வேட்டியை மடிச்சு கட்டிட்டு... புல்லட் பைக்கில் பறந்த அமைச்சர் கே என் நேரு.. எங்கே போகிறார் பாருங்க
சேலம்: தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு சேலத்தில் இன்று புல்லட் பைக்கை எடுத்துக் கொண்டு சென்ற வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அவர் எங்கே சென்றார். என்ன நடந்தது என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்,
திமுகவில் இப்போது இருக்கும் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவர் கே. என். நேரு.. நகராட்சி நிர்வாக துறை அமைச்சராக இருந்த நேரு தொடர்ச்சியாகச் செய்திகளில் இடம்பெற்று வருகிறார்.

கேஎன் நேரு: நேற்று கூட திருச்சியில் ஸ்ரீரங்கத்தில் புதிய பஸ் ஸ்டாண்டு கட்டும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது 'அடுத்த முதல்வரே நீங்கதாண்ணே' என்று புரோகிதர் சொல்ல கேஎன் நேரு ஒரு நொடி பதறிவிட்டார். அதன் பிறகு ஒருமாதிரி நிலைமை சமாளித்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இதற்கிடையே அதேபோல இன்றும் அவரது வீடியோ ஒன்று டிரெண்டாகி வருகிறது. அது குறித்து நாம் பார்க்கலாம்.
திமுகவின் மூத்த அரசியல்வாதியும், திருச்சி திமுகவின் முகமாகவும் இருப்பவர் கே.என். நேரு.. திமுகவின் கோட்டையாகத் திருச்சியை மாற்றிக் காட்டியதில் கே.என் நேருவுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. இளம் வயதில் இருந்தே திமுக கட்சி உறுப்பினராகச் சேர்ந்த அவர், தொடர்ந்து திமுகவில் பயணித்து வருகிறார். 1989இல் லால்குடி தொகுதியில் முதலில் களமிறங்கிய கே.என் நேரு எப்போதே தேர்தலில் வென்றார்.
அமைச்சர் நேரு: அதன் பிறகு இதுவரை அவர் 5 முறை வெற்றி பெற்றுள்ளார்.. கடைசியாகத் திருச்சி மேற்கு தொகுதியில் கடந்த 2016 மற்றும் 2021 என அடுத்தடுத்து இவர் வென்ற நிலையில், 2021இல் ஸ்டாலின அமைச்சரவையில் அமைச்சராகவும் பதவியேற்றார். கடந்த காலங்களில் மின்சாரம், பால், செய்தி மற்றும் தொழிலாளர் நலன் என பல துறைகளுக்கு அவர் அமைச்சராகப் பதவியேற்ற அவருக்கு, இந்த முறை கே.என். நேருவுக்கு நகராட்சி நிர்வாக துறை ஒதுக்கப்பட்டது.
வீடியோ: இதற்கிடையே கே என் நேரு கடந்த இரண்டு நாட்களாகத் தொடர்ந்து நேருவின் வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. நேற்று 'அடுத்த முதல்வரே நீங்கதாண்ணே' என்று புரோகிதர் சொல்ல அதற்கு அவர் பதறிப்போனார். இதற்கிடையே இப்போது மற்றொரு வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. சேலத்தில் இன்று புல்லட் பைக்கை எடுத்துக் கொண்டு அமைச்சர் நேரு சென்ற வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக 2ஆவது இளைஞர் அணி மாநாடு நடைபெறுகிறது. வரும் டிச.24ஆம் தேதி இந் மாநாடு நடைபெறும் நிலையில், இந்த மாநாட்டுப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. இதற்காக 100 ஏக்கர் பரப்பளவில் மாநாடு நடக்கும் இடம் ரெடியாகி வருகிறது. மாநாட்டிற்கு வந்தவர்கள் அமரும் இடம், தேவையான அடிப்படை வசதிகள் என அனைத்தும் ரெடியாகி வருகிறது.
புல்லட் பைக்: இந்த பணிகளை அமைச்சர் நேரு ஸ்டைலாக புல்லட் பைக்கில் சென்று ஆய்வு செய்தார். வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு புல்லட்டில் ஏறிய அவர் மாநாட்டுப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில், பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தச் சூழலில் தான் நேருவின் வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.












Click it and Unblock the Notifications