3-வது மனைவி லட்சுமி மீது சந்தேகம்.. தலையை வெட்டி கையில் வைத்திருந்த நாராயணன்.. அலறி ஓடிய மக்கள்
3வது மனைவியை கொன்ற நபர் கைது செய்யப்பட்டார்
சேலம்: 3-வது மனைவி லட்சுமி மீது கணவன் நாராயணனுக்கு சந்தேகம்.. நடந்த தகராறில் லட்சுமியின் தலையை துண்டித்து, கையில் பிடித்தபடி, வீட்டிற்குள் உட்கார்ந்திருந்த நாராயணனை பார்த்ததும் ஊர்மக்கள் அலறி அடித்து கொண்டு ஓடினர்!
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பகுதி வெள்ளாளகுண்டம்... இங்கு வசித்து வருபவர் நாராயணன் இவருக்கு வயது 84. கொத்தனாராக வேலை பார்க்கிறார்.
முதல் மனைவி இவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.. எப்பவுமே சண்டை போட்டதால் நாராயணனை பிரிந்து சென்றார்.. இதனால் 2வதாக ஒருவரை நாராயணன் திருமணம் செய்தார்.. ஆனால் அந்த மனைவியும் தற்கொலை செய்து கொண்டார்.

சந்தேகம்
இதையடுத்து 3-வதாக லட்சுமி என்பவரை திருமணம் செய்தார்.. இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். எல்லாருக்கும் கல்யாணமாகி விட்டது.. தனித்தனியாக வசித்து வருகிறார்கள்.. இப்போது லட்சுமிக்கு 65 வயதாகிறது. ஆனாலும் லட்சுமி மீது நாராயணனுக்கு ஓவர் சந்தேகம்.. தண்ணி அடிக்கம் பழக்கம் உள்ள நாராயணன் தினமும் குடித்துவிட்டு வந்து லட்சுமியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

சாப்பாடு
இந்நிலையில் கொஞ்ச நாளாக வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.. அதனால் வீட்டு செலவுக்கு பணமும் தரவில்லை.. இதனால் லட்சுமி சாப்பாடு செய்ய பணம் இல்லாமமல், மகன்களிடம் பணம் வாங்கி வந்து அதை வைத்து சமையல் செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் லட்சுமியிடம், நாராயணன் தண்ணி அடிக்க பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் தரமறுத்து மறுக்கவும் தகராறு நடந்துள்ளது.

கொலை
அந்த நேரத்தில் லட்சுமி மீது சந்தேகம் தொடர்பாகவும் பிரச்சனையை ஆரம்பித்தார் நாராயணன். இரவு 11.30 மணி வரைக்கும் இந்த சண்டை நீடித்தது.. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த நாராயணன், அங்கிருந்து கொடுவாளை எடுத்து லட்சுமியின் கழுத்தை அறுத்துவிட்டார்.. தலைவேறு.. உடல் வேறு என ரத்த வெள்ளத்தில் லட்சுமி உயிரிழந்தார். லட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிச்சென்று பார்த்தனர்..

விசாரணை
அப்போது அரிவாளால், லட்சுமியின் கழுத்தை அறுத்து, தலையை துண்டித்து, கையில் பிடித்தபடி, வீட்டிற்குள் நாராயணன் உட்கார்ந்திருந்தார். இதை அலறி அடித்து ஓடிவந்த மக்கள், உடனடியாக வாழப்பாடி போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று லட்சுமியின் உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்ய அனப்பி வைத்தனர்.. தொடர்ந்து மனைவியை வெட்டி கொன்ற நாராயணனை கைது செய்தனர்... பின்னர் வாக்குமூலத்தில் நாராயணன் சொன்னதாவது:

வாக்குமூலம்
"என் 3வது மனைவிதான் லட்சுமி.. கொஞ்ச நாளா வேலைக்கு போகல.. தண்ணி அடிக்காமலும் இருக்க முடியல.. அதற்காக பணம் கேட்தற்கு தர மறுத்துவிட்டாள்.. அவள் என்னை மதிப்பதே கைடயாது.. சாப்பாடு செய்தாலும் எனக்கு எடுத்து போடுவது இ.ல்லை.. எப்ப பார்த்தாலும் மரியாதை குறைவா பேசிட்டே இருப்பாரள்.. அதனாலதான் கொடுவாளால் தலையை தனியாக வெட்டி எடுத்துவிட்டேன்" என்றார்.
-
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications