சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் மீதான முறைகேடு புகார்.. விரைவில் குற்றப் பத்திரிக்கை தாக்கல்!
சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது. முறைகேடு புகாரில் துணைவேந்தர் ஜெகநாதன், முன்னாள் பதிவாளர் தங்கவேலு மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் 15 நாட்களாக விசாரணை நடத்திய நிலையில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளனர்.
பல்கலைக்கழக விதிகளை மீறி, அரசு அனுமதி பெறாமல், பெரியார் பல்கலைகழக தொழில்நுட்ப தொழில்முனைவோர் மற்றும் ஆராய்ச்சி பவுண்டேசன் என்ற அமைப்பை தொடங்கி உள்ளதாக கூறி, சேலம் பெரியார் துணைவேந்தர் ஆர். ஜெகநாதன் உள்ளிட்டோருக்கு எதிராக, பல்கலைகழக ஊழியர் சங்கத்தின் சார்பில் இளங்கோவன் என்பவர் காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.

இந்த அமைப்பு குறித்து கேள்வி எழுப்பிய தன்னை, சாதி பெயரை குறிப்பிட்டு பேசியதாகவும் புகாரில் குற்றம் சாட்டியிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் கருப்பூர் காவல் நிலையத்தினர், வழக்குப்பதிவு செய்து, துணைவேந்தர் ஜெகநாதனை கைது செய்த நிலையில், அவரை நீதிமன்ற காவலில் வைக்க மறுத்த சேலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது.
இதனைத்தொடர்ந்து, தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி துணைவேந்தர் ஜெகநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு. வழக்கு தொடர்பான ஆவணங்களை சரிபார்த்ததில் ஜெகநாதனின் நடவடிக்கைகளில் குற்ற நோக்கம் இருப்பதாக தெரியவில்லை என்று கூறி, அவர் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதித்து 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உத்தரவிட்டிருந்தது.
இந்த தடையை நீக்க கோரி காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி வேல்முருகன். வழக்கின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட்டிருந்தார். துணைவேந்தர் மீதான வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது. முறைகேடு புகாரில் துணைவேந்தர் ஜெகநாதன், முன்னாள் பதிவாளர் தங்கவேலு மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் 15 நாட்களாக விசாரணை நடத்திய நிலையில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளனர்.
இந்நிலையில், சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது. முறைகேடு புகாரில் துணைவேந்தர் ஜெகநாதன், முன்னாள் பதிவாளர் தங்கவேலு மீது தொடரப்பட்ட வழக்கில் 15 நாட்களாக விசாரணை நடத்திய நிலையில் போலீசார் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications