பக்ரீத்துக்கு விடுமுறை.. வாய்மொழி உத்தரவை வாபஸ் பெற்ற பெரியார் பல்கலை! ஆசிரியர்கள் ஹேப்பி அண்ணாச்சி
சேலம்: தந்தை பெரியார் பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் திருத்தம் பணியில் ஈடுபட்டு இருக்கும் ஆசிரியர்கள் பக்ரீத் விடுமுறை அன்றும் பணிக்கு வர வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவு திரும்பப்பெறப்பட்டு உள்ளது/
சேலத்தில் இயங்கி வரும் தந்தை பெரியார் பல்கலைக்கழகத்தின் கீழ் 10க்கும் அதிகமான உறுப்பு கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில் பல ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் பயின்று வருகிறார்கள். இந்த நிலையில் இன்று பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடைபெற்று வருகிறது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் கலந்துகொண்டு உள்ளனர்.

முன்னதாக இந்த பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு கருப்பு சட்டை அணிந்து வரக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டது. இது பெரியாரிய அமைப்புகள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்புகள் வலுத்த நிலையில் அந்த அறிவிப்பு திரும்பப்பெறப்பட்டது. இந்த நிலையில் இன்று பட்டமளிப்பு விழாவுக்கு சென்ற ஆளுநர் ரவிக்கு கருப்புக் கொடி காட்டும் போராட்டமும் நடத்தப்பட்டன.
இதற்கிடையே நேற்று பெரியார் பல்கலைக்கழகம் தொடர்பாக மற்றொரு சர்ச்சை வெடித்தது. நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், அன்றைய தினம் அரசு விடுமுறையாக உள்ளதால், ஆசிரியர்கள் அனைவரும் விடைத்தாள் திருத்தும் பணிக்கு வர வேண்டும் என்று வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய பெயர் கூற விரும்பாத பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர், "கடந்த மே மாதம் நடைபெற்ற பல்கலைக்கழக தேர்வுக்கு விடைத்தாள் திருத்தம் பணி கடந்த ஒரு வாரமாக பெரியார் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வியாழக்கிழமை இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான பக்ரீத் பண்டிகை வருகிறது.
அந்த நாளிலும் அனைத்து ஆசிரியர்களும் விடைத்தாள் திருத்தும் பணிக்கு வரவேண்டும் என்று வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளனர். இது பற்றி உயரதிகாரிகளிடம் கேட்டபோது விடுமுறை எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறினார்கள். ஆனால், தின ஊதியம் ரூ.300 + விடைத்தாள் திருத்தும் ஊதியம் ரூ.900 என ரூ.1,200 தங்களுக்கு கிடைக்காது.

பக்ரீத் பண்டிகைக்கு அரசு அளித்த விடுமுறை உரிமையை பறிக்கும் வகையில் இந்த உத்தரவு உள்ளது." என்று அவர் தெரிவித்தார். இதுபற்றி பெரியார் பல்கலைக்கழக கட்டுப்பாட்டாளர் கதிரவன் அவர்களிடம் நாம் தொலைபேசியில் தொடர்புகொண்டு விசாரித்தபோது, "எனக்கு எதுவும் தெரியாது. பட்டமளிப்பு விழா பணியில்ல் பிசியாக இருக்கிறேன்." என்று சொல்லி அழைப்பை துண்டித்துவிட்டார்.
இந்த நிலையில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். அதில், "பெரியார் பல்கலைக்கழகத்தில் அரசு பெருநாள் விடுமுறையன்றும் விடைத்தாள் திருத்தம் செய்ய பேராசிரியர்கள் வருகை தர நிர்வாகம் வாய்மொழி உத்தரவு. தமிழக அரசே! உடன் மேற்கண்ட உத்தரவை ரத்து செய்! கருப்பு சட்டை, பெருநாளிலும் பணி உத்தரவு. நடவடிக்கைக்கு முதல்வர் தலையிட வேண்டும்." என்று குறிப்ப்ட்டு இருந்தார்.
இந்த நிலையில் பக்ரீத் பண்டிகை அன்று விடைத்தாள் திருத்தம் செய்யும் பணிக்கு வரவேண்டும் என்ற வாய்மொழி உத்தரவு திரும்பப்பெறப்பட்டு உள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்து உள்ளது. பல்கலைக்கழக துணை வேந்தர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டாளர் ஆகியோர் தனியார் தொலைக்காட்சி செய்தியாளரிடம் இந்த தகவலை தெரிவித்துள்ளார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications