கராத்தே சொல்லி தருவதாக கூறி வகுப்பறையில் போதையில் ஆசிரியர் செய்த காரியம்.. சஸ்பெண்ட்
சேலம்: எடப்பாடி அருகே அரசு பள்ளியில் ஆசிரியர் ஒருவர் குடித்துவிட்டு பணிக்கு வந்த செய்த காரியம் காரியத்தால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே மெய்யம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மாணவர்களை குடிபோதையில் அடித்த ஆசிரியர் தங்கராஜ் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள மெய்யம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் தங்கராஜ் குடி போதையில் பள்ளிக்கு வருவது பள்ளியிலேயே மது அருந்துவது என வாடிக்கையாக இருந்ததாக கூறப்பபடுகிறது.

மாணவர்களை உதைத்தார்
இதனை தொடர்ந்து நேற்று போதையில் பள்ளிக்கு வந்த தங்கராஜ் வகுப்பறையில் இருந்தாராம் அப்போது வகுப்பறையின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை கூப்பிட்டு கராத்தே சொல்லி தருவதாக கூறி வகுப்பறைக்கு அழைத்து சென்று வகுப்பறையில் வைத்து காலால் உதைத்து அடித்தாராம்.

சமாளித்த ஆசிரியர்
அப்போது குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு பெற்றோர்கள் ஓடிவந்து கேட்டதற்கு தெரியாமல் செய்துவிட்டதாக கூறியிருக்கிறார். போதையில் இருந்த தங்கராஜ் பற்றி தலைமையாசிரியரிடம் பெற்றோர்களும் பொதுமக்களும் புகார் கூறியுள்ளனர்.

போலீசில் புகார்
உடனடியாக மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது காவல்துறை விசாரணையில் ஆசிரியர் தங்கராஜ் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு மது அருந்தியது உறுதி செய்யப்பட்டது.

ஆசிரியர் சஸ்பெண்ட்
உடனடியாக மாவட்ட கல்வி அலுவலர் விஜயா, ஆசிரியர் தங்கராஜை தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். மாணவர்களுக்கு கல்வியை போதிக்கும் ஆசிரியர் ஒருவர் வகுப்பறையில் மாணவர்களை அடித்து துன்புறுத்திய சம்பவம் சேலம் எடப்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications