சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம்
சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் முகூர்த்த நாட்களில் திருமணங்கள் அதிக அளவில் நடக்கும்.அந்த வகையில் வைகாசி மாத வளர்பிறை கடைசி முகூர்த்தம் என்பதால் நேற்று ஒரே நாளில் மட்டும் இந்த கோவிலில் 90 திருமணங்கள் நடைபெற்றன. இதனால் கோவில் வளாகத்தில் திரும்பிய திசை எங்கும் மணமக்கள் கூட்டம் அலைமோதியது. மணமக்கள் அமர இடம் பிடிக்க பாய் போட்டு போட்டா போட்டி ஏற்பட்டது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பேளூர் அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோவில் மிகவும் வரலாற்றுச் சிறப்புமிக்க, பழமையான ஒரு சிவன் கோவில் ஆகும். மனிதர்களால் செதுக்கப்படாமல், இயற்கையாகவே பூமியிலிருந்து உருவான சிவலிங்கம் இருப்பதால், இக்கோவிலுக்கு "தான்தோன்றீஸ்வரர்" என்று பெயர் வந்தது. இக்கோவில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. வசிஷ்ட நதியின் கரையில் அமைந்துள்ள இக்கோவில், பஞ்சபூத ஸ்தலங்களில் (நிலம்/மண் தலம்) ஒன்றாக போற்றப்படுகிறது.

இக்கோவில் திருமண விசேஷங்களுக்கு மிகவும் புகழ்பெற்றது. இங்கு திருமணம் செய்து கொண்டால் தம்பதியரின் வாழ்க்கை சிறக்கும் என்பது இப்பகுதி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். அதனால்தான், வைகாசி மாதத்தின் கடைசி வளர்பிறை முகூர்த்த நாளில் ஒரே நாளில் 90 திருமணங்கள் வரை இங்கு விமரிசையாக (மற்றும் அவசர கதியில்) நடந்துள்ளது. முகூர்த்த நாட்களில் இக்கோவிலில் எப்போதும் "சதம் அடிக்கும்" அளவுக்குக் கூட்டம் அலைமோதும்.
அந்த வகையில் அதிகாலை பிரம்ம முகூர்த்தம் முதல் அதன்பிறகு காலையில் முகூர்த்த நேரம் முடியும் வரை திருமணம் நடைபெற்ற நிலையில் மணமக்கள் தாலி கட்ட அமருவதற்கு பாய் போடுவதில் அவர்களின் குடும்பத்தினர் இடையே பெரும் போட்டா போட்டியே நேற்று நடந்தது. இது ஒரு கட்டத்தில் மணமக்கள் மற்றும் உறவினர்களிடம் வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பும் ஏற்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மணமக்கள் அமர இடம்பிடித்து போட்டா போட்டி போட்ட நிலையில் அவர்களின் குடும்பத்தினர் வாய்த்தகராறில் ஈடுபட்ட காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் பரவி பக்தர்கள் மத்தியிலும், மணமக்கள் வீட்டார் இடையேயும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
மணமக்கள் தாலி கட்டும் நிகழ்வை காணமுடியாத அளவிற்கு அடுத்து இடம் பிடிக்க தயாராய் நிற்கும் மணமக்களும், அவர்களது உறவினர்களும் சூழ்ந்து கொள்ளும் நிகழ்வும், அவர்கள் முண்டியடிக்கும் நிகழ்வையும் காண முடிந்தது இதன்காரணமாக திருமணத்தை காண நேரில் வந்தும் மணமக்களை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. முகூர்த்த நேரம் தாண்டி விடக்கூடாது என்பதற்காக 90 திருமண ஜோடிகள் வெறும் 3 முதல் 5 நிமிடத்தில் அவசர கதியில் திருமணங்களை நடத்தினர்.












Click it and Unblock the Notifications