Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆடிப்பெருக்கு நாளில் பொங்காத காவிரி..மேட்டூர் அணை நீர்மட்டம் 61 அடியாக சரிவு.. விவசாயிகள் சோகம்

Subscribe to Oneindia Tamil

சேலம்: கர்நாடகா அணைகளில் இருந்து விநாடிக்கு 3500 கன அடி தண்ணீர் மட்டுமே திறக்கப்படுகிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் அணையின் நீர்மட்டம் 61 அடியாக சரிந்துள்ளது. தினசரியும் ஒரு அடிக்கு மேல் குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணை தண்ணீரின் மூலம் தமிழகத்தில் 12 மாவட்டங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி முதல் காவிரி டெல்டா பாசனத்திற்கு குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும்போது 103.35 அடியாக இருந்த நீர்மட்டம் தற்போது மளமளவென குறைந்து வருகிறது.

Aadi Perukku day Mettur dam water level falls to 61 feet Delta farmers are worried

வழக்கமாக ஜூன், ஜூலை மாதங்களில் தென்மேற்கு பருவமழை அதிகளவில் பெய்து காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும். ஆனால் இந்த ஆண்டு பருவமழை கைகொடுக்கவில்லை. கர்நாடகா அணைகளில் 100 அடிக்கு மேல் நீர் இருந்தாலும் குறைவான அளவே தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து நீர்மட்டம் தொடர்ந்து சரிவடைந்து வருகிறது.

கடந்த 3 வாரத்திற்கு முன்பு காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததன் காரணமாக அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து அதிகபட்சமாக காவிரி ஆற்றில் 23 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் வரத்தொடங்கியதால் சுமார் 4 நாட்கள் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.

அணையில் இருந்து கடந்த ஒரு வாரமாக டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர்வரத்தை விட அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. மேட்டூர் அணையில் இன்று காலை நிலவரப்படி 26.5 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. இதில் 6 டி.எம்.சி. குடிநீர் திட்டங்கள் மற்றும் மீன்வளத்துக்கு பயன்படுத்தப்படும்.

கர்நாடகாவில் பருவமழை குறையத்தொடங்கியதால் கபினி, கேஆர்எஸ் அணைகளுக்கு வரும் நீரின் அளவும் குறைந்துள்ளது. தற்போது கபினி அணையில் இருந்து விநாடிக்கு 2000 கனஅடி தண்ணீர் மட்டுமே திறக்கப்படுகிறது. அதே போல கேஆர்எஸ் அணையில் இருந்து விநாடிக்கு 1500 கனஅடி நீர் மட்டுமே திறக்கப்படுகிறது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. தற்போது மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 150 கனஅடியாக மட்டுமே உள்ளது. அணைக்கு மிக குறைந்த அளவில் தண்ணீர் வரும் நிலையில் அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் நாள் ஒன்றுக்கு ஒரு அடிக்கு மேல் சரிந்து வருகிறது.

கடந்த 2007ஆம் ஆண்டு ஆடிப்பண்டிகைக்கு முன்பு மேட்டூர் அணை நிரம்பியது. அதன் பிறகு 10 ஆண்டுகளுக்கு பிறகு 2018ஆம் ஆண்டு ஆடிப்பெருக்கு நாளுக்கு முன்பாகவே அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அது முதலே கடந்த 5 ஆண்டுகளாகவே மேட்டூர் அணையின் நீர் மட்டம் குறையாத அளவிற்கு பருவமழை தவறாது பெய்து வந்தது. கொரோனா காலத்தை தவிர மற்ற ஆண்டுகளில் ஆடிப்பெருக்கு கோலாகலமாகவே கொண்டாப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஆடிப்பெருக்கு நாளில் அணை நிரம்பி கடல் போல காட்சியளித்தது.

இந்த ஆண்டு மழை குறைந்த காரணத்தால் மேட்டூர் அணை நீர் மட்டம் தற்போது 61 அடியாக சரிந்துள்ளது. குறுவை சாகுபடிக்காக அணையில் இருந்து விநாடிக்கு 10000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணைக்கு விநாடிக்கு 150 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. தற்போது அணையில் இருந்து தினமும் 1 டி.எம்.சி.வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையில் இருந்து இன்னும் 20 நாட்களுக்கு மட்டுமே டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. குறுவை சாகுபடி பயிர்களை காப்பாற்ற முடியுமா என்று காவிரி டெல்டா பாசன விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். அதே நேரத்தில் ஆடிப்பெருக்கு நாளில் ஆறுகளில் நிறைய தண்ணீர் ஓடுவதால் காவிரித்தாயை வணங்கி வளம் பெருக்க விவசாயம் செழிக்க வேண்டிக்கொண்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+