நான் பெருசா மதிக்கிறதே காதலை தான்..காதலிக்காக போலீஸ் ஸ்டேஷனில் காதலன் செய்த காரியம்!ஒரே கையெழுத்து!

Subscribe to Oneindia Tamil

சேலம்: சமூக வலைதளத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு ஓமலூர் காவல் நிலையம் வந்த நிலையில், மாப்பிள்ளை வீட்டார் பெண் பெயரில் சொத்து எழுதி கொடுப்பதாக பத்திரத்தில் கையொப்பம் இட்டு சமாதானம் செய்து சென்றனர். காதலித்த பெண்ணுக்காக போலீஸ் ஸ்டேஷனிலேயே சொத்தில் ஒரு பகுதியை எழுதி வைத்துள்ளார் காதலன்.

சமூக வலைதளங்களின் ஆதிக்கம் பெருகிவிட்ட நிலையில் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்கில் பலர் காதலித்து வருகின்றனர். அது ஒருபுறம் இருக்க உண்மை காதலர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். காதலுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். காதலிக்காகவும் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்பதை பார்த்திருக்கிறோம்..

salem love police

அப்படி ஒரு சம்பவம் தான் சேலத்தில் நடந்திருக்கிறது சேலத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய காதலியை திருமணம் செய்த காதலன் காதலியுடன் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். இந்த பையனை நம்பி எப்படி நாங்கள் பெண்ணை கொடுப்பது என பெற்றோர் கேட்க அந்த இடத்திலேயே சொத்தை எழுதி வைத்திருக்கிறார் காதலன்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள திமிரிகோட்டை என்ற பகுதியைச் சேர்ந்த சாருலதா என்பவருக்கும் சேலம் அருகே உள்ள இளம்பிள்ளை பகுதியை சேர்ந்த விக்னேஷிற்கும் சமூக வலைத்தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் செல்போன் எண்ணை பறிமாறிக் கொண்டு பேச அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. தொடர்ந்து இருவரும் திருமணம் செய்ய முயற்சித்த நிலையில் பெண் வீட்டார் ஒப்புக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து தனது பெற்றோர்களால் பிரச்சனை வரும் என அந்த பெண் கருதியதால் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என ஓமலூர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து ஓமலூர் போலீசார் இருதரப்பு பெற்றோர்களையும் அழைத்து சமாதானம் பேசினர். அப்போது பெண் வீட்டார் பையன் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என கூறியதோடு, அந்த பெண்ணை வைத்து எப்படி காப்பாற்றுவார் என பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டாரிடம் கேள்வி கேட்டு வாக்குவாதம் செய்தனர்.

இந்த வாக்கு வாதத்தின் போது பெண் மீது ஏதாவது ஆதார சொத்து எழுதி வைக்க கேட்டனர். அப்பொழுது ஓமலூர் போலீசார் மாப்பிள்ளைக்கு சொந்தமான ஒரு பகுதி சொத்தை எழுதிக் கொடுப்பதாக பாண்டு பத்திரத்தில் கையொப்பம் பெற்று பெண் வீட்டாரிடம் கொடுத்தனர். காதலனும் தனக்கு சேர வேண்டிய சொத்தின் ஒரு பகுதியை எழுதி வைப்பதாக அங்கேயே கையெழுத்து போட்டுக் கொடுத்தார். பின்பு இரு தரப்பினரும் சமாதானமடைந்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+