பெட்ரோல் ஊற்றி கொளுத்துவேன்... சேலம் போலீசாருக்கு மிரட்டல்.. இந்து முன்னணி நிர்வாகி அவிநாசியில் கைது
சேலம்: முககவசம் அணியாமல் சென்ற நபருக்கு போலீசார் ஃபைன் போட்டதால் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பி ஓடி தலைமறைவான இந்து முன்னணி நிர்வாகி செல்லபாண்டியன் அவிநாசியில் பதுங்கியிருந்தபோது சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டார்.
Recommended Video
சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் முக கவசம் அணியாமல் இருந்தார்.
அவரை தடுத்து நிறுத்திய போலீசார், முக கவசம் அணியவில்லை என்பதால் ரூ200 ஃபைன் போட்டனர். அதற்கான ரசீதையும் காரணத்துடன் போலீசார் எழுதிக் கொடுத்துவிட்டனர். அந்த நபர் வந்த வாகனத்தின் சாவியையும் போலீசார் எடுத்துக் கொண்டனர்.

ஆட்களுடன் இந்து முன்னணி பிரமுகர்
இது தொடர்பாக அந்த நபர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த வாக்குவாதம் நடக்கும்போதே கொண்டலாம்பட்டி ஒன்றிய இந்து முன்னணி தலைவரான செல்லபாண்டியன் சில நபர்களுடன் அந்த இடத்துக்கு வந்தார்.

சேலம் போலீசாருடன் மோதல்
போலீசார் ஃபைன் விதித்த நபர் தமது உறவினர்; ஆகையால் அவருக்கு விதிக்கப்பட்ட ரூ200 ஃபைனை உடனே திருப்பித் தரவேண்டும்; அத்துடன் பறிமுதல் செய்த வாகனத்தின் சாவியையும் தர வேண்டும் என்று சவுண்டுவிட்டுப் பார்த்தார் செல்லபாண்டியன்.

செல்லபாண்டியன் கொலை மிரட்டல்
ஆனால் போலீசாரோ சட்டப்படிதானே நடவடிக்கை எடுத்திருக்கிறோம் என்று சொல்லிப் பார்த்தனர். இதனை கேட்காத செல்லபாண்டியன், இந்த செக்போஸ்ட்டையே கொளுத்துவேன்; எல்லோரையும் கொன்னுடுவேன்; நான் இந்த ஒன்றியத்தின் தலைவர்; எங்க ஆளுகளை இறக்கி போராட்டம் செய்வோம் என்றெல்லாம் உதார்விட்டார்.

சங்கை அறுத்துடுவேன்
அத்துடன் போலீசாருக்கு டூட்டி போட்டா உட்கார்ந்துட்டு போக வேண்டியதுதானே.. இதென்ன வண்டியை எல்லாம் மறிக்கிறது; நான் தலைவருக்கு போன் போடவா? போலீஸ்காரனுகளோட சங்கை அறுத்துடுவேன் என்றெல்லாம் சினிமா பாணியில் ஏகத்துக்குமாக வசனம் பேசினார். செல்லபாண்டியனின் இந்த உதார் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகவும் பரவியது.

அவிநாசியில் கைது
இதையடுத்து செல்லபாண்டியன் மீது 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதனால் சேலத்தில் இருந்து தப்பி ஓடி தலைமறைவானார் செல்லபாண்டியன். அவரது செல்போன் அழைப்புகளை வைத்து அவிநாசி அருகே பதுங்கி இருந்த செல்லபாண்டியனை கொத்தாக போலீசார் கைது செய்து சேலம் கொண்டு வந்தனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications