சேலத்தில் அதிகாலையில் அதிர்ச்சி சம்பவம்.. 4ஆவது மாடியிலிருந்து குதித்து இருகுழந்தைகளின் தாய் தற்கொலை
சேலம்: சேலத்தில் நான்காவது மாடியிலிருந்து பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை குறித்து சேலம் உதவி கமிஷனர் விசாரணை நடக்கிறது. தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்ணின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.
Recommended Video
சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ளது அஸ்தம்பட்டி. இங்குள்ள ராஜாஜி ரோடு பகுதியில் லட்சுமி கிருபா அபார்ட்மெண்ட் உள்ளது. இது நான்கு மாடி கொண்ட அபார்ட்மெண்ட் ஆகும்.
இந்த அடுக்குமாடி குடியிருப்பில் சண்முகசுந்தரம் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். சண்முகசுந்தரம் கதவு மற்றும் ஜன்னல் மொத்த விற்பனை நிலையம் வைத்துள்ளார். இவரது மனைவி விக்னேஷ்வரி (40). இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

காவல் நிலையம்
இன்று அதிகாலை ஐந்தரை மணி அளவில் விக்னேஸ்வரி வீட்டிலிருந்து வெளியில் வந்தார். பின்னர் மொட்டை மாடிக்கு அவர் சென்று அங்கு இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்த பொதுமக்கள் உடனே அஸ்தம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

உடற்கூறு
உடனே போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர். பின்னர் விக்னேஸ்வரி சடலம் உடற்கூறு ஆய்வு செய்ய சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விக்னேஸ்வரிக்கு சில மாதங்களாக உடல்நிலை சரியில்லை என்றும், மனநிலை சரியில்லாதவர் போல் நடந்து கொண்டார் என்றும் கூறப்படுகிறது.

மனமுடைந்த பெண்
மேலும் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார் என்றும் தெரிகிறது. இதில் மனமுடைந்து விக்னேஸ்வரி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் உறவினர்கள் காவல் துறை அதிகாரிகளிடம் தெரிவித்து உள்ளனர். இதனை அறிந்த சேலம் மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் ,
இந்த தற்கொலை குறித்து விசாரிக்க தனிப்படை அமைத்து உள்ளார்.

அதிகாலையில் நிகழ்ந்த தற்கொலை
இதில் அஸ்தம்பட்டி உதவி கமிஷனர் ஆனந்தகுமார் மற்றும் அஸ்தம்பட்டி காவல் ஆய்வாளர் பொன்ராஜ் ஆகியோர் விசாரணை செய்து வருகிறார்கள். விக்னேஸ்வரி தற்கொலை குறித்து சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
சேலத்தில் அதிகாலையில் நான்காவது மாடியிலிருந்து பெண் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
மாயமான தவெக நிர்வாகி 4 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு.. கல் குவாரி பள்ளத்தில் உடல் கண்டெடுப்பு! -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
பூட்டிய வீட்டில்.. பேராசிரியர் இருந்த கோலம்! 1400 கி.மீ டிராவல் செய்து வந்து சம்பவம் செய்த தம்பதி! -
ஓட்டுக்கு ரூ.2000..? செய்தியாளர்களை தள்ளிவிட்ட தவெக நிர்வாகி.. காரில் எஸ்கேப் ஆன எம்.எல்.ஏ! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்!











Click it and Unblock the Notifications