எடப்பாடி பழனிசாமி சொல்லி கனகராஜ் கொண்டுவந்த கோடநாடு பைகள்.. 5 பேர்கிட்ட இருக்கு.. அதிர வைத்த தனபால்!
சேலம்: டிரைவர் கனகராஜ், கோடநாட்டில் இருந்து எடப்பாடி பழனிசாமி சொன்னதன் பேரில் 5 பைகளை எடுத்து வந்ததாகவும், அதை சேலம், சங்ககிரியைச் சேந்த முக்கிய புள்ளிகளிடம் கொடுத்ததாகவும் கூறி அதிர வைத்துள்ளார் கனகராஜின் அண்ணன் தனபால்.
நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பங்களாவில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டு, அங்கு கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. முக்கிய ஆவணங்கள் பல மாயமாகின. இதில், ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்ட 11 பேர் இதில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினருக்கு தெரியவந்தது.

இந்த கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக கார் ஓட்டுநர் கனகராஜை போலீசார் தேடி வந்த நிலையில், அவர் அடுத்த சில நாட்களில் சேலம் அருகே வாகன விபத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். அதே நேரத்தில் கனகராஜ் அழைத்து வந்த கூலிப்படை 10 பேரையும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
போலீசார் நடத்திய தொடர் விசாரணையில், இந்த கொலை சம்பவம் தொடர்பாகச் சில ஆவணங்களை கனகராஜின் சகோதரர் தனபால் அழித்தது தெரியவந்தது. இதையடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து, தனபால் ஜாமீனில் வெளியே வந்தார்.
ஜாமீனில் வெளியே வந்த தனபால், கடந்த மாதம் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் தற்போது மீண்டும் ஜாமீனில் வெளியே வந்துள்ள தனபால் சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "ஜெயலலிதாவுக்கு டிரைவராக் இருந்த கனகராஜ் எனது தம்பி. அதனால் என்னையும் விசாரித்தார்கள். சிபிசிஐடி போலீசார் என்னை விசாரிக்கட்டும். நான் முழு ஒத்துழைப்பும் அளிப்பதற்குத் தயாராக இருக்கிறேன். கோடநாடு கொலை வழக்கிலும், எனது சகோதரர் மரணத்திலும் எடப்பாடி பழனிசாமிக்குத் தொடர்பு இருக்கிறது என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறேன். ஆனால் இன்று வரை அவரை விசாரிக்கவே இல்லை.
கோடநாட்டில் கொள்ளை நடந்த நேரத்தில் எனது தம்பி கனகராஜை பெருந்துறையில் தான் சந்தித்தேன். அப்போது எடப்பாடி பழனிசாமி சொன்னதன் பேரில்தான் கோடநாடு பங்களாவிலிருந்து 5 பைகளை எடுத்து வந்ததாக கனகராஜ் என்னிடம் தெரிவித்தார். அதில் சொத்து ஆவணங்கள் நிறைய இருந்தன. 5 பைகளை எடுத்து வந்து இரண்டு பைகளை சேலத்திலும், 3 பைகளை சங்ககிரியிலும் உள்ள முக்கிய புள்ளிகளிடம் கொடுத்துள்ளார்.

தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்று கனகராஜ் என்னிடம் தெரிவித்த நிலையில்தான் ஆத்தூரில் விபத்தில் உயிரிழந்தார். அதில் கனகராஜ் கொடுத்த பைகளில் நிறைய முக்கிய பிரமுகர்கள் பெயர்கள் இருக்கிறது. அதையெல்லாம் நான் காவல்துறையிடம்தான் சொல்ல முடியும். இப்போது உங்களிடம் சொன்னால் என் உயிருக்குப் பாதுகாப்பிருக்காது.
எடப்பாடி காவல் ஆய்வாளர் சுரேஷ் குமார் என்னிடம் இருந்த செல்போன்களை வாங்கி அழித்துவிட்டார். ஆனால் இதனை வெளியே சொல்லக்கூடாது என்று சுரேஷ் குமார் மிரட்டினார். இதையெல்லாம் நான் முன்னாடியே ஏன் சொல்லவில்லை என்றால் அப்போது அதிமுக ஆட்சி இருந்தது. எனக்குப் பயமாக இருந்தால் இதுகுறித்து வெளியே சொல்லவில்லை.
ஆனால் இப்போது நடைபெற்றுள்ள ஆட்சி மாற்றத்தால் நான் இவற்றை வெளியே சொல்கிறேன். முதல்வர் மீது நம்பிக்கை இருக்கிறது. முதல்வர் எனக்கு உரிய பாதுகாப்பு கொடுப்பார் என்று நம்புகிறேன். விரைவில் உரிய விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிக்குத் தண்டனை வாங்கித் தரவேண்டும்" என்று தெரிவித்துள்ளார். தனபாலின் இந்த அதிர்ச்சி வாக்குமூலத்தால் கோடநாடு விவகாரம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications