ராமர் கோவில் கேள்வி கேட்டால் "ICE" வைப்பாங்க..Income Tax, CBI, ED வரும்.. மாநாட்டை அதிரவைத்த கனிமொழி
சேலம்: அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா குறித்து யாரும் கேள்வி கேட்க முடியாது; அப்படி கேள்வி கேட்டால் "ICE" வைப்பாங்க.. அதாவது .Income Tax, CBI, ED வரும் என சேலம் திமுக இளைஞரணி மாநாட்டில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி அதிரடியாக பேச மாநாடு கரவொலியால் அதிர்ந்தது.
சேலத்தில் திமுக இளைஞரணி மாநாடு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இம்மாநாட்டில் இன்று காலை கனிமொழி எம்.பி கொடியேற்றி வைத்தார். மாலையில் நடைபெற்ற கூட்டத்தில் கனிமொழி எம்பி பேசியதாவது: நாளை வட இந்தியாவில் ஒரு கோவிலை திறக்கிறார்கள். அந்த கோவிலை திறப்பதை பற்றி நாங்க எதுவும் சொல்லப் போவது இல்லை. ஏன் ஜனாதிபதியை அழைக்கப் போவது இல்லை? என கேட்கப் போவதும் இல்லை. பிரதமர் மோடி வழிபாடு நடத்துகிறார். அதைப் பற்றி கேட்கப் போவது இல்லை.

துர்கா ஸ்டாலின்: எனக்கு கோவிலை பற்றி தெரியாது. நம்முடைய அறநிலையத்துறை அமைச்சர் இங்கே அமர்ந்திருக்கிறார். ஒரு கோவிலை முழுமையாக முடிக்காமல் திறக்கலாமா? உங்களைத்தான் கேட்கிறேன்.. திறக்க கூடாது இல்லை.. ஒரு கோவிலை முழுசா கட்டி முடிக்காம திறக்க கூடாது. ஆனால் இன்னைக்கு இருக்கிற பிஜேபி என்ன சொல்லுது.. நாங்கதான் இந்து மதத்தைக் காப்பாற்றுகிறோம். நாங்கதான் சனாதன தர்மத்தைக் காப்பாற்றுகிறோம் என்கிறது. நாங்கதான் கோவிலை காப்பாற்றுகிறோம். கோவிலை எல்லாம் எங்ககிட்ட கூட கொடுத்துடுங்க என்கிறார்கள். எங்க அண்ணி கூட உட்கார்ந்திருக்காங்க.. (முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டால்ன்) மனசு கூட கஷ்டமாத்தான் இருக்கும். கட்டி முடிக்காத கோவிலை திறக்கக் கூடாது என்கிறது இந்து மதம்.
கேள்வி கேட்டால் ICE வைப்பாங்க.. ஆனால் அதை அரசியலாக்கி உங்களுடைய அரசியல் லாபத்துக்காக இந்துக்களை மதிக்காமல் அந்த உணர்வுகளை மதிக்காமல், உங்க ஆளுங்களே கோவிலுக்கு வரமாட்டேன் என சொல்லுகிற அளவுக்கு அரசியல் விளையாட்டில் அந்த கோவிலை நாளை திறக்கப் போகிறீர்கள். அதுக்கு அரைநாள் லீவு. தனியார் டிரஸ்ட் நடத்துகிற கோவில் விழாவுக்கு அரசு இலவசமாக சிறப்பு ரயில்கள் விடுறாங்க.. இதை எல்லாம் நாம கேள்வி கேட்கக் கூடாது. கேள்வி கேட்டால், நமக்கு "ICE" வைப்பாங்க.. "ICE"ன்னு என்னான்னா INCOME TAX, CBI, ED இது 3-ம் வரும். யார் கேள்வி கேட்டாலும் இது 3-ம் வரும். ஆனால் இதற்கு எல்லாம் பயப்படக் கூடியவர்கள் தமிழ்நாட்டில் இல்லை. நீங்க என்ன செய்தாலும் உங்களை எதிர்ப்போம்!உங்களது கருத்தை எதிர்த்து நிற்போம். மத்தியில் இருக்கும் ஒன்றிய ஆட்சியை அகற்றுவோம். இவ்வாறு கனிமொழி எம்பி பேசினார்.
-
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது!












Click it and Unblock the Notifications