Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சேலம் அருகே உயிருடன் இருக்கும் கணவனுக்கு இறப்பு சான்றிதழ் வாங்கிய ரேவதி.. சிக்கியது எப்படி?

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கரூரில் நிலம் வாங்கினார். அந்த நிலத்தைவிற்று பணம் தருமாறு மனைவி ரேவதி கேட்டு வந்தாராம். தராததால், உயிருடன் இருக்கும் தனது கணவர் விஜயகுமாருக்கு அவர் இறப்பு சான்றிதழே வாங்கி இருக்கிறார். இறந்ததாக சான்று அளிக்கப்பட்ட நிலையில், விஜயகுமார் வெளியூரில் இருந்து திடீரென நேரில் வந்து ட்விஸ்ட் கொடுத்தார். வருவாய்துறை அதிகாரிகள், போலீஸையே ஆடிப்போக வைத்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

தமிழ்நாட்டின் நகர்புற பகுதிகள் எல்லாமே மிகவேமாக நகரமயமாகி வருவதால், இன்றைக்கு சொத்துக்களின் மதிப்பு தாறுமாறாக உயர்ந்து வருகிறது. அப்படி ஏறும் சொத்துக்களை அபகரிக்க பல்வேறு மோசடி சம்பவங்கள் நடக்கின்றன. போலி ஆதார் கார்டு, போலி வாரிசு சான்றிதழ், போலியாக ஆவணங்கள் தயாரித்து பத்திரப்பதிவு செய்வது அடிக்கடி நடக்கிறது. இறுதியில் மாட்டிக்கொள்வார்கள் என்றாலும் மோசடிகள் குறையவே இல்லை . சேலத்தில் மனைவியே கணவனுக்கு தெரியாமல் மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. இதுபற்றி பார்ப்போம்.

death certificate tahsildar

சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சி தாவாந்தெரு பகுதியை சேர்ந்த 50 வயதாகும் விஜயகுமார் என்பவருக்கும் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியை சேர்ந்த 43 வயதாகும் ரேவதி (43) என்பவருக்கும் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு கல்யாணம் நடந்தது. இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் இருக்கிறார்கள். விஜயகுமார் கல்யாணம் ஆன ஆரம்பத்தில் இருந்தே சமையல் பாத்திர வியாபாரம் செய்து வந்தாராம். அப்படி சேமித்த பணத்தில் விஜயகுமார் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கரூர் பகுதியில் தனது பெயரில் நிலம் ஒன்றை வாங்கியிருக்கிறார்.

நாளடைவில் பாத்திர வியாபாரத்தில் போதிய வருமானம் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் கடந்த 10 ஆண்டுக்கு முன்பு விஜயகுமார் மலேசிய நாட்டிற்கு சென்றுவிட்டாராம். அதில் கிடைக்கும் வருமானத்தை தனது மனைவிக்கு அனுப்பி வந்தாராம். கடந்த 6 மாதத்திற்கு முன்பு மலேசியாவில் இருந்து சொந்த ஊர் திரும்பிய விஜயகுமார் மனைவியிடம் தான் வெளிநாட்டில் வேலை பார்த்து 10 ஆண்டுகளாக அனுப்பிய பணம் குறித்து கேட்டிருக்கிறாராம்.

அப்போது, பணம் அனைத்தும் குழந்தைகளை வளர்ப்பதற்கு செலவாகி விட்டது என்றும் கரூரில் உள்ள நிலத்தை விற்று தனக்கு மேலும் பணம் தரும்படி விஜயகுமாரிடம் மனைவி ரேவதி வற்புறுத்தினாராம். இதில் வேதனை அடைந்த விஜயகுமார், மனைவியிடம் கோபித்து கொண்டு ஓசூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் தங்கி கடந்த 6 மாதங்களாக வேலை செய்து வந்தாராம்.

இந்த நிலையில் கணவர் பெயரில் உள்ள சொத்தை அபகரிக்க ரேவதி சதிதிட்டம் போட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏனெனில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு எடப்பாடி காவல் நிலையத்தில் தனது கணவர் மாயமாகி விட்டதாக புகார் செய்தார். தொடர்ந்து கடந்த மாதம் ஈரோடு மாவட்டம் பவானி பகுதியில் காவிரி ஆற்றங்கரை ஓரத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்றை பவானி போலீசார் கைப்பற்றி இருப்பதை அறிந்த ரேவதி, அது தனது கணவரது உடல் எனக்கூறி நாடகமாடியிருக்கிறார்.

அதனை தொடர்ந்து தனது கணவர் பெயரில் இறப்பு சான்றிதழும் ரேவதி பெற்றுள்ளார். உயிருடன் உள்ள தனது கணவர் பெயரில் வாங்கிய இறப்பு சான்றிதழை வைத்தாராம். இதனிடையே வாரிசு சான்று பெறுவதற்காக கடந்த சில தினங்களாக ரேவதி எடப்பாடி தாலுகா அலுவலகத்திற்கு வந்து சென்று இருக்கிறார்.

இதனிடையே இறந்ததாக சான்று அளிக்கப்பட்ட விஜயகுமார் தனது ஆதார் அட்டையை புதுப்பிப்பதற்காக ஓசூரில் இருந்து எடப்பாடி தாலுகா அலுவலகத்திற்கு தற்செயலாக நேற்று வந்திருக்கிறார். அப்போது தனது மனைவி ரேவதி தனது பெயருக்கு இறப்பு சான்றிதழ் பெற்று இருந்த விவரம் அறிந்து விஜயகுமார் ஆடிப்போனார். இது குறித்து எடப்பாடி தாசில்தார் வைத்தியலிங்கத்திடம் நேரில் சென்று அவர் முறையிட்டிருக்கிறார். இதையடுத்து வருவாய்த்துறையினர் விஜயகுமாரின் மனைவி ரேவதியை நேரில் அழைத்து விசாரித்தார்கள்.

அப்போது ரேவதி, தனது கணவர் பெயரில் உள்ள சொத்தை விற்பதற்காக தான் அடையாளம் தெரியாத ஆண் உடலை தனது கணவர் எனக்கூறி நாடகமாடி, போலியாக இறப்பு சான்றிதழ் பெற்றதை ஒப்புக்கொண்டாராம். இதை தொடர்ந்து எடப்பாடி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடனே நேரில் வந்து ரேவதியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். உயிருடன் உள்ள தனது கணவர் இறந்து விட்டதாக மனைவி இறப்பு சான்று பெற்ற நிலையில், இறந்து விட்டதாக சான்று அளிக்கப்பட்டவர் நேரில் வந்தது சேலம் எடப்பாடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+