அப்பா மாதிரி நல்ல மனசு.. போனை போட்ட ஸ்டாலினை.. நெகிழ்ந்து பாராட்டிய ராமதாஸ்.. கோபப்பட்ட அன்புமணி
சேலம்: சேலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த டாக்டர் ராமதாஸ், பிரச்சாரத்தை முடித்து விட்டு மேடையில் இருந்து கீழே இறங்கி வந்த போது திடீர் மயக்கமானார்.
சேலம் மண்ணில் அனல் பறக்கும் தேர்தல் களம்... பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸின் வருகையால் அலைமோதியது கூட்டம். வயது முதிர்வையும் பொருட்படுத்தாமல், தன் கட்சியின் வெற்றிக்காகத் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார் 'ஐயா'. ஆனால், யாரும் எதிர்பார்க்காத அந்த நிமிடம் அரங்கேறியது. பிரச்சாரத்தை முடித்து விட்டு மேடையில் இருந்து கீழே இறங்கி வந்த போது திடீர் மயக்கமானார்.

திடீரென அவருக்குக் கண் இருட்ட, நிலைகுலைந்து சரிந்தார். இதைக் கண்டு மேடையிலிருந்த நிர்வாகிகளும், கீழே நின்றிருந்த தொண்டர்களும் "ஐயா... ஐயா..." என்று அலறியபடி ஓடி வந்தனர். சேலம் தேர்தல் பரப்புரை களம் ஒரு கணத்தில் அதிர்ச்சியில் உறைந்தது.
பதற்றமான சூழலில், அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரைத் தாங்கிப் பிடித்து, அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்குத் தீவிர முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ரத்த அழுத்தம் மற்றும் சோர்வு காரணமாகவே இந்த மயக்கம் ஏற்பட்டதாகத் தகவல்கள் கசிந்தன. இருப்பினும், கூடுதல் பாதுகாப்பு மற்றும் மேலதிக சிகிச்சைக்காக அவர் உடனடியாக சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். உடனடியாக மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டு முதலுதவி கொடுக்கப் பட்டது. இதனையடுத்து மேலதிக சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோவில் சேர்க்கப்பட்டார் ராமதாஸ்.
ஸ்டாலின் போன் கால்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி காட்டுத்தீயாகப் பரவ, தமிழக அரசியலின் முக்கியத் தலைவர்கள் பலரும் கவலை தெரிவித்தனர். இந்த நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள், பா.ம.க.வின் முக்கிய நிர்வாகியான ஜி.கே. மணியைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.
பிரச்சராத்தில் இவர் மயக்கமடைந்த செய்தியை கேள்விப்பட்டதும், ஜிகேமணியை தொடர்புகொண்டு நீண்ட நேரம் நலம் விசாரித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அதேபோல, மருத்துவமனை டாக்டர்களை தொடர்பு கொண்டும் விசாரித்திருக்கிறார். டாக்டர் ராமதாஸின் உடல்நிலை குறித்து மிகுந்த அக்கறையுடன் விசாரித்த முதல்வர், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார். அதுமட்டுமல்லாமல், அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்களிடமும் நேரடியாகப் பேசி, "சிகிச்சையில் எவ்விதக் குறையும் இருக்கக் கூடாது" என அறிவுறுத்தினார்.
தங்களின் உடல் நலம் குறித்து முதல்வர் தம்மிடம் விசாரித்ததை டாக்டர் ராமதாசிடம் ஜிகே மணி சொல்ல, கலைஞரை போலவே அவரது மகனுக்கும் (ஸ்டாலின்) நல்ல மனசு தான்.
அன்புமணி பார்க்க வேண்டும்
எவ்வளவுதான் அரசியல் மனமாச்சரியங்கள் இருந்தாலும், உடல் நலம் பாதிக் கப்படும் தலைவர்களின் நலனில் அக்கறையாக இருப்பார் கருணாநிதி. அதே மனசு ஸ்டாலினுக்கும் இருக்கிறது என்று ஜிகேமணியிடம் சொல்லியிருக் கிறார் ராமதாஸ். இதனை ஜிகே மணி தரப்பிலிருந்து பாமகவினருக்கு பாஸ் செய்யப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, என் அப்பாவுக்கு ஏதேனும் ஆச்சுன்னா... சும்மா இருக்க மாட்டேன் என்று எச்சரிக்கை செய்த அன்பு மணி, டாக்டர் ராமதாசை சந்திக்க மருத்துவமனைக்கு செல்ல முயற்சித்தார். ஆனால், மருத்துவமனைக்கு போனாலும் உன்னை சந்திக்க அய்யா விரும்ப மாட்டார். போக வேண்டாம் என அவரது அம்மா சொன்னதால் மருத்தவ மனைக்கு செல்வதை தவிர்த்தாராம் அன்புமணி.
- சிறப்பு நிருபர் எழில்
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications