சேலம் மாவட்டத்திற்கு 1,252 கோடியில் புதிய திட்டங்கள்.. சோதனையை சாதனையாக்குவேன்.. ஸ்டாலின் பேச்சு
சேலம்: சேலத்தில் சுமார் 1252 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திட்டங்கள் தொடங்கப்படும் எனக் கூறிய முதல்வர் ஸ்டாலின், 54 கோடியே 1 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 60 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 30,837 பயனாளிகள் பயன்பெறும் வகையில் 168 கோடியே 64 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
Recommended Video
சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் தனி விமானம் மூலம் சேலம் வந்தடைந்தார். அங்கு அவருக்கு கட்சியின் மூத்த நிர்வாகிகள் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் சீலநாயக்கன்பட்டியில் நடைபெற்ற அரசு விழாவில், "நமக்கு நாமே திட்டம்" மற்றும் "நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டம்" ஆகிய புதிய திட்டங்களை தொடங்கி வைத்து, 38 கோடியே 53 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 83 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, 54 கோடியே 1 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 60 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 30,837 பயனாளிகள் பயன்பெறும் வகையில் 168 கோடியே 64 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஸ்டாலின்
பின்னர் பேசிய முதல்வர் ஸ்டாலின், இன்றைக்கு மட்டும் 261.39 கோடி ரூபாய் மதிப்பில் முடிவுற்ற திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது எனவும், புதிய திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது எனக் கூறினார். இதில் 38.52 கோடி ரூபாய் மதிப்பிலான 83 முடிவுற்ற பணிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவும், 60 பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என தெரிவித்தார். இவை அனைத்திற்கும் மேலாக 26 அரசுத் துறைகளின் சார்பாக 168.64 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 30 ஆயிரத்து 837 குடும்பங்களுக்கு இந்த உதவிகள் சென்று சேர ஒரு மகிழ்ச்சியான விழாவாக, நல்ல நிகழ்ச்சியாக இது நடந்து கொண்டிருக்கிறது என மகிழ்ச்சி தெரிவித்தார்,

மாவட்டங்களை பிரித்து பார்ப்பதில்லை
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், நிகழ்ச்சியில் சேலம் மாவட்டத்தில் திமுக சார்பில் கொண்டுவரப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை பட்டியலிட்டு பேசியதோடு, மாவட்டங்களை தான் பிரித்துப் பார்ப்பதில்லை என்றும், இன்றைக்கு மட்டும் 1,242 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை இந்த மாவட்டத்திற்கு நான் அறிவிக்கப் போகிறேன், அதில் சிலவற்றை மட்டும் உங்களுக்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என்றார்.

முதல்வரின் புதிய அறிவிப்புகள்
சேலம் மாநகராட்சியில் பாதாள சாக்கடை இல்லாத பகுதிகளில் 530 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும், சுமார் 520 கிலோ மீட்டர் தூரத்துக்கு பாதாளச் சாக்கடைகள் அமைக்கும் பணி செயல்படுத்தப்படும், சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் தங்குதடையின்றி குடிநீர் கிடைக்கக்கூடிய வகையில் 158 கோடி ரூபாய் செலவில் கூடுதல் குடிநீர் வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்படும், சேலத்தில் உள்ள போடி நாயக்கன்பட்டி ஏரி, மூக்கனேரி, அல்லிக்குட்டை ஏரி போன்ற நீர்நிலைகளை மேம்படுத்துவதற்காக 69 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும், சேலம் அம்மாபேட்டை பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக பொதுமக்களின் நீண்ட காலக் கோரிக்கையை ஏற்று 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ரயில்வே மேம்பாலம் ஒன்று அமைக்கப்படும், தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காகவும், அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்காகவும் சேலத்தில் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா ஒன்று விரைவில் அமைய இருக்கிறது எனவும் முதலமைச்சர் கூறினார்.

கொலுசு தொழில் மேம்பாடு
கொலுசு உற்பத்தியில் தலைசிறந்து விளங்கக் கூடிய மாவட்டம் சேலம் மாவட்டம் எனற முதலமைச்சர் ஸ்டாலின், நூற்றுக்கும் மேற்பட்ட கொலுசு உற்பத்தியாளர்கள் உடனடியாக தொழில் தொடங்குவதற்கு வசதியாக பன்மாடி உற்பத்தி மையம் ஒன்று 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் எனவும், இளைஞர்களுக்கு அதிகமான வேலை வாய்ப்புகளை அளிக்கும் வகையில் கருப்பூரில் டைடல் மென்பொருள் தொழில் பூங்கா ஒன்று விரைவில் அமைக்கப்படும் உள்ளிட்ட உறுதிமொழிகளை எல்லாம் முதற்கட்டமாக நான் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

சேலத்திற்கு மீண்டும் வருவேன்
திட்டங்களை தொடங்கி வைத்து விட்டு செல்வது மட்டுமல்லாமல் திட்டங்கள் எவ்வாறு நடைபெறுகிறது என்றும் திட்டங்களை மீண்டும் தொடங்கி வைப்பதற்காக தான் அடிக்கடி மீண்டும் சேலத்திற்கு வருவேன் என்று கூறிய முதலமைச்சர், வீரபாண்டி ஆ.ராஜாவின் படத்திறப்பு நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.












Click it and Unblock the Notifications