சேலம் விருந்தில் போட்ட ஸ்கெட்ச்.. மறுநாளே கொலை.. கோடநாடு கேஸில் அதிர்ச்சி தரும் செபி.. 3 மர்மங்கள்!
சேலம்: கோடநாடு வழக்கில் முதல் குற்றவாளியான கனகராஜ், கொள்ளை சம்பவம் நடந்து 4 நாட்களில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இவர் மரணம் அடைவதற்கு சரியாக ஒரு நாளுக்கு முன்தான் அவரை கொலை செய்ய "சிலர்" திட்டமிட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் முதல் குற்றவாளியாக குற்றஞ்சாட்டப்பட்டவர் கனகராஜ். இவர் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர். இந்த நிலையில் இவரின் மரணம் குறித்து தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறது. கோடநாடு கொலை மற்றும் கொள்ளை 2017 ஏப்ரல் 24ல் நடந்தது.
அதன்பின் 28ம் தேதி கனகராஜ் சேலத்தில் கார் விபத்தில் ஒன்றில் கொல்லப்பட்டார். இவரின் மரணம் விபத்து என்று பதிவு செய்யப்பட்ட நிலையில், இது கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள். முன்பு எதிர்க்கட்சியாக இருந்து தற்போது ஆளும் கட்சியாக இருக்கும் திமுகவும் கனகராஜ் மரணம் குறித்து சந்தேகம் எழுப்பி இருந்தது.

பேட்டி
கோடநாடு வழக்கில் 8வது குற்றவாளியாக விசாரிக்கப்பட்டு வரும் சந்தோஷ் சாமி, ஏ1 கனகராஜ் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டதாக பேட்டி அளித்துள்ளார். தனியார் ஊடகத்திற்கு (நியூஸ்18 தமிழ்) சந்தோஷ் சாமி அளித்த பேட்டியில், கோடநாடு கொள்ளைக்கு பின் எங்களை தமிழ்நாடு போலீசார் கேரளாவில் கைது செய்தனர். நாங்கள் போலீஸ் காரில் சென்ற போது எங்களுடன் செபி என்ற நபர் வந்தார். அவர் போனில் யாருடனோ பேசிக்கொண்டு இருந்தார். போனில் கனகராஜை கொல்லும்படி அவர் யாரிடமோ கூறினார்.

கொலை
சேலத்தில்தான் கனகராஜ் இருக்கிறார்.. கனகராஜ் விருந்து ஒன்றில் இருக்கிறார்.. அவரை இன்றே தீர்த்து கட்டிவிடுங்கள் என்று கூறினார். அவர் யாரிடம் பேசினார் என்று தெரியவில்லை என்று செபி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறி உள்ளார். சேலத்தில் விருந்து ஒன்றில் கனகராஜ் இருந்த போது இந்த ஸ்கெட்ச் போடப்பட்டதாக சந்தோஷ் சாமி குறிப்பிட்டுள்ளார்.

கேள்வி 1 : யாருக்கு போன் செய்தார்?
இந்த நிலையில் சந்தோஷ் சாமியின் பேட்டி காரணமாக செபி யாருக்கு போன் செய்தார் என்று கேள்வி எழுந்துள்ளது. கனகராஜை இன்றே தீர்த்து கட்டிவிடு என்று செபி யாரோ ஒருவரிடம் சொன்னதாக சந்தோஷ் சாமி தெரிவித்துள்ளார். அந்த யாரோ ஒருவர் யார் என்பதுதான் இப்போதுதான் கேள்வியாக உள்ளது. போலீஸ் வாகனத்தில் அமர்ந்து கொண்டு செபி கொலை செய்வது பற்றி எப்படி பேசினார், போலீஸ் இதற்கு எப்படி அனுமதித்தனர் என்று கேள்வி எழுந்துள்ளது.

கேள்வி 2: எப்படி அனுமதித்தனர்?
அதேபோல் பொதுவாக ஒருவரை கைது செய்யும் போது போலீசார் வேறு யாரையும் ஜீப்பில் வர அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் கோடநாடு குற்றவாளிகளை தமிழ்நாடு போலீசார் கேரளாவில் கைது செய்த போது கூடவே செபி மற்றும் பல குண்டர்கள் வந்ததாக சந்தோஷ் சாமி தெரிவித்துள்ளார். அதேபோல் போலீஸ் வாகனத்திற்கு பின் போலீஸ் அல்லாத மூன்று வாகனங்கள் வந்ததாக சந்தோஷ் சாமி குறிப்பிட்டுள்ளார். இதில் குண்டர்கள் இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு எப்படி அனுமதி அளிக்கப்பட்டது என்று கேள்வி எழுந்துள்ளது. செபி அதிமுக பிரமுகர் சஜீவனின் சகோதரர் என்பது இன்னும் இதில் சந்தேகத்தை அதிகப்படுத்தி உள்ளது.

கேள்வி 3: மற்றவர்களின் சந்தேக மரணம்?
கனகராஜ் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டதாக செபி கூறியுள்ளார். கனகராஜ் மரணம் காரணமாக சயான் குடும்பத்தினர் உள்ளிட்ட மற்றவர்களின் மரணம் குறித்த சந்தேகமும் எழுந்துள்ளது. சயான் குடும்பத்தினர் கேரளாவில் விபத்து ஒன்றில் மரணம் அடைந்தனர். கடந்த 2017ல் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடந்து சில நாட்களில் சயானின் மனைவி மற்றும் மகன் விபத்தில் மரணம் அடைந்தனர். பாலக்காட்டில் நடந்த சாலை விபத்தில் இவரின் மனைவி மற்றும் மகன் பலியாகியினர்.

கோரிக்கை
கார் விபத்தில் இவர்கள் இருவரும் பலியாக சயான் மட்டும் காயங்களோடு பிழைத்தார். அப்போதே சயான் கண்ணீரோடு கொடுத்த பேட்டியில், இந்த விபத்து திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது. இது திட்டமிட்ட கொலை. என் மனைவி மகன் மரணம் குறித்து விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். இந்த நிலையில்தான் தற்போது கனகராஜ் மரணம் குறித்து சந்தோஷ் சாமி கொடுத்து இருக்கும் பேட்டி மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications