இரட்டை இலையில் நின்னா மட்டும் ஜெயிக்க முடியுமா? அவங்கள தோளில் சுமந்து திரியும்வரை.. சிபிஎம் அட்டாக்!
பாஜகவை தோளில் சுமந்து திரிவதால் அதிமுகவை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என சிபிஐஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சேலம் : அதிமுக மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும், கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைக்கும் விவகாரத்தில், சர்ச்சை இல்லாமல் அனைத்து தரப்பினரும் ஏற்கும் வகையில் பேனா சிலை அமைத்திட முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
மேலும், மத்திய பட்ஜெட்டில் முக்கியமான துறைகளுக்கு குறைவான நிதி ஒதுக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வரும் பிப்ரவரி 27 மற்றும் 28 ஆகிய நாட்களில், தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

பாஜகவை தோளில் சுமக்கும் அதிமுக
சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், "ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். அதிமுக மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. அதிமுகவில் வேட்பாளர் அறிவித்து, வேட்பு மனு தாக்கல் செய்வதற்குள் அக்கட்சி திணறிவிட்டது. ஓ.பன்னீர்செல்வம் வேட்பாளரை திரும்பப் பெற்றதால் இரட்டை இலை எடப்பாடி அணிக்கு கிடைத்துள்ளது. அதிமுக வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் நின்றால் வெற்றி பெற்று விடலாம் என்பது உண்மையல்ல. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு தான் பர்கூர் தொகுதியில் ஜெயலலிதா தோல்வி அடைந்தார். பாஜகவை தோளில் சுமந்து திரிவதால் அதிமுகவை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை" எனத் தெரிவித்தார்.

அதானி
மேலும் பேசிய அவர், அதானி குழும முறைகேடு தொடர்பாக நாடாளுமன்ற உயர்மட்ட குழு விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற
உயர்மட்டக் குழு விசாரிக்க மத்திய அரசுக்கு ஏன் தயக்கம்? ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வந்த பிறகு, அதானி குழுமத்தின் பங்குகள் சரிபாதியாக குறைந்துவிட்டன. இதனால் அதானி குழுமத்தில் முதலீடு செய்த பொதுத்துறை நிறுவனங்களுக்கும், மக்களுக்கும் தான் பாதிப்பு ஏற்படும் எனத் தெரிவித்தார்.

பட்ஜெட்டுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
மத்திய பட்ஜெட்டில் நூறு நாள் வேலை திட்டத்துக்கு கடந்த பட்ஜெட்டில் ரூ.79 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போதைய பட்ஜெட்டில் ரூ.60 ஆயிரம் கோடி என குறைக்கப்பட்டுள்ளது. எனவே மத்திய பட்ஜெட்டில் நூறு வேலை திட்டம், கிராமப்புற வளர்ச்சி, கல்வி, சுகாதாரம் உள்ளிட்டவைகளுக்கு நிதி குறைவாக ஒதுக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வரும் பிப்ரவரி 27 மற்றும் 28 ஆகிய நாட்களில், தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

கருணாநிதி பேனா நினைவுச் சின்னம்
தொடர்ந்து பேசிய கே.பாலகிருஷ்ணன், தமிழ்நாடு அரசு நிதி நெருக்கடியில் உள்ளது. படிப்படியாக வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என திமுக அரசு தெரிவித்துள்ளது. எனவே, இந்த ஆட்சி காலம் முழுவதும் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைக்கும் விவகாரத்தில், சர்ச்சை இல்லாமல் அனைத்து தரப்பினரும் ஏற்கும் வகையில் பேனா சிலை அமைத்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

விவசாயிகளுக்கு
மேலும், காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், கனமழை காரணமாக பயிர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு, ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மத்திய அரசு ஈரப்பத விதிமுறைகளை தளர்த்த தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளார். இருந்தபோதிலும் கனமழையால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
-
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications