நேரம் சரியில்லை.. எடப்பாடி எம்எல்ஏ பதவிக்கே சிக்கல்? நேரடியாக விசாரிக்கும் கிரைம் பிரான்ஞ் .. போச்சு
சேலம்: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை செய்ய முடிவு செய்துள்ளனர். தமிழ்நாடு போலீசின் ஒரு பிரிவான இந்த கிரைம் பிரான்ஞ் பிரிவு ஏற்கனவே அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். 3 பிரிவுகளின் கீழ் அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மிலானி என்பவர் கடந்த மாதம் சேலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதில் தேர்தல் ஆணைய வேட்புமனுவில் பிரமாண பத்திரத்தில் எடப்பாடி பழனிசாமி தவறான விவரங்களை தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கில்தான் எடப்பாடி விசாரணை செய்யப்பட உள்ளார்.

விதி என்ன?: பொதுவாக சட்டசபை தேர்தல் தொடங்கி நாடாளுமன்ற தேர்தல் வரை அனைத்து தேர்தல்களிலும் போட்டியிடும் வேட்பாளர்கள், வேட்புமனு தாக்கலின் போது பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்.
தங்களின் சொத்து விவரங்களை அவர்கள் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும். இதில் பொய்யான விவரங்களை வெளியிடும் பட்சத்தில் அந்த வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்கலாம். அதோடு இதில் பொய்யான விவரங்களை வெளியிட்டால் சமயத்தில் எம்எல்ஏ பதவிக்கு கூட சிக்கல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் பட்சத்தில் ஒருவருக்கு எம்எல்ஏ பதவிக்கே ஆபத்து ஏற்படும்.

வழக்கு: எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மிலானி எனபவர் கடந்த மாதம் சேலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதில் தேர்தல் ஆணைய வேட்புமனுவில் பிரமாண பத்திரத்தில் எடப்பாடி பழனிசாமி தவறான விவரங்களை தாக்கல் செய்துள்ளார்.
இதனால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மிலானி வழக்கு தொடுத்தார். இந்த விவகாரத்தில், இதில் உடனே விசாரிக்க வேண்டும் .
முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வழக்கு தொடுக்க வேண்டும் என்று சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டது.
வழக்கு: இந்த நிலையில்தான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 3 பிரிவுகளின் கீழ் அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
2021 சட்டப்பேரவை தேர்தலின் போது வேட்புமனுவில் சொத்துமதிப்பை குறைத்துக் காட்டியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி 125ஏ(1), 125ஏ(I), 125ஏ(II) பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
எடப்பாடி வழக்கு எதிர்ப்பு: முன்னதாக சேலம் கோர்ட் தனக்கு எதிராக வழக்கு பதிய அனுமதி அளித்ததை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி, நான் அவரின் தொகுதியை சேர்ந்தவர் கிடையாது. எனக்கும், அவர் தொகுதிக்கும் தொடர்பே கிடையாது. என் வேட்புமனுவில் எந்த விதமான தவறான தகவலும் இல்லை.
அதோடு அவர் தேர்தலிலும் போட்டியிடவில்லை. அப்போதே புகார் அளித்து இருக்கலாம். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு பின் புகார் அளித்து உள்ளனர். இதில் சேலம் கோர்ட் எனக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய அனுமதி அளித்துள்ளது.

முகாந்திரம் இருந்தாலும் வழக்கு பதிவு செய்யலாம் என்று அனுமதி அளித்து உள்ளது. இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அவர் தனது விசாரணையில் இந்த விவகாரத்தை ஜூன் 6ம் தேதி வரை பெரிதாக்காமல் இருக்கவும் என்று கூறி ஜூன் 6ம் தேதிக்கு விசாரணையை தள்ளிவைத்தார்.
வழக்கு பதிவு விசாரணை: இந்த நிலையில்தான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 3 பிரிவுகளின் கீழ் அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியை சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேரடியாக விசாரணை செய்ய முடிவு செய்துள்ளனர். பொய்யான தகவலை தெரிவித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், எடப்பாடி பழனிசாமிக்கு சம்மன் அனுப்பி நேரில் விசாரிக்க சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.
-
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
குதிரை பேரமல்ல! யானை பேரம்! தவெகவில் அதிமுகவினர் இணைவதற்கு இபிஎஸ்தான் காரணம்! ஆதவ் அட்டாக் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி












Click it and Unblock the Notifications