ஏற்காட்டில் சீறும் காட்டாற்று வெள்ளம்.. மினி டேம் போல் கார் டயர்களிலிருந்து கொட்டும் நீர்.. வீடியோ
சேலம்: சேலம் மாவட்டம் ஏற்காட்டில் காட்டாற்று வெள்ளத்தால் 40-க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டன.
Recommended Video
ஏற்காட்டில் இன்று காலை முதலே சாரல் மழை பெய்து வந்தது. இந்த நிலையில் நாகலூர், செம்மநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதனால் ஏற்காட்டில் இருந்து நாகலூர் செல்லும் சாலையில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.
இதனால் அப்பகுதியில சுமார் 40 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.

மாணவ மாணவிகள்
பள்ளி சென்ற மாணவ, மாணவிகள் வீடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து துண்டிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை தேவைகளை அதிகாரிகள் வழங்கி வருகிறார்கள். மேலும் ஏற்காட்டிற்கு சுற்றுலா சென்ற பயணிகளும் பாதி வழியில் சிக்கியுள்ளார்கள்.

வீடியோக்கள்
இவர்கள் வெளியே வெளியேற முடியாத நிலை உள்ளது. இதுதொடர்பாக இரு வீடியோக்கள் வெளியாகியுள்ளன. அதில் ஒரு வீடியோவில் சாலை முழுவதும் காட்டாற்று வெள்ளம் பிய்த்துக் கொண்டு அடித்து வருகிறது. அதில் ஒரு கார் செல்ல முடியாமல் திரும்பும் போது அதன் டயர்களில் இருந்து ஏதோ டேமில் தண்ணீர் ஊற்றுவது போல் ஊற்றுகிறது.

பின்னோக்கி
பின்னர் எப்படியோ அந்த கார் பின்னோக்கி பத்திரமாக திரும்புகிறது. அது சாலையா இல்லை ஆறா என தெரியாத அளவுக்கு தண்ணீரின் வேகம் அதிகரித்துள்ளது. அங்கு வந்த உள்ளூர்வாசிகளும் சுற்றுலா பயணிகளும் எங்கே தண்ணீரில் தங்களது இரு சக்கர வாகனம் அடித்து சென்றுவிடுமோ என அஞ்சி பாதுகாத்து வருகிறார்கள்.

வீடியோ
அது போல் இன்னொரு வீடியோவில் ஊருக்குள் ஏதோ மடையை திறந்து விட்டது போல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தண்ணீரின் வேகத்தால் சாலைகள் சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மலைகளின் ஓரங்களிலும் , பள்ளமான பகுதிகளிலும் யாரும் நிற்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். இந்த காட்டாற்று வெள்ளம் சரியானதும்தான் சீரமைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிகிறது.
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications