திமுகவில் மேலும் 13 விக்கெட்டுகள்.. ஜெயிலில் தான் மந்திரிசபை.. கொளுத்திப் போட்ட கே.பி.ராமலிங்கம்!
சேலம்: அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடியை தொடர்ந்து திமுகவில் இன்னும் 13 விக்கெட்டுகள் விழப்போகின்றன. திமுக அமைச்சர்கள் அடுத்தடுத்து கைது நடவடிக்கையில் சிக்குவார்கள் என பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் தெரிவித்துள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காவிரி நதிநீர் விவகாரத்தில், தமிழ்நாட்டின் உரிமைகளைப் பெற தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தவறிவிட்டதாக முதல்வரின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்த தமிழ்நாடு பாஜக, கருப்பு சட்டை அணிய வேண்டும் என்று அக்கட்சியினரை கேட்டுக்கொண்டது. அதன்படி பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம், கருப்புச் சட்டை அணிந்து சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

காவிரி விவகாரம்: அப்போது பேசிய கே.பி.ராமலிங்கம், "மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12ஆம் தேதி தண்ணீர் திறந்து வைக்கப்பட்ட நிலையில் வினாடிக்கு பத்தாயிரம் கன அடி தண்ணீர் தொடர்ந்து டெல்டா பாசனத்திற்காக திறக்கப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 73 அடியாக குறைந்துள்ளது. அதேபோல் மேட்டூர் அணையில் நீர் இருப்பும் 46 டிஎம்சி-யாக குறைந்துவிட்டது. இருப்பினும் கர்நாடக அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை இதுவரை வழங்கவில்லை.
இதனால் பாசனத்திற்கு முழுமையாக தண்ணீர் திறக்க முடியாத நிலை உள்ளது. எதிர்வரும் காலங்களில் 100 நாட்களுக்கு மட்டுமே குடிநீர் தேவைக்கு தண்ணீர் கிடைக்கும் நிலையும் உருவாகியுள்ளது. இப்படி அவசிய அவசரமான சூழலை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உணரவில்லை. விவசாயிகளின் வாழ்வாதாரம் என்ன ஆகும் என்ற கவலை இல்லாமல் காங்கிரஸ் கட்சி கூட்டிய கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று இருக்கிறார்.
கர்நாடகாவில் உரிமையை பறிகொடுத்து: கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட 3 குழுக்களை அமைத்து வல்லுநர்களை நியமித்துள்ளது. அது பற்றி கவலை இல்லாமல் பிரதமர் மோடிக்கு எதிராக கூட்டப்பட்ட கூட்டத்தில் பங்கேற்றுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். தண்ணீர் தர மாட்டோம் என்று சொல்பவர்கள் கொடுத்த வரவேற்பை ஏற்று அந்த கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்றிருப்பது கண்டனத்துக்குரியது.
சட்டமன்றத் தேர்தலுக்கு பாஜக கட்சியின் தேர்தல் பொறுப்பாளராக கர்நாடகா சென்ற அண்ணாமலை, மேகதாது அணை கட்டுவது தொடர்பான தேர்தல் வாக்குறுதிக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா கட்சியின் வாக்குறுதியில் மேகதாது அணை தொடர்பான அறிவிப்பு இருக்கக் கூடாது என்று நிறுத்தி வைத்தார்.
பதவி விலக வேண்டும்: விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்ற நியாயமான உணர்வு முதலமைச்சருக்கு இல்லை. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருப்பதால் மேகதாது அணை கட்ட தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துவிடுமோ என்ற சந்தேகமும் எழுகிறது. மத்திய அரசை பொருத்தவரை தமிழ்நாடு - கேரளா - புதுச்சேரி ஆகிய மூன்று மாநிலங்கள் ஒப்புதல் இருந்தாலே மேகதாது அணை கட்ட அனுமதி என்பதில் தெளிவாக உள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின் நியாயமாக பதவி விலகவேண்டும். சட்டத்துக்கு எதிராக செயல்படமாட்டோம் என்று உறுதியேற்று ஆட்சி பொறுப்பேற்ற முதலமைச்சரே குற்றவாளியை பாதுகாக்கலாமா? அவருக்கு ஆதரவாக செயல்படலாமா? எல்லாவற்றிற்கும் ஸ்டிக்கர் ஒட்டுவது போன்று, ஆபரேஷனுக்கு ஒரு ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு விசாரணைக்கு ஒத்துழைக்காத செந்தில்பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
உடனே நீக்கியிருக்க வேண்டும்: வீரபாண்டி ஆறுமுகம் அமைச்சராக இருந்தபோது கொலை வழக்கு தொடர்பாக சிறையில் இருந்த அவரது தம்பி மகன் சுரேஷை நேரில் சென்று சந்தித்தார். அப்போது துணை முதலமைச்சராக இருந்த ஸ்டாலின், திமுக செயற்குழு கூட்டத்தில் குற்றவாளி ஒருவரை சிறையில் சென்று சந்தித்த வீரபாண்டி ஆறுமுகம் அமைச்சராக தொடரலாமா? என்று கேள்வி எழுப்பினார். ஆனால், அதே முதலமைச்சர் ஸ்டாலின் இன்று செந்தில் பாலாஜியை காப்பாற்றுவதற்காக துடிக்கிறார்.
சிறையில் அடைக்கப்பட்ட பிறகு அமைச்சர் பதவியில் இருந்து அவரை முதலமைச்சர் உடனடியாக விடுவித்து இருக்க வேண்டும். ஜெயிலில் அடைக்கப்பட்ட நிலையிலும் அவர்களை அமைச்சராக நீடிக்கச் செய்வது அரசியல் மாண்பு இல்லை. குற்றவாளிக்கு துணை நிற்கும் முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி ஜூலை 23ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
13 விக்கெட்: கனிமொழி கைது செய்யப்பட்டபோது துடிக்காத முதலமைச்சர், செந்தில் பாலாஜிக்காக துடிக்கிறார். செந்தில் பாலாஜி வழக்கில் ஆணி வேராக முதலமைச்சர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். முதல் விக்கெட் செந்தில் பாலாஜி, அடுத்த விக்கெட் பொன்முடி. அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடியை தொடர்ந்து திமுகவில் இன்னும் 13 விக்கெட்டுகள் விழப்போகின்றன.
15 அமைச்சர்கள் வெவ்வேறு வழக்குகளில் ஜெயிலில் இருக்கப் போகிறார்கள். ஜெயிலில் மந்திரிசபை நடத்தப் போகிறீர்களா? கடந்த ஜூன் 27 ஆம் தேதி முதல் ஜூலை 10 ஆம் தேதி வரை வெளிநாடுகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பயணம் மேற்கொண்டு இருந்தார். அவர் எங்கே சென்றார், எதை கொண்டு சென்றார், யாருடன் சென்றார் என்ற விவரங்கள் ஜூலை 28ஆம் தேதிக்குப் பிறகு தெரியவரும்." என்று தெரிவித்துள்ளார்.
-
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
30+ தொகுதியில் போட்டி? தமிழகத்தில் பாஜக எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகிறது.. வெளியான முக்கிய தகவல் -
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்! -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
அமமுகவுக்கு 12 சீட்? குக்கர் சின்னத்தில் போட்டி.. பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பில் உறுதி?! -
பாஜகவில் இருந்து விலகலா.. ஆதரவாளர்களுடன் ஆலோசனை குறித்து சரத்குமார் பரபரப்பு விளக்கம் -
ஆதரவாளர்களுடன் சரத்குமார் ரகசிய ஆலோசனை.. மீண்டும் உதயமாகிறதா சமக.. அதிர்ச்சியில் பாஜக -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்! -
புதுச்சேரியில் 9 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு.. ஜான் குமாருக்கு மீண்டும் சீட்! -
மம்தாவுக்கு குடைச்சலை கொடுக்கும் பாஜக.. மேற்கு வங்கத்தில் மலரும் தாமரை? 7 முக்கிய பாயிண்டுகள்











Click it and Unblock the Notifications