சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆபாச அசைவுகள்.. அசிங்கமான சித்தரிப்புகள்.. காது கூச.. கண் கூச.. அருவெறுக்க வைத்த கிராமத்து நடனம்

சேலம் அருகே கோயில் விழாவில் ஆபாச நடனம் ஆடியுள்ளனர்

Google Oneindia Tamil News

சேலம்: என்னதான் ஆபாச நடனங்களுக்கு கோர்ட்டுகள் தடை விதித்தாலும் அது நடந்து கொண்டுதான் இருக்கிறது.. அத்தனை பேரின் கண்களையும் ஏமாற்றி விட்டு.

கோவில் திருவிழாக்களில் முன்பெல்லாம் நாடகம் போடுவார்கள். பாட்டுக் கச்சேரி, நடனம் என்று களை கட்டும். முன்பெல்லாம் நாகரீகமான முறையில் இவை இருந்து வந்தன. ஆனால் காலப் போக்கில் சினிமா தாக்கம் காரணமாக ஆபாசத்தை அதிகம் இழையோட விட்டு விட்டனர்.

இதனால் கிராமத்து திருவிழாக்களில் இடம்பெறும் நடன நிகழ்ச்சிகளில் ஆபாசம் வழிந்தோட ஆரம்பித்தது. இது கட்டுப்பாட்டைத் தாண்டி எல்லை மீறிப் போனதால் ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, ஹைகோர்ட்டும் ஆபாசன நடன நிகழ்வுகளுக்கு தடை விதித்தது.

சாந்தி தலையை ஊர்வலமாக எடுத்து சென்ற கணவர்.. கம்பத்தில் தொங்க விடவும் பிளான்.. கைது செய்தது போலீஸ்சாந்தி தலையை ஊர்வலமாக எடுத்து சென்ற கணவர்.. கம்பத்தில் தொங்க விடவும் பிளான்.. கைது செய்தது போலீஸ்

உத்தரவாதம்

உத்தரவாதம்

இதையடுத்து போலீஸார் இதுபோன்ற நடன நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்து வருகின்றனர். இருப்பினும் சிலர் கோர்ட்டுக்குப் போய் உத்தரவாதம் கொடுத்து, உறுதிமொழி அளித்து அனுமதி வாங்கி நடத்திக் கொண்டுதான் உள்ளனர். அதில் சிலர் விதிமுறைகளை மீறும்போதுதான் மக்கள் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.

சேலம்

சேலம்

இப்படித்தான் சேலம் மாவட்டம் கரட்டூர் என்ற ஊரில் மாரியம்மன் கோவில் உள்ளது. அங்கு ஐப்பசி மாதத்தையொட்டி விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்த விழாவில் கச்சேரி வைக்க ஆசைப்பட்ட ஊர் மக்கள் காவல்துறையை அணுகியபோது கோர்ட் உத்தரவைக் காட்டி அனுமதி மறுத்து விட்டனர் காவல் துறையினர். இதையடுத்து ஹைகோர்ட்டுக்குப் போய் உறுதிமொழி அளித்து திருவிழாக் கமிட்டியினர் நடன நிகழ்ச்சி நடத்த அனுமதி வாங்கினர்.

ஆபாச நடனம்

ஆபாச நடனம்

இதையடுத்து போலீஸாரும் அனுமதி அளித்தனர். ஆனால் அனுமதி வாங்கிய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், எந்த கட்டுப்பாட்டையும் கண்டு கொள்ளாமல் ஆபாச நடனத்தை அரங்கேற்றியதாக கூறப்படுகிறது. அதிலும் நடனக் கலைஞர்கள் ஆபாசமாக ஆடியுள்ளனர். பெண்கள் பற்றி நாக் கூசும் வகையில் விளித்து நடனமாடியுள்ளனர்.

கொந்தளிப்பு

கொந்தளிப்பு

இதைப் பார்த்த கிராமத்து மக்கள் குறிப்பாக பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஹைகோர்ட் விதித்த கட்டுப்பாடுகளை கண்டுகொள்ளாமல் இப்படியா அசிங்கமாக நடந்து கொள்வது என்று அவர்களும், கிராமத்து மக்களும் கொந்தளித்துள்ளனர். காவல்துறையினர் இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பார்களா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

English summary
near Salem, There is a vulgar dance at the Temple Festival, in violation of the high court order
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X