அறிந்த சங்ககிரி போலீசார் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் வேனில் இருந்தவர்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதால் அவர்களது சடலத்தை மட்டுமே மீட்க முடிந்துள்ளது. இவ்வாறு மீட்கப்பட்ட சடலங்கள் சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் சேலம் மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications