சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எடப்பாடியின் வீட்டுக்கே வந்தாச்சு.. அதிமுகவுக்கு இன்னொரு எம்எல்ஏ கன்பார்ம்.. இந்து அமைப்புகள் அதிரடி

பார்வர்டு பிளாக் கட்சி தன்னுடைய ஆதரவை காங்கிரஸ் கட்சிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது

Google Oneindia Tamil News

சேலம்: பாரத இந்து பரிவார் அமைப்பு, அதிமுகவுக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளது.. அத்துடன் அக்கட்சியின் தேசிய தலைவர் ராஜன் தலைமையில், எடப்பாடி பழனிச்சாமி வீட்டிற்கே நேரில் வந்து சந்தித்து ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்..

விரைவில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடக்க போகிறது.. திமுக கட்சியானது, தன்னுடைய கூட்டணிக்கு தொகுதியை ஒதுக்குவதாக தெரிவித்து உள்ளது..

எனினும், இந்த முறை தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் திமுக இப்போதே களத்தில் தீவிரமாக குதித்துவிட்டது..

சாமர்த்தியம்.. வேறு மாதிரி காய் நகர்த்திய எடப்பாடி! விருப்பமனு கேட்டது ஏன்? இதான் காரணமா? அப்போ பாஜகசாமர்த்தியம்.. வேறு மாதிரி காய் நகர்த்திய எடப்பாடி! விருப்பமனு கேட்டது ஏன்? இதான் காரணமா? அப்போ பாஜக

 ப்ளான் பாஜக

ப்ளான் பாஜக

மற்றொருபுறம், தமிழ்நாட்டில் தற்போதைய அரசியல் சூழலில், திமுகவை எதிர்த்து களம் காண அதிமுக மட்டுமே பெரிய கட்சி என்ற கருத்து பாஜகக்கு தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த கட்சியும் களம் காண முயன்று வருகிறது.. அதிமுகவில் நிலவும் குழப்பத்தால் இடைத்தேர்தலில் தங்களது வேட்பாளரை நிறுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாக சொல்லப்பட்டு வருகிறது.. காரணம், ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுவதன் மூலம், தங்களது பலத்தை அறிய முடியும் என்று பாஜக கருதுவதாக தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கிறது.. ஆனால், இதுவரை எந்த முடிவையும் பாஜக அறிவிக்காமல் உள்ளது.

 கமலாலயம்

கமலாலயம்

திமுக கூட்டணி சார்பில் களமிறங்கும் காங்கிரஸ் கட்சி, தங்களுக்கான ஆதரவை பல்வேறு கட்சிகளிடம் கோரி வருகிறது. அதேபோல, அதிமுக கூட்டணி கட்சித் தலைவர்களை, முன்னாள் முதல்வர் எடப்பாடி தரப்பினரும், ஓபிஎஸ் தரப்பினரும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்கள்... அந்தவகையில், எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் கேபி முனுசாமி, தங்கமணி, வேலுமணி, செங்கோட்டையன், ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள், கமலாலயத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து ஆதரவு கேட்டார்கள்.. அதேபோல, ஓபிஎஸ் தலைமையில் அவரது அணியின் கமலாலயம் சென்று பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்து ஆதரவு கோரினர்.

 ராஜன் அதிரடி

ராஜன் அதிரடி

இந்நிலையில், இந்நிலையில் பாரத இந்து பரிவார் அமைப்பு, அதிமுகவுக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளது.. அக்கட்சியின் தேசிய தலைவர் ராஜன் தலைமையில், எடப்பாடி பழனிச்சாமி வீட்டிற்கே நேரில் வந்து சந்தித்து ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.. அப்போது பேசிய பாரத இந்து பரிவார் அமைப்பின் தேசியத் தலைவர் ராஜன், " அதிமுக ஆட்சி காலத்தில் இந்துக்கள் மற்றும் அவர்களின்உடமைகளும், கோவில்களும் பாதுகாக்கப்பட்டது. ஆனால் இப்போது திமுக ஆட்சியில் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.. அதனாலேயே அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிக்க வந்துள்ளோம்.. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு பணியாற்றவும் தயாராக உள்ளோம்.. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, சொன்னபடி நாங்கள் செயல்பட இருக்கிறோம்" என்றார்.

 சுரேஷ் கண்ணன்

சுரேஷ் கண்ணன்

இவர்களை தொடர்ந்து. மனித உரிமைகள் கழகமும், எடப்பாடி பழனிசாமிக்கு தன் ஆதரவை தந்துள்ளது.. அக்கழகத்தின் பொதுச்செயலாளர் சுரேஷ் கண்ணன் தலைமையில் முக்கிய நிர்வாகிகள், எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்திற்கு நேரில் வந்து சந்தித்தனர்... இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய, சுரேஷ் கண்ணன், தமிழகத்தில் திமுக அரசு பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி வருகிறது. இதற்கு பாடம் புகட்டும் வகையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிபெற செய்ய உழைப்போம். தேர்தல் பணியாற்றவும் தயாராகவும் உள்ளோம்.

 வலுப்படும் கரம்

வலுப்படும் கரம்

தமிழகத்தில் இடைத்தேர்தலில் ஆளும் கட்சி மட்டும் தான் வெற்றி பெறும் என்ற நிலை உள்ளது.. இதை மாற்றி, அதிமுகவை வெற்றி பெற செய்து சட்டமன்றத்தில் கூடுதலாக ஒரு உறுப்பினரை கொண்டு வர முயற்சி மேற்கொள்வோம்.. அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் கரங்களை வலுப்படுத்துவோம்.. காரணம், அதிமுக ஆட்சி காலத்தில் இந்துக்கள் மற்றும் இந்துக்கள் உடமைகளும், கோவில்களும் பாதுகாக்கப்பட்டது. ஆனால் இப்பொழுது திமுக ஆட்சியில் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுதால், அதிமுகவிற்கு ஆதரவு தெரிவிக்க இப்படி வந்துள்ளோம் என்றார்.

 உச்சக்கட்ட குழப்பம்

உச்சக்கட்ட குழப்பம்

கூட்டணி கட்சிகளை தவிர இந்து அமைப்புகளும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவை தர துவங்கி உள்ள நிலையில், பாஜகவின் நிலைப்பாடு இதுவரை தெரியவில்லை.. ஓபிஎஸ்ஸும் வேட்பாளரை நிறுத்த உள்ள நிலையில், இவர்களில் இருவரில் யாருக்கு ஆதரவு தரப்போகிறது என்பதும் எதிர்பார்ப்பாக உள்ளது.. எனினும், ஓபிஎஸ்ஸைவிட, பெரும்பாலான அமைப்புகள் இதுவரை எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Edapadi palanisamy will win in the By election, says bharatiya hindu parivar and supports aiadmk
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X