300 பெண்களின் ஆபாச வீடியோ! தலைசுற்றிப் போன போலீசார்! சினிமா வலையில் சிக்கிய பெண்கள்! ஷாக் சேலம்!

Subscribe to Oneindia Tamil

சேலம் : சேலத்தில் இளம்பெண்களை வைத்து ஆபாச படம் எடுக்க முயற்சித்த போலி இயக்குனர் உட்பட இருவர் கைது செய்யப்பட்ட சம்பவத்தில், சினிமா ஆசைகாட்டி 300க்கும் மேற்பட்ட பெண்களை வைத்து ஆபாச வீடியோக்கள் எடுத்தது, ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் இரும்பாலை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகின்றார், இவர் கடந்த பிப்ரவரி மாதம் சினிமாவில் நடிப்பதற்காக வாய்ப்புகள் தேடிவந்தார்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் துணை நடிகை தேவை என்று வெளிவந்த விளம்பரத்தை பார்த்து சேலம் ஏ. வி.ஆர். ரவுண்டானா பகுதியில் இயங்கி வந்த சினிமா நிறுவனத்தின் அலுவலகத்துக்கு சென்றார்.

சேலத்தில் ஷாக்

சேலத்தில் ஷாக்

அந்த அலுவலகத்தில் எடப்பாடி வீரப்பன்பாளையத்தை சேர்ந்த வேல்சத்ரியன் (38), விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த ஜெயஜோதி (23) ஆகியோர் தாங்கள் தயாரிக்கும் புதிய படத்தில் வாய்ப்பு தருவதாகவும் அதற்கு ரூ 30 ஆயிரம் பணம் தரவேண்டும் என கேட்டுள்ளனர். ஆனால் அவர் தன்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளார். இதனையடுத்து இரும்பாலையை சேர்ந்த பெண்ணை கம்பெனியில் வேலைக்கு சேர்த்துள்ளனர். ஆனால் கம்பெனியில் மூன்று மாதம் வேலைபார்த்தும் அதற்கான சம்பளத்தை அவர்கள் வழங்கவில்லை, சம்பளத்தை கேட்டபோது கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர்.

ஆபாசமான போஸ்டர்கள்

ஆபாசமான போஸ்டர்கள்

மேலும் கம்பெனியின் ஒரு அறையில் பெண்களின் ஆபாசமான போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.அங்கு சில பெண்களை வைத்து படம் எடுப்பதற்காக ஏற்பாடு செய்து வந்ததும் தெரியவந்ததை அடுத்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார், அதன்பேரில் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் சுப்புலட்சுமி மற்றும் போலீசார் அங்கு சென்று ஜெயஜோதி, வேல் சத்ரியன் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஆபாசமாக ஒரு படம் தயாரிக்க இருப்பதும் தெரியவந்தது.

ஆபாச படம்

ஆபாச படம்

மேலும் அதற்காக இளம்பெண்களை தேர்வு செய்தது தெரிந்தது. பின்னர் இரும்பாலையை சேர்ந்த பெண் அளித்த புகாரின்பேரில் கொலை மிரட்டல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். மேலும் அந்த கம்பெனி அலுவலகத்தில் இருந்த லேப்டாப், செல்போன் ,கேமரா ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர் , அதில் சில பெண்களின் ஆபாச படங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதே போல சேலம் மாவட்ட முழுவதும் பல்வேறு இடங்களில் யூடியூப் தொலைக்காட்சிக்கு ஆட்கள் வேண்டும் சினிமா தயாரிக்க பெண்கள் வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விளம்பரங்களை நம்பி பெண்கள் ஏமாந்து வருகின்றனர். இதுவரை அவர்கள் 3000க்கும் மேற்பட்ட பெண்கள் சிக்கியிருக்கலாம் எனவும், அவர்களது லேப்டாப்பை சோதனை செய்தால் இது தெரியவரும் என்கின்றனர் பாதிக்கப்பட்ட பெண்கள்

போலீசார் எச்சரிக்கை

போலீசார் எச்சரிக்கை

இவர்கள் மட்டுமல்லாது சேலம் மாவட்டத்தை சுற்றி உள்ள தர்மபுரி, பவானி ஈரோடு கிருஷ்ணகிரி கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் இதுபோன்ற கும்பல் அதிகமாக உள்ளதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவிக்கின்றனர். இவர்கள் மீது கடுமையாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் உடனடியாக பல்வேறு இடங்களில் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதே நேரத்தில் பெண்களும் மிகக் கவனமாக இருக்க வேண்டுமென போலீசார் எச்சரிக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+