சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வாழைப்பழம் வாங்கினேன்.. பணம் கொடுத்தேன்... பணப்பட்டுவாடா ஒன்னுமில்லை... ஈ.பி.எஸ் விளக்கம்

Google Oneindia Tamil News

சேலம்: சேலத்தில் வாக்கு சேகரிக்கும் போது பழக்கடைக்காரர் எனக்கு பழம் கொடுத்தார்; அதற்குத்தான் நான் பணம் கொடுத்தேன் என்று முதலமைச்சர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த ஒரு மாதமாக தீவிரபிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்த முதலமைச்சர் பழனிசாமி, இன்று, சேலம் நகரின், முக்கிய வீதிகளில் உள்ள காய்கறி கடைகள், பழக்கடைகள், மளிகைக்கடைகள், பாத்திரக்கடைகள், டீக்கடைகள் என ஒவ்வொரு கடையிலும் ஏறி இறங்கி அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

I paid For purchased Bananas Chief Minister Palanisamy explanation

அப்போது, வாழைப்பழம் வியாபாரம் செய்து வந்த பெண்ணிடம் தேர்தல் பிரச்சார நோட்டீஸ் கொடுத்த முதலமைச்சர் பழனிசாமி, பணத்தை மறைத்து வைத்து கொடுத்ததாக வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இந்த வீடியோ காட்சிக்கு மறுப்பு தெரிவித்துள்ள முதலமைச்சர் பழனிசாமி, வாக்குகாக பணம் எதுவும் கொடுக்கவில்லை என்றும், அந்த பெண்ணிடம் வாழைப்பழம் வாங்கிவிட்டு அதற்கு விலையாக பணம் கொடுத்தேன் என்றும் விளக்கமளித்தார்.

ஆண்டிப்பட்டியில் அமமுக அலுவலகத்திற்குள் நுழைய போலீஸ்-க்கு அனுமதி மறுப்பு... 2 முறை துப்பாக்கிச் சூடு ஆண்டிப்பட்டியில் அமமுக அலுவலகத்திற்குள் நுழைய போலீஸ்-க்கு அனுமதி மறுப்பு... 2 முறை துப்பாக்கிச் சூடு

எந்த பொருள் வாங்கினாலும் அதற்கு விலையாக பணம் கொடுப்பது வழக்கம். நான் வாழைப்பழம் வாங்கியதை எடிட் செய்துவிட்டு பணம் கொடுத்ததை மட்டும் பரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். வேலூர் மக்களவை தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், நாளை மறுநாள் 38 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Chief Minister Palanisamy explanation That Chief Minister Palanisamy explanation
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X