கிருஷ்ணர் குளிக்கும் பெண்களை எட்டிப்பார்த்தார்.. இன்று ஜெயிலில் போடுவாங்க-திமுக எம்பி செந்தில்குமார்
சேலம்: பெண்கள் குளிப்பதை கிருஷ்ணர் எட்டிப்பார்த்தது ஈவ் டீசிங் என்றும், இன்று அதுபோல் செய்தால் சிறையில் அடைப்பார்கள் எனவும், ராமரை விட ராவணனே வலிமையானவர் என்றும் தருமபுரி தொகுதி திமுக எம்பி செந்தில் குமார் பேசி இருக்கிறார்.
திராவிடர் விடுதலை கழகம் சார்பில் சேலத்தில் 'இது தமிழ்நாடு- இளம் தலைமுறையின் எச்சரிக்கை மாநாடு' என்ற பெயரில் நடைபெற்ற நிகழ்வில் நடைபெற்ற நிகழ்வில் தருமபுரி தொகுதி திமுக எம்பி செந்தில்குமார் கலந்துகொண்டு அறிமுக உரையாற்றினார். அப்போது பகுத்தறிவு சார்ந்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார்.

அவர் தனது உரையில், "மத நம்பிக்கைகளின் பெயரால் இருக்கும் மூட நம்பிக்கைகளை பகுத்தறிவின் மூலமாகவே தகர்த்தி எரிந்து இருக்கிறோம். இதை இளைஞர்களுக்கும், அடுத்த தலைமுறையினருக்கும் எடுத்து செல்ல வேண்டும். ஏனென்றால் கலீலியோ இந்த பிரபஞ்சத்தின் மையப்பகுதியாக இருப்பது பூமி அல்ல சூரியன் என்று சொல்லும்போது அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனென்றால் அது அவர்களின் மத நம்பிக்கையாக இருந்தது.
அதை அவர் நிரூபித்து காட்டினார். அதற்கு அவர் கொடுத்த விலை, வாழ்நாள் முழுவதும் வீட்டுச் சிறை. அதேபோல் பல்வேறு விசயங்கள் இதிகாசங்களில் தவறாக சொல்லப்பட்டு உள்ளன. ராமாயணம், மகா பாரதத்தில் பல்வேறு விசயங்கள் உள்ளன. எனவே நமது குழந்தைகளுக்கு பகுத்தறிவை சொல்லிக் கொடுக்க வேண்டும். அதில் இருக்கக்கூடிய கதைகளில் 2, 3 உதாரணங்களை மட்டும் சொல்கிறேன்.
அதாவது, பெண்கள் தங்கள் ஆடைகளை கரையோரம் வைத்துவிட்டு குளித்துக்கொண்டு இருக்கக்கூடிய இடத்தில், யாரோ ஒருவன் சென்று அந்த பெண்களின் ஆடைகளை எல்லாம் எடுத்துக்கொண்டு மரத்தின் மீது அமர்ந்து அந்த பெண்கள் குளிப்பதை ரசிப்பதும், அவர்கள் ஆடையை கேட்கும்போது கொடுக்க மாட்டேன் என்று சொல்வதும் என்ன மாதிரியான செயல்?
இப்படி யாராவது தங்களின் பையனை வளர்ப்பார்களா? இல்லை இன்று உலகத்தில் இதுபோன்று நடந்தால் என்ன சொல்வோம்? அவர்கள் சொல்லும் கிருஷ்ண பரமாத்மா இதைதான் செய்தார். கிருஷ்ண பரமாத்மா இதைதான் அவருக்கு சொன்னார். இன்று இருக்கக்கூடிய சூழலில் அவரை எல்லாம் உள்ளே தூக்கி ஜெயிலில் போடுவார்கள். இதெல்லாம் ஈவ் டீசிங்.

அதேபோல் ராமாயணத்தை எடுத்துக்கொண்டால் ராமர் சீதா அவர்களை மீட்பதற்காக ஒரு பாலம் அமைத்துத் தந்தார். அந்த பாலம்தான் சேது சமுத்திர திட்டத்திற்கு தடையாக இருக்கிறது என்று சொல்கிறோம். ஆனால், ஒன்றை யோசித்து பாருங்கள். யார் சீதாவை கடத்தினார்? ராவணன். அவர் எந்த பாலம் வழியாக வந்தார்? எந்த பாலம் மூலமாகவும் வரவில்லை. திருப்பி செல்லும்போது எந்த பாலம் மூலமாகவும் செல்லவில்லை. அப்படியென்றால் இருவரில் யார் வலிமையானவர்? ராமரா? ராவணனா?
ராவணன்தான் வலிமையானவர். இதுபோன்ற பகுத்தறிவை நாம் சொல்லிக் கொடுக்க வேண்டும். மகா பாரதத்தை எடுத்துகொண்டால் ஒரு சூதாட்டம் நடந்தது. அதில் பெண்களுக்கான சுதந்திரம் இல்லை. 5 பேர் ஒரு பெண்ணை திருமணம் செய்வது என்ன மாதிரியான மனநிலை என்றே தெரியவில்லை. அதுவும் ஒரு பெண்ணின் அனுமதி இல்லாமலேயே, அவரை வைத்து சூதாடுகிறார்கள்.
இன்று ஆன்லைன் சூதாட்டம் பற்றி எல்லாம் பேசுகிறோம். போராடி ஒரு தடையை பெற்றோம். தடையை பெறுவதற்கு முன்பாக ஆளுநர் என்ன சொன்னார்? இது ஒரு அறிவு சார்ந்த விளையாட்டு என்றார். அப்படியென்றால் 5 பேர் மனைவியை வைத்து சூதாடியது என்ன மாதிரியான அறிவு. பகுத்தறிவுதான் நமது ஒரே ஆயுதம். தமிழ்நாட்டையும் பகுத்தறிவையும் என்றும் பிரித்து ஆள முடியாது. பெரியார் இருக்கும் வரை நாம் என்றுமே பகுத்தறிவுவாதிகளாகவே இருப்போம். இது பெரியார் மண்." என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications