என்னா மூளை! பிஸ்கெட் பாக்கெட்டில் ஓட்டை போட்டு கஞ்சா கடத்தல்! சேலம் மத்திய சிறை காவலர்கள் அதிர்ச்சி
சேலம்: சேலம் மத்திய சிறையில் பிஸ்கெட் பாக்கெட்டுக்குள் கஞ்சாவை ஒளித்து வைத்து கொண்டு வந்த ஒரு பார்வையாளரை போலீஸார் கைது செய்தனர்.
சேலம் மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். சிறை நிபந்தனைகளுக்குள்பட்டு சிறை கைதிகளை அவர்களுடைய உறவினர்கள் சந்திப்பது வழக்கமான ஒன்று.

அந்த வகையில் வேலூர் மாவட்டத்தில் திருட்டு வழக்கில் தொடர்புடையவர் கவியரசு. இவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரை சந்திக்க தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த முகமது சுகில் என்பவர் சேலம் சிறைக்கு வந்திருந்தார்.
பொதுவாக சிறைக்கு வரும் கைதிகளை முழுவதுமாக சோதனை செய்து உள்ளே செல்லில் அடைப்பார்கள். இது அவர்களுடைய பாதுகாப்பு மற்றும் பிற கைதிகளின் பாதுகாப்பு கருதி இந்த சோதனை நடத்தப்படுகிறது.

அது போல் சிறை கைதிகளை பார்க்க வருவோர் கொடுக்கும் உணவு பொருட்கள், உடைகள் உள்ளிட்டவைகளையும் சோதனை செய்த பிறகே உள்ளே அந்த பொருட்களை சம்பந்தப்பட்ட கைதிகளிடம் கொடுப்பது வழக்கம். அந்த வகையில் கவியரசுவிற்காக முகமது சுகில் பிஸ்கெட் கொண்டு வந்திருந்தார்.
அதை போலீஸார் சோதனையிட்ட போது அந்த பிரபல பிஸ்கெட் பாக்கெட்டின் சைஸும் தோற்றமும் வேறு மாதிரி இருந்தது. இதனால் போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும் அந்த பிஸ்கெட்டை ஸ்கேன் செய்த போது அதில் ஏதோ மர்ம பொருள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரை வைத்துக் கொண்டே அந்த பிஸ்கெட் பாக்கெட்டை போலீஸார் பிரித்தனர்.

அப்போது வட்டமான பிஸ்கெட்டின் நடு பகுதி உடைக்கப்பட்டு வெறும் வளையங்கள் மட்டுமே இருந்தது. அதில் கஞ்சாக்கள் சொருகி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பிஸ்கெட் பாக்கெட்டில் இருந்து 80 கிராம் கஞ்சாவை சிறைக் காவலர்கள் பறிமுதல் செய்து முகமது சுகிலை அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்த கஞ்சா பொருளை சுகில் எத்தனை முறை கொண்டு வந்திருக்கிறார். இதுதான் முதல்முறையா? இல்லை ஏற்கெனவே எத்தனை முறை கொண்டு வந்துள்ளார். எதில் மறைத்து வைத்து கொண்டு வந்தார். யாரிடம் இருந்து கஞ்சாவை வாங்கினார் போன்ற கேள்விகள் கேட்கப்படுகின்றன.

கஞ்சாவை தவிர வேறு ஏதேனும் பொருள் உள்ளே கொடுக்கப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது. தமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகம் இருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ஒரு சிறைக்குள்ளேயே தைரியமாக பிஸ்கெட்டில் மறைத்துவைத்து கஞ்சாவை கொண்டு சென்ற நபர் குறித்து பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கவியரசுவிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications