என்னாது ஆத்தூர் மாவட்டமாகிடுச்சா.. சொல்லவேல்ல! மறுக்கும் சேலம் ஆட்சியர்!
சேலம்: ஆத்தூர் மாவட்டமாக பிரிக்கப்பட்டதாக வரும் தகவல்களை சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மறுத்துள்ளார்.
தமிழகத்தில் மொத்தம் 38 மாவட்டங்கள் உள்ளன. இந்த 38 மாவட்டங்களிலும் ஐஏஎஸ் அதிகாரி ஆட்சியராக நியமிக்கப்பட்டு அவர் தலைமையில் நிர்வாக பணிகள் நடைபெறும்.

முதலில் 32 மாவட்டங்கள் தமிழகத்தில் இருந்த நிலையில் நவம்பர் 2019ஆம் ஆண்டு தமிழகத்தில் நெல்லையை பிரித்துவிட்டு தென்காசி எனும் மாவட்டம் 33 ஆவது மாவட்டமாக உருவானது. அது போல் விழுப்புரத்தை பிரித்து கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக உருவானது.
இது 34 ஆவது ஆகும். அது போல் வேலூரை பிரித்து திருப்பத்தூர் மாவட்டம் 35 ஆவதாகவும், ராணிப்பேட்டை மாவட்டம் 36 ஆவதாகவும் காஞ்சிரபுரத்தை பிரித்து செங்கல்பட்டு மாவட்டம் 37 ஆவதாக பிரிக்கப்பட்டது. அதாவது அந்த ஆண்டு 5 மாவட்டங்கள் கூடுதலாக இணைந்து மொத்த மாவட்டங்களில் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்தது.
இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு நாகை மாவட்டத்தை பிரித்து மயிலாடுதுறை மாவட்டம் உருவானது. இது 38ஆவது மாவட்டமாகும். 2009ஆம் ஆண்டு கோவை, ஈரோடு மாவட்டங்களில் இருந்து சில பகுதிகள் பிரிக்கப்பட்டு திருப்பூர் மாவட்டம் உதயமானது. அதைத் தொடர்ந்து 10 நாட்கள் கழித்து 5 புதிய மாவட்டங்கள் உருவாகின.
இந்த நிலையில் மக்கள்தொகையை கருத்தில் கொண்டு நிர்வாக வசதிகளுக்காக மாவட்டங்களை பிரிக்க வலியுறுத்தும் கோரிக்கைகள் அதிகரித்தன. அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து ஆரணியை தனி மாவட்டமாக்க வேண்டும். திண்டுக்கல் மாவட்டத்தை பிரித்து பழனி தனி மாவட்டம், கோவை மற்றும் திருப்பூரை பிரித்து பொள்ளாச்சியை தனி மாவட்டமாக்க கோரிக்கை உள்ளது.
அது போல் கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் உள்ளிட்டோர் நகரங்களை கொண்டு புதியதொரு மாவட்டம் உருவாக கோரிக்கை விடுக்கப்பட்டது. திருவள்ளூரை பிரித்து பொன்னேரி மாவட்டமாக்கவும் கோரிக்கை எழுந்தது. அந்த வகையில் சேலம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து ஆத்தூரை தலைமையிடமாக புதிய மாவட்டம் அறிவிக்க கோரிக்கை எழுந்துள்ளது.
இந்த கோரிக்கையை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் கோரிக்கை விடுத்திருந்தார். மக்களும் அவ்வண்ணமே விரும்பினர். மண்டலவாரியாக பார்த்தசால் வடக்கு மண்டலத்தில் ஆரணி, விருத்தாசஸம், ஓசூர், பொனே்னேரி, மத்திய மண்டலத்தை பொருத்தமட்டில் கும்பகோணம், மணப்பாறை, மன்னார்குடி், மேற்கு மாவட்டத்தை பொருத்தமட்டில் பொள்ளாச்சி, பழனி, ஆத்தூர் அல்லது எடப்பாடி தெற்கு வண்டலத்தை பொருத்தவரை கமுதி, மேலூர், திருச்செந்தூர் அல்லது கோவில்பட்டி, சங்கரன்கோவில் ஆகிய மாவட்டங்களை பிரிக்க கோரிக்கை எழுந்துள்ளது.
இந்த நிலையில் குடியரசுத் தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு ஆத்தூர் மாவட்டம் தனியாக உதயமானதாகவும் சேலம், எடப்பாடி, மேட்டூர், ஓமலூர், சங்கரிரி ஆகிய 5 தாலுக்காக்களும் ஆத்தூர், வாழப்பாடி, ஏற்காடு, கங்கவள்ளி ஆகிய 5 தாலுக்காகளுடன் ஆத்தூர் மாவட்டமாகவும் பிரிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இதை சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மறுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: சேலம் மாவட்டத்திலிருந்து ஆத்தூர் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டதாக வந்த தகவல் பொய்யானது. சமூகவலைதளங்களில் இது போன்ற தகவலை அவதூறாக பரப்பி மக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications