ஆளுநர் பதவியை நிரந்தரமாக நீக்க வேண்டும்.. திமுக இளைஞரணி மாநாட்டில் 25 தீர்மானம்! முன்மொழிந்த உதயநிதி
சேலம்: ஆளுநர் பதவியை நிரந்தரமாக நீக்கிட வேண்டும் என்று இளைஞரணி மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் தீர்மானத்தை முன்மொழிந்தார். இந்த மாநாட்டில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு, சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் இன்று நடைபெற்று வருகிறது. காலை 9.15 மணிக்கு, திமுக துணை பொதுச்செயலாளரும், எம்.பி-யுமான கனிமொழி, மாநாட்டில் திமுக கொடியை ஏற்றி வைத்து, மாநாட்டை தொடங்கி வைத்தார். திமுக மாணவரணி செயலாளர் எழிலரசன் மாநாட்டுப் பந்தலை திறந்து வைத்தார்.

தொடர்ந்து, மாநாடு தொடங்கிய நிலையில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தீர்மானங்களை முன்மொழிந்தார். பாஜகவின் மதவாத அரசியலுக்கு எதிரான பரப்புரையை திமுக இளைஞரணி முன்னெடுக்கும், ஆளுநர் பதவியை நிரந்தரமாக நீக்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட 25 தீர்மானங்களை முன்மொழிந்தார் உதயநிதி ஸ்டாலின்.
தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவக்கனவை சிதைத்து 22 உயிர்களைப் பறித்துள்ள நீட்தேர்வு, ராஜஸ்தான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் பல மாணவர்களின் உயிர்களைப் பறித்துவருவதுடன், மத்திய பா.ஜ.க அரசின் ஆதரவு பெற்ற பயிற்சி நிறுவனங்கள், ஒவ்வொரு மாணவரிடமும் லட்சக்கணக்கில் கட்டணம் வசூலித்து கொள்ளை லாபம் அடைவதற்கு மட்டுமே துணை போகிறது என்பதால், நீட் தேர்வை ரத்து செய்யும் வரை திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து போராடும் என்கிற உறுதியினை வழங்கியது. நீட் ஒழிக்கப்படும்வரை ஜனநாயக முறையிலான போராட்டங்களையும், சட்ட வழியிலான போராட்டங்களையும் தொடர்ந்து முன்னெடுத்து, மாணவர்களின் எதிர்காலத்தைப் பலி கொடுக்க நினைக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் கொடூர மனப்பான்மையை இந்திய அளவில் அம்பலப்படுத்தி, நீட் தேர்வு ஒழிப்பில் இறுதி வெற்றியை முழுமையாகப் பெற்றே தீரும் என்று இந்த மாநாடு தீர்மானிக்கிறது என தீர்மானத்தை வாசித்தார் உதயநிதி ஸ்டாலின்.
ஆளுநர் பதவியை நீக்க வேண்டும்: மக்களாட்சியின் மாண்பு என்பது ஜனநாயகப் பூர்வமான தேர்தல் களத்தில் வாக்காளர்களாகிய மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் வெற்றிபெற்ற மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட சட்டமன்றத்தின் சுயாட்சிமிக்கச் செயல்பாடுகளேயாகும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை, குறிப்பாக, பா.ஜ.க. ஆட்சியில்லாத மாநில அரசுகளை, நியமனப் பதவியான ஆளுநர் பதவியைக் கொண்டு செயல்படவிடாமல் தடுக்க முயற்சித்து, ஆளுநர்களைக் கொண்டு இணை அரசாங்கம் நடத்துவதற்குத் திட்டமிடும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஜனநாயக விரோதப் போக்கினைக் கண்டிப்பதுடன், ஆளுநர் பதவி என்ற தொங்கு சதை'யை நிரந்தரமாக அகற்றுவதே, ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான தீர்வு என இம்மாநாடு தீர்மானிக்கிறது என தீர்மானத்தை முன்மொழிந்தார் உதயநிதி ஸ்டாலின்.
மேலும், நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றிபெற இளைஞரணி பாடுபடும். நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் 2 கோடி குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி. இந்தியாவுக்கே முன்னோடி திட்டமான காலை உணவு திட்டத்தை செயல்படுத்திய முதலமைச்சருக்கு நன்றி. கலைஞர் உரிமைத் தொகை, மகளிர் இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட திமுக அரசின் திட்டங்களை பாராட்டி தீர்மானம். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி ரூ. 6. 69 லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்ததற்காக நன்றி தெரிவித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
மேலும், பாஜகவின் மதவாத அரசியலுக்கு எதிரான பரப்புரையை திமுக இளைஞரணி முன்னெடுக்கும் என்றும், ஆளுநர் பதவியை நிரந்தரமாக நீக்கிட வேண்டும் கல்வி, மருத்துவத்தை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். பல்கலைக்கழகங்களுக்கு முதலமைச்சரே வேந்தராக இருந்திட வேண்டும் நீட் தேர்வு விலக்கில் உறுதியாக வெற்றி பெற்றே தீருவோம் என்றும் திமுக இளைஞரணி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
"கடிதத்தை வெளியிட்டதிலேயே குட்டு அம்பலமாகிவிட்டது".. நிர்மலா சீதாராமனை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின் -
என்னோட பேவரிட் தோனியை மிஸ் பண்ற பீலிங்கை அவாய்ட் பண்ண முடியல.. ஸ்டாலின் -
நெல் ஊக்கத்தொகை விவகாரம்.. கடிதத்தை வெளியிட்டு.. ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
நெல் ஊக்கத்தொகை.. கடிதத்தை பொதுவெளியில் வெளியிட தயாரா.. நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால் -
"சாக்கடைக்கு சமமாக வந்து விழுகிற எடப்பாடியின் வார்த்தைகளுக்கு பாடம் புகட்டுவோம்”.. கொதித்த ஸ்டாலின்! -
“இனி அறுவடை தான்.. தோழமைக் கட்சியினருடன் இணைந்து வேலை செய்யுங்க”.. ஸ்டாலின் கொடுத்த மெசேஜ்! -
திமுகவை தொட முடியுமா என்ன? விஜய்க்கு சிலுவை ஆசீர்வாதம்! அப்போ சிறுபான்மையினர் ஓட்டு யாருக்கு -
மீண்டும் டிஆர்பி ராஜா அமைச்சர்..? கோரஸாக வந்த குரல்.. பிரச்சாரத்திலேயே உறுதி கொடுத்த உதயநிதி! -
விஜய் அட்டைக்கத்தி.. காற்றடித்தால் கதை முடிஞ்சுது.. திருச்சி கிழக்கில் உதயநிதி தக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம்












Click it and Unblock the Notifications