‘ஜெயலலிதா பாணி ’அரசியல் வேண்டாம்! விஜய் கொடுத்த எச்சரிக்கை..? போட்டு உடைத்த புஸ்ஸி ஆனந்த்
சேலம்: தமிழக வெற்றிக் கழக தொண்டர்களிடம் அக்கட்சியில் பொதுச்செயலாளர் தயவு செய்து இதைப்போன்று செயல்களில் ஈடுபடாதீர்கள் எனக் கெஞ்சிக் கதறிக் கேட்டுக் கொண்டுள்ளார்.
கடும் மழை வெள்ள பாதிப்பால் விக்கிரவாண்டியில் தவெக மாநாடு நடக்குமா? நடக்காதா? என்ற குழப்பம் நீடித்து வருகிறது. கட்சியின் முதல் மாநாடு என்பதால் பலதரப்பு மக்கள் அதைப் பற்றி ஆவலோடு காத்திருக்கிறார்கள். விஜய் ரசிகர்களுக்கு இதுதான் உண்மையான தீபாவளியாக அமையப் போகிறது. இதனை 'வெற்றிக் கொள்கைத் திருவிழா' என்று விஜய் அவரது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவரது கட்சிக் கொடிக்கான விளக்கம்? கட்சியின் கொள்கை எனப் பல விசயங்கள் பற்றி விளக்கம் அளிக்க இருக்கிறார். இதற்காக மாநிலம் முழுக்க உள்ள மாவட்டங்களில் அரசியல் பயிலரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. அங்கே தொண்டர்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும்? கட்சியின் எதிர்கால திட்டம் என்ன? இலக்கு என்ன? போன்ற விசயங்களைத் தொண்டர்களுக்கு இப்போதே புரிய வைப்பதற்காக அரங்க நிகழ்வுகளாக இந்த அரசியல் பயிலரங்கு நடைபெற்று வருகிறது.
இன்று சேலம் மாவட்டம் ஆத்தூர் அம்மம்பாளையம் பகுதியில் உள்ள மண்டபத்தில் பயிலரங்கு நடைபெற்று வருகிறது. அங்கே தவெக தொண்டர்கள் பலரும் உற்சாகமாகப் பங்கேற்று உள்ளனர். அதில் பங்கேற்ற பலர், தாங்கள் மாநாட்டுக்கு வரும்போது கடைப்பிடிக்க வேண்டிய கட்டளைகள் என்ன? புதியதாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்ட நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் என்ன? அதைப் பற்றித்தான் இந்த அரசியல் பயிலரங்கம் மற்றும் நாட்டு நெறிமுறைகளைப் போதிக்க இருப்பதாகக் கூறுகின்றனர்.
இந்தக் கூட்டத்திற்குச் சேலம் மட்டும் இல்லாமல் நீலகிரி, ஈரோடு என சில மாவட்டத்திலிருந்து வந்துள்ளனர். அவர்களுக்குக் காலை மற்றும் மதிய உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பெண்கள் அதிகம் பேரைக் காணமுடிகிறது. இதில் ஹைலட் ஆன விசயம் என்ன நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிவந்த பத்திரிகையாளர் அய்யநாதன் தவெக அரசியல் பயிலரங்குகளில் கலந்துகொண்டு கட்சித் தொண்டர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறார். வந்திருந்த பலரும் விஜய்யின் ரசிகர்கள்.
கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக அவரை திரையின் மூலம் பின்தொடர்ந்து வருபவர்கள். விஜய் தனது ரூ.300 கோடி சம்பளத்தைத் தூக்கி எறிந்துவிட்டு மக்கள் சேவைக்கு வந்துள்ளார். அது ஒரு பெரிய விசயம். அவரை ஆதரிப்பதால் தமிழ்நாடு வளரும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.
இந்த அரங்கில் பேசிய தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், "நாம் முதலில் ரசிகர் மன்றமாக இருந்தோம். அடுத்து மக்கள் இயக்கமாக இருந்தோம். இன்று தமிழக வெற்றிக் கழகமாக அரசியல் களத்தில் இருக்கிறோம். இன்று தமிழ்நாடு முழுக்க விஜய்யின் கொடி பறந்து கொண்டிருக்கிறது. பல நாட்களாக நான் சொல்ல நினைத்ததை இப்போது சொல்கிறேன். நம் தொண்டர்கள் அப்பா, அம்மா கால்களில் மட்டுமே விழுந்து வணங்க வேண்டும். வேறு யார் கால்களிலும் விழக்கூடாது.

இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யும்படி 2 நாட்கள் முன்னதாக தான் சொன்னேன். உடனே மண்டபத்தைப் பெற்றுக் கூட்டத்தை நடத்திக் காட்டிவிட்டீர்கள். வரும் வழியில் எல்லாம் போஸ்டர், பேனர்களைப் பார்த்தேன். அதில் என் பெயருக்கு முன்பே நிரந்தர பொதுச்செயலாளர் எனப் போட்டு இருந்தார்கள். எனக்கு விஜய் பொதுச்செயலாளர் பதவிதான் வழங்கி இருக்கிறார். அது நிரந்தரமா, அல்லது இல்லையா என்பதை முடிவு செய்யும் அதிகாரம் விஜய்க்குத்தான் உள்ளது.
கடந்த 5 ஆண்டுகள் முன்பே சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தேன். அப்போதே நான் இந்தப் பதவி வரும் போகும். ஆனால் விஜய் ரசிகர் என்ற பதவி நிரந்தரமானது என்று சொன்னேன். 15 ஆண்டுகள் முன்பு என்ன சொன்னேனோ அதுதான் இன்றும் என் நிலைப்பாடு. அதில் மாற்றம் இல்லை. ஆகவே, நிரந்தர பொதுச் செயலாளர் என்று போட வேண்டாம். அதேபோல எனக்கு ப்ளாக்கேட்ஸ், பவுன்ஸர் எல்லாம் போட்ட வேண்டாம். நான் ரசிகராக உங்களுடன் இருக்க ஆசைப்படுகிறேன். எனவே அதைத் தவிர்க்க வேண்டும். மாநாடு நடைபெறுவதற்கு முன்பாக சில அரசில் அடிப்படை விசயங்களை நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். அதற்காகவே இந்தப் பயிலரங்கம்" என்று பேசி இருக்கிறார்.
ஒரு நாட்டை விஜய் நடத்தத் திட்டமிட்ட பிறகு அவர் அதை முறையாகவும் படிப்படியாகவும் திட்டம் வகுத்துச் செய்யத் தொடங்கி இருக்கிறார். ஏதோ வழக்கமான மாநாடு போல் இல்லாமல் அவரிடம் ஒரு தெளிவு இருப்பதாகப் பலரும் சொல்கிறார்கள். மாநாடு மேடையில்தான் தனது முதல் தோற்றம் இருக்க வேண்டும். இடையில் வேறு எந்த விசயங்களுக்கும் ஃபோகஸ் போய்விடக்கூடாது என்பதில் உறுதியான நிலைப்பாட்டை எடுத்துச் செயல்படுகிறார்.
ஆகவே, அவரது கட்சி ஆதரவு இல்லாதவர்களைக்கூட அரசியல் பயிலரங்கம் மூலம் வரவேற்று தனது தொண்டர்களுக்கு வகுப்பு எடுக்கும் அவரது பாணி மிகவும் கவனிக்கத்தக்கது. இந்தப் பயிலரங்குகளைப்போலவே மாநாடு முடிந்ததும் மாவட்ட அளவில் கூட்டங்களை நடத்தவும் 2026 தேர்தல் நேரத்தில் தமிழகம் முழுக்க நடைப்பயணம் மேற்கொள்ளவும் விஜய் ஒரு திட்டம் வகுத்து வைத்துள்ளார் என அறிய முடிகிறது.
முதல் மாநாட்டுக்கு சுமார் 5 லட்சம் பேரை திரட்ட தவெக திட்டம் வகுத்துள்ளது. அந்தக் கூட்டத்தை எப்படியாவது கட்டுப்படுத்த ஆளும் கட்சி முயற்சி செய்யலாம். அது குறித்தும் சட்டரீதியாக அனைத்து ஆவணங்களையும் விரல் நுனியில் வைத்திருக்கவும் உத்தரவு போடப்பட்டுள்ளது. ஆக, இது வெறும் பிளான் இல்லை. விஜய் பக்கா ப்ளான் ஒன்றுடன் தான் அரசியல் களத்திற்குள் காலடி எடுத்து வைத்துள்ளார்.
-
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications