ஷாக்.. 5 லிட்டர் ஆசிட்டை ஊற்றி.. மனைவியை கொன்ற கொடூரன்.. மாமியாரையும் விடலை.. சேலத்தில் பரபரப்பு..!
மனைவி மீது ஆசிட் வீசிய கணவனை போலீசார் தேடி வருகிறார்கள்
சேலம்: குடும்பத் தகராறு காரணமாக மாமியார் மற்றும் மனைவி மீது கணவன் ஆசிட் ஊற்றிக் கொல்ல முயன்ற நபரை சேலம் போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
சேலம் குகை பகுதியை சேர்ந்தவர் இயேசுதாஸ்.. 50 வயதாகிறது.. இவரது மனைவி ரேவதி.. 47 வயதாகிறது.. நாமக்கல் மாவட்டம் வையப்பமலையை சேர்ந்தவர் ரேவதி.. கல்யாணம் ஆகி 20 வருடங்கள் ஆகிறது..
இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இயேசுதாசுக்கு ரேவதி மீது சந்தேகம்.. இதனால், ரேவதிக்கும், யேசுதாசுக்கும் இடையே அடிக்கடி தகராறு வந்து போகுமாம்..

சமாதானம்
எப்போது தகராறு நடந்தாலும், இவர்களை அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து சமாதானம் செய்துவைத்து விட்டு போவார்களாம்.. ஆனாலும் மனைவி மீது கணவனுக்கு சந்தேகம் தீரவில்லை.. ஒருகட்டத்தில் சந்தேகம் அதிகமாகி அடித்து உதைத்து சித்ரவதை செய்து வந்ததாக தெரிகிறது... இதனால் சில மாதங்களுக்கு முன்பு ரேவதி, அவரது அம்மா வீட்டுக்கு சென்று விட்டார்.

புகார்
இந்த நிலையில் ரேவதியும் அவரது அம்மா ஆராயி என்பவரும், இயேசுதாஸ் மீது சேலத்தை சேர்ந்த வக்கீல் ஒருவரிடம் புகார் கொடுக்க சென்றனர்.. பிறகு, சேலம் டவுனில் உள்ள மகளிர் ஸ்டேஷனிலும், தன்னை கணவர் கொடுமைப்படுத்துவதாக ரேவதி புகார் செய்தார்.. இந்த புகார்களை தந்துவிட்டு, ஊர் திரும்ப பஸ் ஸ்டாண்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.

சிகிச்சை
அப்போது அவர்களின் பின்னாடியே, இயேசுதாஸ் வந்தார்.. திடீரென தான் மறைத்து எடுத்து வந்திருந்த ஆசிட் பாட்டிலை திறந்து, ரேவதி மீது ஊற்றிவிட்டு தப்பி ஓடினார்.. மொத்தம் 5 லிட்டர் ஆசிட் இருக்குமாம்.. அது அப்படியே ரேவதியின் முகம், மற்றும் மார்பு பகுதியில் கொட்டி வெந்தது.. இதனால் வலியால் ரேவதி அலறி துடித்தார்... இதை பார்த்த பொதுமக்கள் அங்கு ஓடிவந்து அவரை மீட்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்... அங்கு இப்போது ரேவதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .

முதலுதவி
இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட சேலம் டவுன் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.. ரேவதி மீது வீசப்பட்ட ஆசிட், பக்கத்தில் வந்து கொண்டிருந்த மாமியார் மீதும் பட்டுவிட்டது.. இதில் அவர் லேசான காயம் அடைந்தார்.. அவருக்கு முதலுதவி சிகிச்சை தரப்பட்டு, பிறகு போலீசார் அவரிடம் விசாரணை செய்தனர்... ஆசிட்டை வீசிவிட்டு, இயேசுதாஸ் தப்பி ஓடிவிட்டார்.. அவரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள்.. சேலம் பஸ் ஸ்டாண்டில், பட்டப்பகலில் நடந்த ஆசிட் வீச்சு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications