தென் மாவட்ட மக்களை எதிரியாக பார்க்கிறார் இபிஎஸ்.. பசும்பொன் வராமலிருக்க காரணம் அதுதான்.. புகழேந்தி!
சேலம்: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த எடப்பாடி பழனிசாமி நேரில் வராமல் இருப்பது ஏன் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சினை காரணமாக ஓபிஎஸ் - இபிஎஸ் தனித்தனியாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி பக்கம் இருந்தாலும், தென் மாவட்ட தொண்டர்கள் மத்தியில் ஓபிஎஸ் பலத்தோடு இருப்பதாக பார்க்கப்படுகிறது.
இதனை நிரூபிக்கும் வகையில் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு ஓ பன்னீர் செல்வம் மரியாதை செலுத்தவுள்ளார். இதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து கட்சி நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனால் நாளை ஓபிஎஸ் தனது செல்வாக்கு என்ன என்பதை அனைவருக்கும் காட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் எடப்பாடி பழனிசாமி
ஆனால் எடப்பாடி பழனிசாமி குருபூஜை விழாவில் கலந்துகொள்ளவில்லை. இதனால் சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு மரியாதை செலுத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிமுக முன்னாள் அமைச்சர்களான ஆர்பி உதயகுமார், செல்லூர் ராஜு உள்ளிட்டோர் பசும்பொன் சென்று மரியாதை செலுத்த உள்ளனர்.

புகழேந்தி கேள்வி
இந்த நிலையில் சேலத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், தென் மாவட்ட மக்களை பார்த்தால் எடப்பாடி பழனிசாமி எதிரியாக பார்க்கிறார். அதன் எதிரொலி தான் நாளை பசும்பொன்னில் நடைபெறும் விழாவில் பங்கேற்காமல் இருப்பதற்கு காரணம். தென் மாவட்ட மக்களின் வாக்குகள் வேண்டும், ஆனால் செல்ல மாட்டேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார்.

அதிமுக கோட்டை
தென் தமிழகம் அதிமுகவின் கோட்டையாக இருக்கிறது. ஆனால் வன்னியர்களுக்கான 10.5 சதவிகித இடஒதுக்கீடு அறிவித்தது அதிமுக தேர்தலில் தோல்வியடைய முக்கிய காரணமாக அமைந்தது. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை எடப்பாடி பழனிசாமி தயாராக இல்லை. ஆனால் தென் மாவட்ட மக்கள் இல்லாமல் தமிழ்நாட்டில் யாரும் ஆட்சியமைக்க முடியாது.

ஏன் பசும்பொன் வரவில்லை?
அதிமுக முன்னாள் அமைச்சர்களான ஆர்பி உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசனால், ஏன் எடப்பாடி பழனிசாமி பசும்பொன் வரவில்லை என்ற கேள்விக்கு பதிலளிக்க முடியவில்லை. பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயண மேற்கொள்ளும் எடப்பாடி பழனிசாமியால், ஏன் பசும்பொன் வந்து மரியாதை செலுத்த முடியவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications