வீட்டை பூட்டி தீ வைத்து.. தாத்தா பாட்டியை எரித்துக் கொன்ற 16 வயது பேரன்.. நடுங்கிப்போன சேலம்!
சேலம்: ஆத்தூர் அருகே 16 வயது சிறுவன் வீட்டை பூட்டி தீ வைத்து தாத்தா பாட்டியை எரித்து கொன்ற பகீர் சம்பவம் நடந்துள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கொத்தாம்பாடி பகுதியில் வசித்தது வருபவர்கள் காட்டுராஜா (75) தாய் காசியம்மாள் (65) தம்பதியினர்.
இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில் முதலாவது மகன் நல்ல செல்வ செழிப்புடன் உள்ளார்.
இதேபோல் காட்டுராஜா-காசியம்மாள் தம்பதியின் இரண்டாவது மகனும் நல்ல செழிப்பான நிலையில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இவர்களது மூன்றாவது மகன் ஏழ்மை நிலையில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

மூன்றாவது மகனுக்கு 16 வயதில் ஒரு மகன் உள்ளார். முதல் மகன் குடும்பத்துடன் ஒப்பிட்டு, மூன்றாவது மகன் குடும்பத்தை காட்டுராஜாவும், காசியம்மாளும் அவ்வப்போது தரக்குறைவாக பேசி வந்தததாக கூறப்படுகிறது. பாட்டி-தாத்தா நமது தந்தையையும், குடும்பத்தையும் தவறாக பேசுகிறார்களே என்று மூன்றாவது மகனின் மகன் 16 வயது சிறுவன் அடிக்கடி வருத்தப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் காட்டுராஜா, தாய் காசியம்மாள் தம்பதியினர் தகர கூரை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களின் பேரனான அந்த 16 வயது சிறுவன் வீட்டின் வெளியே பூட்டி தீ வைத்துள்ளார். இதில் வெளியே வரமுடியாதபடி வீட்டுக்குள் மாட்டிக் கொண்ட காட்டுராஜாவும், காசியம்மாளும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். வீடு தீப்பற்றி எரிந்தவுடன் அக்கம்பக்கத்தினர் உடன்டியாக ஆத்தூர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பரில் தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து வந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, காட்டுராஜா , தாய் காசியம்மாள் தம்பதியினர் பிணமாக கிடந்துள்ளனர். இதனை தொடர்ந்து போலீசார் இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 16 வயது சிறுவனை போலீசார் கைது செய்து விசாரணைக்கு காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
அப்போது அவன் 'தாத்தா, பாட்டி தன்னையும், தனது குடும்பத்தையும் தரக்குறைவாக பேசியதால், வேதனை அடைந்து வீட்டை கொளுத்தியதாக போலீசாரிடம் கூறி இருக்கிறான். பேரனே தாத்தா, பாட்டியை எரித்து கொன்ற சம்பவம்கொத்தாம்பாடி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
-
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்!












Click it and Unblock the Notifications