அமமுக எல்லாம் ஒரு கட்சியா? எத்தனை பேரு அந்த கட்சியில் இருக்காங்க! எகிறி அடித்த எடப்பாடி பழனிசாமி!
சேலம்: அதிமுக 2 கோடி தொண்டர்கள் உள்ள இயக்கம். அதற்கு ஏற்றாற்போல் ஊடகங்கள் கேள்வி எழுப்ப வேண்டும் என்றும், வேண்டுமென்றே திட்டமிட்டு தவறான விமர்சனம் வைத்துக்கொண்டு இருக்கிறார். யாரோ ஆதரிப்பார்கள் என்ற தனது நினைப்பு நிறைவேறாததால் இது போன்ற வார்த்தைகளை கக்குகிறார் என டிடிவி தினகரன் குறித்த கேள்விக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எடப்பாடி அருகே பெரியசோரகை சென்றாய பெருமாள் கோவிலில் தேர்தல் பரப்புரை வாகனங்களுக்கு சிறப்பு பூஜை செய்தார். எடப்பாடி பழனிசாமிக்கு உகந்த மிருகசீரிஷம் நட்சத்திர நாள் என்பதால் சென்றாய பெருமாள் கோவிலில் வழிபாடு நடைபெற்றது.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்," என்னுடைய அதிமுக தேர்தல் பிரச்சார பரப்புரைக்கு செல்லும் இடத்தில் எல்லாம் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் விருப்பப்பட்டு வரவேற்பு கொடுக்கிறார்கள்.. நாங்கள் கூட தலைமையின் ஆணை பெற்று வர வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்.

எடப்பாடி பழனிசாமி
ஆனால் அவர்கள் ஆர்வத்துடன் வந்து கலந்து கொண்டிருக்கிறார்கள். வேண்டுமென்றே திட்டமிட்டு எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் விமர்சனம் செய்கிறார்கள். அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.அதிமுக எப்போது பாஜகவுடன் கூட்டணி வைத்ததோ அன்றையிலிருந்து இன்று வரை எங்களை பற்றி மட்டுமே விமர்சனம் செய்து வருகிறார்கள். அதிமுக யாருடன் கூட்டணி வைத்தால் அவர்களுக்கு என்ன கஷ்டம். திமுக தலைமையில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கூட்டணி வைத்துள்ளது. அந்த கட்சிகளின் தலைவர்கள் எல்லாம் அதிமுக பற்றி பேசுவதற்கு என்ன தகுதி உள்ளது.
அதிமுக பாஜக கூட்டணி
அதிமுகவுடன் கூட்டணி சேர விரும்பும் கட்சிகளுடன், கூட்டணி வைக்கிறோம். இதில் ஒரு விமர்சனம். இதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை.. அதிமுக கூட்டணி இல்லை என்றால் அவர்களுக்கு எளிதாக வரும் என்று நினைக்கிறார்கள். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை கூட முழுமையாக செயல்படுத்தி மக்களுக்கு நன்மை கிடைத்துள்ளதா என்றால் அதுவும் இல்லை. டிடிவி தினகரன் அவரின் கட்சி ஒரு கட்சி. அதைப்பற்றி கேள்வி கேட்கலாமா ? அதிமுக இரண்டு கோடி தொண்டர்கள் உள்ள கட்சி அதற்கு தகுந்தார் போல் கேள்வி கேட்க வேண்டும், யாராரோ கேட்பதற்கெல்லாம் கேள்வி கேட்க வேண்டாம்.
டிடிவி தினகரன் விமர்சனம்
வேண்டுமென்றே திட்டமிட்டு தவறான விமர்சனங்களை டிடிவி தினகரன் செய்து வருகிறார். யாராவது அவரை ஆதரிப்பார்கள் என்று நினைத்தார். ஆனால் யாரும் ஆதரிக்கவில்லை. இதனால் இது போன்ற வார்த்தைகளை கக்கிக்கொண்டு வருகிறார். தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு தான் கூட்டணி குறித்து தெரிவிக்கப்படும். அந்தந்த கட்சிகளை அவரவர் வளர்க்க வேண்டும்.. கூட்டணி அமைத்து விட்டால் கூட்டணிக்குள் கட்டுப்பட வந்துவிடும். அதிமுக கூட்டணியில் சேரும் கட்சிகள் எல்லாம் சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது. திமுக தலைமையில் அமைக்கப்பட்ட உள்ள கூட்டணி எல்லாம் சுயமாக சுதந்திரமாக செயல்பட முடியவில்லை.. காங்கிரஸ் கட்சியில் பல பேர் எதிர்ப்பு குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர்.
தேர்தல் பிரச்சாரம்
காங்கிரஸ் கட்சி அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்கள் வேண்டும்.. ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கை வைக்க ஆரம்பித்துள்ளனர். எல்லாம் பத்திரிக்கையில் வந்துள்ளது. திமுக தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள கூட்டணி இப்பொழுது விரிசல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நயினார் நாகேந்திரன் இன்று தேர்தல் பிரச்சார பரப்புரை துவங்குகிறார். இதில் அதிமுக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் வெற்றி பெறுவதற்கு வாழ்த்துக்கள்" என்றார்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்!












Click it and Unblock the Notifications