சகோதரர் கண் முன் பள்ளி பேருந்து மோதி 6 வயது சிறுமி பலி.. சேலத்தில் பரிதாபம்
Recommended Video

சேலம்: சேலத்தில் சகோதரர் கண் முன்னே பள்ளி வாகனம் மோதி 6 வயது சிறுமி உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் சூரமங்கலத்தில் அசாத் நகர் பகுதியில் வசித்து வருபவர் சையது ரஃபிக் ஜக்ரியா என்பவர் மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். சவூதியில் கூலி வேலை செய்து வரும் சையது ரஃபிக் ஜக்ரியா தற்போது 3 மாத விடுமுறையில் சேலம் வந்துள்ளார்.

பள்ளிச் சென்ற ஆயிஷா
இவரின் இளைய மகள் ஆயிஷா சுஹைனா அதே பகுதியில் இயங்கி வரும் தாரூஸ் சலாம் எனும் இஸ்லாமியர் பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல ஆயிஷாவின் சகோதரர் மாணவியை பள்ளியில் சென்று விட்டுள்ளார்.

சிறுமி மீது பேருந்து மோதல்
பள்ளி நுழைவு வாயிலில் இருந்து மாணவி வகுப்பறைக்கு மைதானத்தில் நடந்து சென்று கொண்டிருந்த போது அதே பள்ளியின் பேருந்து பின் நோக்கி வந்த போது எதிர்பாராத விதமாக சிறுமியின் மீது மோதியது.

விசாரணை
இதில் பேருந்தின் பின்புற சக்கரத்தில் சிக்கிக் கொண்ட சிறுமி சுஹைனா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சூரமங்கலம் காவல் நிலைய காவலர்கள் வழக்கு பதிவு செய்து ஓட்டுநரிமும் பள்ளி நிர்வாகிகளிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சகோதரர் கண் முன்
பள்ளி நிர்வாகத்தின் அலட்சியமே சிறுமி உயிரிழந்தற்கு காரணம் என்று உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் சகோதரர் கண்முன்னே சிறுமி சுஹைனா பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications