முழுசா கட்டி முடிக்காத கோவிலை திறக்கலாமா? கனிமொழி சொன்னதும் துர்கா ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன்!
சேலம்: ஒரு கோவிலை முழுசாக முடிக்காமல் திறக்கலாமா? முழுசாக கட்டி முடிக்காமல் திறக்கக் கூடாது. ஆனால் இன்றைக்கு பாஜக அரசியல் லாபத்திற்காக கோவிலை திறக்கிறார்கள். இங்க எங்க அண்ணி கூட உட்கார்ந்து இருக்காங்க அவுங்களுக்கும் கஷ்டமாகத்தான் இருக்கும் என்று சேலம் திமுக இளைஞரணி மாநாட்டில் கனிமொழி எம்பி கூறினார்.
சேலத்தில் இன்று திமுக இளைஞரணி மாநாடு தொடங்கியது. மிக பிரம்மாண்டமாக நடந்து வரும் இந்த மாநாடானது, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்தது. இதில், இன்று காலை கனிமொழி எம்.பி கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து மாநாட்டில் கனிமொழி எம்பி பேசியதாவது:- ஒரு கோவிலை முழுசாக முடிக்காமல் திறக்கலாமா? திறக்க கூடாதுல்ல.. ஒரு கோவிலை முழுசாக கட்டி முடிக்காமல் திறக்கக் கூடாது. ஆனால் இன்றைக்கு இருக்கும் பாஜக என்ன சொல்கிறது. நாங்கதான் இந்து மதத்தை காப்பற்றுகிறோம்..

நாங்கள் தான் சனாதன தர்மத்தை காப்பாற்றுகிறோம்.. நாங்க தான் கோவிலை காப்பாற்றுகிறோம். அதனால் எல்லா கோவிலையும் எங்க கிட்டயே கொடுத்துருங்க என்று பாஜக சொல்கிறது. ஆனால், கட்டி முடிக்காத கோவிலை திறக்க கூடாது என்பது இந்து மதம். அதை அரசியல் ஆக்கி அரசியல் லாபத்திற்காக இந்துக்களை மதிக்காமல் உணர்வுகளை மதிக்காமல் உங்க ஆட்களே வரமாட்டேன் என்று சொல்லும் அளவுக்கு அந்த கோவிலை நாளை திறக்க போகிறீர்கள்.
இதேபோல், ஆனால், இவர்கள் பெரும்பான்மையாக இருக்கக் கூடிய... எங்க அண்ணி கூட உட்கார்ந்து இருக்காங்க அவுங்களுக்கும் கஷ்டமாகத்தான் இருக்கும். (அப்போது அங்கு அமர்ந்து இருந்த துர்கா ஸ்டாலின் லேசாக சிரித்தார்) ஏனென்றால் கட்டி முடிக்காத கோவிலை திறக்க கூடாது என்பது இந்து மதம்.
அதற்கு விடுமுறை வேற.. இதெயல்லாம் கேள்வி கேட்க கூடாது. கேள்வி கேட்டால் நமக்கு ICE வைப்பார்கள். ICE என்றால் என்ன இன்கம் டேக்ஸ், சிபிஐ. அமலாக்கத்தூறை இந்த மூன்றும் வரும். யார் கேள்வி கேட்டாலும் இந்த மூன்றும் தேடி வரும். இவற்றுக்கு எல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம். தென் மாவட்டங்களில் மழை வெள்ளம் ஏற்பட்ட போது தூத்துக்குடியில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது.
வீடுகள் எல்லாம் அடித்து செல்லப்பட்டது. அப்போது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வந்து பார்வையிட்டார். ஆனால் இதுவரை தென் மாவட்ட மழை பாதிப்பிற்கு ஒரு ரூபாய் கூட மத்திய அரசு நிதி வழங்கவில்லை. மழைவெள்ள ஆய்வு நேரத்தில் பூசாரி சம்பளம் ஏன் குறைவாக இருக்கிறது என்று தான் நிர்மலா சீதாராமன் ஆய்வு செய்கிறார். இவ்வாறு கனிமொழி எம்பி கூறினார். முன்னதாக முழுசாக முடிக்காமல் கோவிலை திறக்கலாமா? என்று சொல்லுங்க என கனிமொழி கேட்ட போது, அமைச்சர் சேகர்பாபு சிரித்தார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications