’மஞ்சள்’ கண்..தேனாய் பேசி பச்சை குழந்தையுடன் எஸ்கேப்! சிசிடிவியில் சிக்கிய கேடி லேடி..சேலம் ஷாக்
சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் பிறந்து ஐந்து நாட்களே ஆன ஆண் குழந்தையை பெண் கடத்திச் சென்று சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குழந்தையை பெற்ற பெண்ணின் தயாரிடம் பேசிய பெண் குழந்தையை தூக்கிச் சென்ற நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் காவல்துறையினர்.
தமிழகத்தைப் பொறுத்தவரை அதிக அளவிலான பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளிலேயே நடக்கிறது. செலவில்லாமல் அதே நேரத்தில் தரமான சிகிச்சை அளிக்கப்படுவதால் பெரும் பணக்காரர்கள் கூட அரசு மருத்துவமனைகளில் பிரசவம் செய்து கொள்கின்றனர்,

அதே நேரத்தில் பாதுகாப்பு குறைபாடு உள்ளிட்ட பல காரணங்கள் அரசு மருத்துவமனைகளில் குற்றச்சாட்டாக முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக குழந்தை கடத்தல் சம்பவங்களும் அதிகரித்து வருவது அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
இதை அடுத்து அரசு மருத்துவமனைகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருந்த போதும் குழந்தை கடத்தல் சம்பவங்கள் குறைந்தபாடில்லை. குழந்தைகளை கடத்தி வைக்கும் கும்பல் குழந்தைகள் இல்லாத தம்பதியினரை குறி வைத்து செயல்படுத்தி செயல்படுகிறது. பல ஆண்டுகள் குழந்தை இல்லாமல் தவிக்கும் தம்பதியினரை குறி வைத்து அவர்களிடம் லட்சக்கணக்கில் பணத்தைப் பெற்று குழந்தைகளை விற்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட தூத்துக்குடி, வேலூர், திருப்பூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் குழந்தை கடத்தல் சம்பவங்கள் நடைபெறுவதும் தொடர்ந்து அவர்களை கைது செய்வதும் நடந்து வருகிறது. இந்த நிலையில் குழந்தை பெற்ற பெண்ணின் தாயாரிடம் நைசாக பேச்சு கொடுத்த பெண் ஒருவர் அந்த குழந்தையை கடத்திச் சென்ற சம்பவமும், அதனை தொடர்ந்து சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் அப்பெண்ணை தேடி வருகின்றார் போலீசார்.
ஈரோடு அருகே பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் தங்கதுரை. இவரது மனைவி வெண்ணிலா தனது இரண்டாவது பிரசவத்திற்காக சேலம் அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் கடந்த ஐந்தாம் தேதி அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த ஐந்தாம் தேதி அன்று அறுவை சிகிச்சை மூலம் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.
வெண்ணிலாவையும் குழந்தையும் பார்த்துக் கொள்வதற்காக வெண்ணிலாவின் அம்மா இந்திரா மருத்துவமனையிலேயே தங்கி இருந்துள்ளார். அப்போது இந்திராவுடன் ஒரு பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவருக்கு உதவி செய்வது போல் அப்பெண் பேசி பழகி வந்துள்ளார். இதனையடுத்து அப்பெண்ணிடம் இந்திராவும் பேசியுள்ளார். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மதிய வேளையில் அந்தப் பெண் டாக்டர், குழந்தையின் கண் மஞ்சளாக இருப்பதால் சிகிச்சைக்கு அழைத்துக் கொண்டு வரச் சொல்லியதாக குழந்தையின் பாட்டி இந்திராவிடம் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து குழந்தையை அந்த பெண் எடுத்துக் கொண்டு பாட்டி உடன் சென்றபோது இந்திராவை மருந்து வாங்க வருமாறு திசை திருப்பி அனுப்பி வைத்துள்ளார். இதனையடுத்து இந்திரா அங்கு சென்றதும் அந்த பெண் குழந்தையுடன் மாயமானார். திரும்பி வந்து இந்திரா பார்க்கும்போது அந்தப் பெண் இல்லாததைக் கண்டு அதிர்ச்சடைந்து பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை.
இது குறித்து அரசு மருத்துவமனை புற காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பெயரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அங்கு உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அதில் ஒரு பெண் மாஸ்க் அணிந்து கொண்டு குழந்தையை கொண்டு செல்வது பதிவாகியிருந்தது.இது வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர் குழந்தை கடத்தல் சம்பவங்களை அடுத்து அரசு மருத்துவமனைகளில் குழந்தை அதன் தாய் மற்றும் உறவினர்கள் ஒருவர் மட்டுமே தங்கு அனுமதிக்கப்படுகிறது. அவர்கள் கைகளில் அடையாள அட்டை ஒட்டப்பட்டு அவர்கள் மட்டுமே குழந்தையை பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் கடும் சோதனைகளுக்குப் பிறகு உறவினர்கள் கூட பிரசவாடுகளில் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் இவ்வளவு பாதுகாப்பு சோதனைகளுக்கு மத்தியில் அந்த பெண் குழந்தையை கடத்திச் சென்றது எப்படி என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இதை அடுத்து பாதுகாவலர்கள் மீதும் காவல்துறையினர் விசாரணை பார்வையை திருப்பி உள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications