அடச்சே... இப்படியெல்லாமா பண்ணுவாங்க.. ஆபாச அர்ச்சனையில் "ஸ்ரேயா".. இப்ப ஆளுக்கு ஒரு பக்கம் அட்மிட்
திருநங்கை ஒருவர் மனஉளைச்சல் காரணமாக தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை தந்துள்ளது
சேலம்: ஒரே வீட்டில் தம்பதி இருவருமே ஆளுக்கு ஒருபக்கம் விஷத்தை குடித்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சேலத்தில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. 2 பேருக்குமே தீவிரமான சிகிச்சையும் நடந்து வருகிறது.. என்ன நடந்தது?
சேலத்தைச் சேர்ந்தவர் திருநங்கை ஸ்ரேயா.. 28 வயதாகிறது.. இவர் கிச்சிபாளையத்தை சேர்ந்த ராம் என்ற ராம்குமாரை காதலித்தார்.. ராமுக்கு 25 வயதாகிறது.. அவரும் ஸ்ரேயாவை விரும்பியதையடுத்து, இருவருமே திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
கடந்த சில வருடங்களாகவே, தாதகாப்பட்டி பகுதியில் தனியாக வீடு ஒன்றை வாடகைக்கு பிடித்து வசித்து வந்தனர்.. இந்த நிலையில், இவர்களுக்குள் பணப்பிரச்சனை வெடித்துள்ளது.

ஆசை காதலன்
சில மாதங்களுக்கு முன்பு பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக 2 பேருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.. அதாவது ஸ்ரேயாதான் ராம்குமாருக்கு நிறைய பணத்தை செலவு செய்துவந்ததாகவும், கேட்கும்போதெல்லாம் பணத்தை தந்து உதவி வந்ததாகவும் தெரிகிறது.. இந்த விவகாரத்தில் பிரச்சனை வந்துவிடவும், ஸ்ரேயாவை விட்டு ராம் விலகி சென்றுவிட்டார்.. இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரேயா, ராம்குமாரை தேடி சென்றார்.. இதுவரை செலவுக்கு கொடுத்த பணத்தை எல்லாம் திரும்ப கேட்டுள்ளார்.. அதில் மறுபடியும் 2 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது...

ஆபாச பேச்சு
அப்போது, ஆத்திரமடைந்த ராம்குமார் திருநங்கை ஸ்ரேயாவை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் ராம்குமாரின் குடும்பத்தினரும், அவருடன் சேர்ந்துகொண்டு, ஸ்ரேயாவை ஆபாசமாக திட்டி உள்ளதாக தெரிகிறது.. அத்துடன் ஸ்ரேயாவுக்கு கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சியும், மனவேதனையும், அவமானமும் அடைந்த ஸ்ரேயா அழுதுக்கொண்டே வீட்டுக்கு வந்துள்ளார்.. நேற்று மதியம், அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளையும் சாப்பிட்டுவிட்டு, அங்கேயே மயங்கி விழுந்துள்ளார்.. இதை பார்த்த உடனிருந்த திருநங்கைகள், பதறிப்போய் அவரை மீட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

சீரியஸ் கண்டிஷன்
அங்கு ஸ்ரேயாவுக்கு இப்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.. ஸ்ரேயாவுக்கு சீரியஸாக இருக்கிறதாம்.. அவருடன் இருந்த திருநங்கைகள் இதை பற்றி சொல்லும்போது, "ராம்குமார் என்கிற ராம் ஒரு குற்றவாளி.. ஏற்கனவே குண்டாஸில் கைதாகி ஜெயிலுக்கு சென்று வெளியே வந்தவர். அவருக்கு தேவையான பண உதவி உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் ஸ்ரேயாதான் செய்தார். ஆனால், இப்போது அவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய அவர் குடும்பத்தினர் முயற்சி செய்து வருகின்றனர்.. இந்த திருமணத்துக்கு ராமும் தயாராகிவிட்டார்.. இது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

திருநங்கையின் காதல்
பணத்தையும் இழந்து தன்னை விட்டு நிரந்தரமாக ராம் பிரிந்து சென்றதால் மனமுடைந்த ஸ்ரேயா தற்கொலைக்கு முயற்சி செய்தார்... ராம் மீது உரிய நடவடிக்கை எடுத்து நியாயம் வழங்க கிச்சிபாளையம் போலீசார் முன்வர வேண்டும்" என்றனர்.. ஸ்ரேயாவை ராம்குமார் திருமணம் செய்து கொண்டது அவரது பெற்றோருக்கு ஆரம்பத்தில் இருந்தே பிடிக்கவில்லையாம்.. அதனால்தான், அவருக்கு வேறு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைப்பதாகவும், இதனால் திருநங்கையை விட்டு விலகுமாறு அவரது பெற்றோர் வற்புறுத்தி வந்துள்ளனர்.. இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக ஸ்ரேயாவுக்கும், ராம்குமாருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் சம்பந்தமாக பிரச்சினை ஏற்படவும், இதையே சாக்காக வைத்து, ராம்குமார் பிரிந்து விட்டதாக தெரிகிறது.

விஷபாட்டில்
அன்பு காட்டி, அளவுக்கு அதிகமாக காதலித்து திருமணமும் செய்த நிலையில், பணத்துக்காகத்தான் இத்தனை நாள் ஒன்றாக வாழ்ந்தாரா? என்று நொந்து போய் அழுதாராம் ஸ்ரேயா. இதனிடையே, மன உளைச்சலில் இருந்த ராம்குமார், பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றுள்ளார்.. அங்கு மதுஅருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.. பிறகு, அவரும் திடீரென விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

டபுள் ஷாக்
இந்த சம்பவங்கள் குறித்து கிச்சிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குண்டர் சட்டத்தில் கைதாகி ராம்குமார் ஜெயிலில் இருந்தபோது, அவரை வெளியே கொண்டு வருவதற்கு ஸ்ரேயாதான் அதிக முயற்சி எடுத்தாராம்.. கணவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்து வருவதை அறிந்த திருநங்கை தற்கொலைக்கு முயன்றதும், மறுபுறம் திருநங்கையின் கணவரும் விஷம் குடித்த சம்பவமும் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... 2 பேருக்குமே ஆளுக்கு ஒருபக்கம் ட்ரீட்மென்ட்டும் தீவிரமாக நடந்து வருகிறது.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications