சேலத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு மணி மண்டபம்.. எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைப்பு
சேலம்: முன்னாள் முதல்வர்களான, மறைந்த எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவுக்கு சேலத்தில் சுமார் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மணிமண்டபத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.
2017 செப்டம்பரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில், சேலம் நகரில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் முழு உருவ வெண்கலச்சிலைகளுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.

இதையடுத்து, சேலம் அண்ணா பூங்கா அருகே ரூ. 80 லட்சம் மதிப்பில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவுக்கு மணி மண்டபம் அமைக்கும் பணி கடந்தாண்டு ஏப்ரல் 29ம் தேதி முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்டது.
பணிகள் நிறைவடைந்த நிலையில், இன்று பொதுமக்கள் பார்வைக்காக எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைகளுடன் கூடிய மணி மண்டபத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.
மேலும், சேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்.ஜி.ஆர் பெயரை சூட்டினார் எடப்பாடி பழனிச்சாமி. அரியானூர் மற்றும் மகுடஞ்சாவடியில் மேம்பாலங்கள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
பின்னர் விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: அமைச்சராக இருந்தபோது ஸ்டாலின் எத்தனை கிராமங்களுக்கு சென்றார்? என்பதை சொல்லத் தயாரா. தேர்தல் வர இருப்பதால் ஸ்டாலின் கிராமசபை கூட்டத்தை நடத்துகிறார்.
அதிமுக ஆட்சியில் எந்த நலனும் செய்யவில்லை என தவறான குற்றச்சாட்டை சொல்லி வருகிறார்கள். யார் உண்மையாக உழைக்கிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும். எதிர்க்கட்சியினர் பரப்பும் தவறான தகவல்கள் அனைத்தும் தவிடு பொடியாக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications