நிர்வாணப்படுத்தி பூஜை செய்கிறார்.. மிரட்டுகிறார்.. சாமியார் மீது பெண் பரபரப்பு புகார்
சேலத்தில் நிர்வாண பூஜை நடத்துவதாக போலி சாமியார் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது
சேலம்: "பெண்களை நிர்வாணப்படுத்தி பூஜை செய்கிறார்.. அதை செல்போனிலும் படம் பிடித்து கொண்டு மிரட்டி வரும் சாமியார் மீது நடவடிக்கை வேண்டும்" என்று சேலம் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு பெண் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
சேலம் சங்கர் நகரை சேர்ந்தவர் புஷ்பா. 52 வயதான இவர், புரட்சி கரசோஷலிஸ்ட் கட்சியின் கிளை செயலாளராக உள்ளார். இன்று, மாவட்ட போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனுவுடன் அவர் வந்திருந்தார். அந்த மனுவின் சுருக்கம் இதுதான்:

"கணவனை இழந்த நான், என் மகனுடன் சேர்ந்து கூலி வேலை பார்க்கிறேன். சங்கர் நகரில் ஒரு வாடகை வீட்டில் குடியிருக்கிறேன். அந்த வீட்டு உரிமையாளரின் மகன், வாடகைக்கு குடியிருந்த குடும்ப பெண்களை இருடியம் பூஜைக்கு நிர்வாணப்படுத்தி பூஜை செய்து வந்தார்.
இதனை உறவினர்கள் உதவியுடன் செல்போனில் பதிவு செய்து கொண்டு, மீண்டும் பூஜைக்கு அந்த பெண்களை அழைக்கிறார். அவர்கள் வரவில்லையானால், செல்போன் பதிவுகளை காட்டி மிரட்டுகிறார். பேஸ்புக்கில் போட்டுவிடுவேன் என்றும் அப்பாவி பெண்களை மிரட்டுகிறார். அதனால் நிறைய பெண்கள், தங்கள் கணவனிடம் இதை சொல்லாமல் வீட்டை காலி செய்துவிட்டனர்.
இந்த சம்பவங்கள் மாதிரியே என்னையும் இந்த நிர்வாண பூஜைக்கு ஈடுபட வற்புறுத்தினர். நான் மறுத்ததால் அவர்களுடைய நிலத்திற்கு பட்டா, சிட்டா, வாங்கி தருமாறு கேட்டதால் அதனை வாங்கி கொடுத்தேன். ஆனால் இப்போது, அந்த ஆவணங்கள் பெறுவதற்கு 1 லட்சம் ரூபாய் உன்னிடம் கொடுத்தேன் என்று பொய் சொல்கிறார்.
அசிங்கப்படுத்துவதாக மிரட்டுகிறார். இதுகுறித்து விசாரித்து நியாயம் வழங்க வேண்டும். இந்த சாமியாருக்கு ரவுடிகள் தொடர்பு அதிகம் என்பதால், ஊருக்கு பயந்தே ஊரை விட்டு போகிறேன்" என்று தெரிவித்துள்ளார். இந்த புகாரின்பேரில் போலீசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications