அவங்க சொன்னாங்க செஞ்சாங்களா? அதிமுகவினர் நெஞ்சை நிமிர்த்தி ஓட்டு கேட்கலாம் -எடப்பாடி பழனிசாமி பளீர்
கடந்த சட்டமன்ற தேர்தலில் 525 அறிவிப்புகளை வெளியிட்ட திமுக, ஆட்சி பொறுப்பேற்றவுடன் ஒரு அறிவிப்பை கூட நிறைவேற்றவில்லை எனவும், தமிழக மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி தந்துள்ளதால் அதிமுகவினர் நெஞ்சை நிமிர்த்தி வாக்கு கேட்கலாம் என தமிழக எதிர்கட்சி தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19 ம் தேதி நடைபெற உள்ளது. சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வார்டு வரையறை செய்யப்பட்டபடி, ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.
இதற்காக தமிழகம் முழுவதும் வேட்பு மனு தக்கல் நிறைவடைந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, மநீம தலைவர் கமலஹாசன் உள்ளிட்டோரும் களத்தில் இறங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்
இந்நிலையில் இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி சேலம் மாவட்டம் வனவாசியில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பங்கேற்று வாக்கு சேகரித்தார். நங்கவள்ளி, வனவாசி , ஜலகண்டாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிமுகம் செய்து வைத்து பேசிய அவர், கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த திமுக எந்த திட்டங்களையும் நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டினார்.

திட்டங்களை நிறைவேற்றவில்லை
கடந்த சட்டமன்ற தேர்தலில் 525 அறிவிப்புகளை வெளியிட்ட திமுக ஆட்சி பொறுப்பேற்ற உடன் ஒரு அறிவிப்பை கூட நிறைவேற்றவில்லை எனவும் தமிழக மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி வரும் கண்டுள்ளதால் அதிமுகவினர் நெஞ்சை நிமிர்த்தி வாக்கு கேட்கலாம் என பேசிய எடப்பாடி பழனிசாமி, ஏற்கனவே அதிமுக ஆட்சிக்காலத்தில் தான் முதலமைச்சராக இருந்தபோது போடப்பட்ட திட்டங்கள் அனைத்தையும் தற்போது ஸ்டாலின் திமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கி வைக்கப்பட்ட திட்டங்களை போல மாவட்ட மாவட்டங்களுக்கு நேரடியாக செல்லாமல் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்துக் கொண்டிருக்கிறார் என்றார்.

புதிய திட்டங்கள் இல்லை
திமுக ஆட்சிக் காலத்தில் எந்த புதிய திட்டத்தையும் நிறைவேற்றவில்லை என்ற அவர், திமுகவினருக்கு கைவந்த கலையான வார்த்தை ஜாலங்கள் மூலம் தற்போது திமுக அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது என பேசிய அவர் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற வேண்டுமானால் அதிமுகவினருக்கு வாக்களிக்க வேண்டுமெனவும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெற்றி பெற மக்கள் ஆதரவளிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

தக்க பாடம்
நீட் தேர்வை கொண்டு வந்தது திமுகவும், காங்கிரசும்தான் என தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வை தடுப்பதுதான் அதிமுக எனவும், நீட் தேர்வை கொண்டுவந்தது திமுக கூட்டணி என்றும் தற்போது அவர்கள் இரட்டை வேடம் போடுவதாகக் குற்றம் சாட்டினார். இனியும் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது, பொங்கல் பரிசு உள்ளிட்ட திட்டங்களில் தமிழக மக்களை ஏமாற்றிய திமுக அரசுக்கு வரும் தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டார்.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications