சேலம் மத்திய சிறையில் சாக்கடையில் பிளாஸ்டிக் கவரில் என்ன அது? யார் அந்த கைதி? தீவிர விசாரணை
சேலம்: இந்தியாவில் உள்ள பழமையான சிறைகளில் சேலம் சிறைச்சாலையும் ஒன்று. சுமார் 115 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சிறையில் ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறையை கட்டும் போதே ஆங்கிலேயர்கள் பாதுகாப்பை மையமாகக் கொண்டு வடிவமைத்தார்கள். கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் யாரும் எளிதில் ஏற முடியாத உயர்ந்த மதில் சுவர்கள் உள்ளன. இங்கு ஒரு சாக்கடையில் இருந்த பிளாஸ்டிக் கவரில் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அதுபற்றி பார்ப்போம்.
சேலம் மத்திய சிறையை பொறுத்தவரை ஆங்கிலேயர் காலத்தில் 1862 ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஒரு பழமையான சிறைச்சாலை ஆகும். : இது சுமார் 115 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. தமிழகத்தின் தூய்மையான மற்றும் சிறப்பாகப் பராமரிக்கப்படும் சிறைகளில் ஒன்றாக சேலம் மத்திய சிறை இருந்து வருகிறது.

இங்கு கைதிகளின் வருகை, மருத்துவக் குறிப்புகள் மற்றும் தண்டனை விவரங்கள் அனைத்தும் டிஜிட்டல் முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த சிறையில் தண்டனை விசாரணை கைதிகள் சுமார் 1200 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சில கைதிகளிடம் செல்போன் புழக்கம் இருந்து வருகிறது.
கடந்த மூன்று மாதமாக தொடர்ந்து சிறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 15க்கும் மேற்பட்ட செல்போன்கள் சிக்கியது.இந்த செல்போன்களை கைதிகளுக்கு கொண்டு சென்று கொடுத்த சிறை வார்டனை சமீபத்தில் போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் சிறையில் தினமும் சிறை கண்காணிப்பாளர் வினோத் உத்தரவின் பேரில் சோதனை காவலர்கள் செல்போன் புழக்கம் பற்றி விசாரித்து சோதனையிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சேலம் மத்திய சிறையின் 9 மற்றும் 10வது பிளாக் இருக்கும் இடைப்பட்ட பகுதியில் செல்லும் சாக்கடை கால்வாய் பகுதியில் காவலர்கள் சோதனை நடத்தினர்.அப்போது சாக்கடையின் மீது ஓரமாக ஒரு பிளாஸ்டிக் கவர் சுற்றி வைக்கப்பட்டிருந்தது. அதனை எடுத்து பிரித்து பார்த்த போது ஒரு செல்போன் இருந்தது. அந்த செல்போனை யாரோ சாக்கடைக்குள் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.

ஒன்பது மற்றும் பத்தாவது பிளாக்கில் தண்டனை, விசாரணை கைதிகள் அடுத்தடுத்து அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் யார் அந்த செல்போனை பதுக்கி வைத்தார்கள் என சிறை கண்காணிப்பாளர் வினோத் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை வருகின்றனர். தொடர்ந்து சிறைக்குள் செல்போன் சிக்கி வரும் நிலையில் மீண்டும் ஒரு செல்போன் சிக்கி இருக்கும் இந்த சம்பவம் சிறை கைதிகள், காவலர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications